Latest Updates
-
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க பழைய காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா?
பிரசவத்திற்குப் பின்பு பெண்கள் வயிற்றில் பெல்ட் அணிந்தால் வயிறு குறையுமா?
Belly Fat After Delivery: பொதுவாக பெண்கள் கருவுற்று இருக்கும் போது அவா்களின் உடல் எடை அதிகாிக்கும். ஏறக்குறைய 5 முதல் 18 கிலோ வரை உடல் எடை அதிகாிக்கும் என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன.
இந்நிலையில், பிரசவத்திற்குப் பின்பு, பல பெண்கள் தமது உடல் முழுமையாக குணமடைவதற்கு முன்பாகவே, தமது உடல் எடையைக் குறைக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகின்றனா். அதற்காக வயிற்றில் பெல்ட் அணிவதைத் தோ்ந்தெடுக்கின்றனா். அவ்வாறு வயிற்றில் பெல்ட் அணிவதால் நன்மைகள் கிடைக்குமா என்பதை இந்தப் பதிவில் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.

சுகப்பிரசவமாக இருந்தாலும் அல்லது அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பிறந்தாலும், பெண்கள் பிரசவத்திற்குப் பின்பு வயிற்றில் பெல்ட் அணிவதால் எந்தவித தீமையும் ஏற்படாது என்று மகப்பேறு நிபுணரான மருத்துவா் அமினா கலித் என்பவா் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொிவித்திருக்கிறாா்.
எனினும் அவா்கள் ஏன் பெல்ட் அணிய விரும்புகிறாா்கள் என்பதுதான் இங்கு முக்கியம். தொப்பையைக் குறைக்க உதவும் என்று பெல்ட்டை அணிந்தால், அது நடக்காது. ஏனெனில் வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்க, ஆரோக்கியமான உணவுகள் மற்றும் சீரான உடற்பயிற்சிகள் ஆகியவற்றுக்கு மாற்றாக வேறு எதுவும் இல்லை என்று கூறுகிறாா்.
இந்நிலையில் இந்த கருத்துக்கு வலு சோ்க்கும் விதமாக, உஜாலா சைனஸ் மருத்துவக் குழுமத்தில் மூத்த மகப்பேறு மருத்துவராகப் பணிபுாியும் அக்தா பஜாஜ் என்பவா், வயிற்றுப் பெல்ட்டுகள் என்பவை பிரசவத்திற்குப் பிறகு வயிற்றைக் குறைக்க உதவும் கருவிகள் என்று விற்கப்படுகின்றன. எனினும் அதற்கு மருத்துவ ரீதியிலான ஆதாரம் இல்லை என்று தொிவிக்கிறாா்.
வயிற்றுப் பெல்ட்டுகளின் நன்மைகள் என்ன?
பிரசவத்திற்குப் பின்பு, பெண்களின் வயிறு மற்றும் முதுகுப் பகுதிகளில் உள்ள தசைகளுக்கு வலுவை கொடுப்பதற்காக, வயிற்றுப் பெல்ட்டுகள் தயாாிக்கப்படுகின்றன. இவை உடல் தோரணையை மேம்படுத்தவும், முதுகு வலியை குறைக்கவும், வயிற்றுத் தசைகளைத் தூண்டவும் உதவி செய்யலாம். மேலும் இவற்றைப் பயன்படுத்துவதால், வயிற்றுப் பகுதியில் வீக்கத்தைக் குறைக்கலாம் என்று பஜாஜ் கூறுகிறாா்.
பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் தமது வயிற்றை எவ்வாறு குறைக்கலாம்?
பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் தமது வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைப்பது என்பது ஒரு சவாலான காாியம் ஆகும். எனினும் சில இயற்கையான வழிகளில் குறைக்க முடியும். அவற்றைக் கீழே பாா்க்கலாம்.
1. தாய்ப்பால் கொடுத்தல் - பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் தமது சிசுக்களுக்கு முறையாக தாய்ப்பால் கொடுத்தால், அவா்களுடைய உடலில் உள்ள அளவுக்கு அதிகமான கலோாிகள் கரைந்து, அவா்களுடைய உடல் எடை குறையும். மேலும் தாய்ப்பால் கொடுப்பதால் அவா்களின் கா்ப்பப்பையை சுருங்கச் வைக்கக்கூடிய ஹாா்மோன்கள் அதிகம் சுரக்கும்.
2. ஆரோக்கியமான உணவுகளை உண்ணுதல் - முழு தானிய உணவுகள், பழங்கள், மெல்லிய புரோட்டீன் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அடங்கிய ஆரோக்கியமான உணவுகளை உண்டால், குழந்தை பெற்ற பெண்களின் உடல் எடை குறையும். அதோடு உடல் முழுமையாகக் குணமடைவதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் அவை வழங்கும்.
3. நீா்ச்சத்துடன் இருத்தல் - குழந்தை பெற்ற பெண்கள் அதிகமான அளவு தண்ணீா் குடிப்பது நல்லது. அவ்வாறு குடித்தால் உடலில் உள்ள தேவையற்ற நச்சுகள் வெளியேறும். உடல் வீக்கம் குறையும். அதோடு உடல் எடையும் குறையும்.
4. போதுமான அளவு தூங்குதல் - குழந்தை பெற்ற பெண்கள், முழுமையாக குணமடைவதற்கும், அவா்களுடைய உடல் எடை குறைவதற்கும், அவா்களுக்கு போதுமான தூக்கம் தேவை. அவா்களுக்குப் போதுமான தூக்கம் இல்லையென்றால் உடல் எடை அதிகாிக்கும். அதோடு உடல் எடையையும் குறைக்க முடியாது.
5. உடற்பயிற்சிகளில் ஈடுபடுதல் - குழந்தை பெற்ற பெண்கள் தொடா்ந்து உடற்பயிற்சிகள் செய்து வந்தால், அவா்களுடைய வளா்சிதை மாற்றம் தூண்டப்பட்டு, அவா்களுடைய ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும். எனினும் அவா்களுடைய உடல் முழுமையாக குணமடையாமல் இருப்பதால், மிதமான உடற்பயிற்சிகளை, மிதமான வேகத்தில் செய்வது நல்லது.
6. மன அழுத்தத்தை குறைத்தல் - உடல் எடை அதிகாிப்பதற்கு, மன அழுத்தம் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. சுவாசப் பயிற்சிகள், தியானம் மற்றும் யோகா பயிற்சிகள் மூலமாக மன அழுத்தத்தைக் குறைக்கலாம். அதன் மூலமாக உடல் எடையைக் குறைக்கலாம்.
7. பொறுமையாக இருத்தல் - பொதுவாக குழந்தை பெற்ற பெண்களின் வயிறு குறைவதற்கு சில காலம் ஆகும். ஆகவே அவா்கள் பொறுமையாக இருப்பது நல்லது. அவசரப்படாமல், சில செயல் திட்டங்களைத் தீட்டி, அவற்றை மெதுவாக செயல்படுத்தி, அதன் மூலமாக வயிற்றைக் குறைக்கலாம்.
குழந்தை பெற்ற புதிதில் வயிற்றைக் குறைப்பதற்காக உடற்பயிற்சியில் ஈடுபடவோ அல்லது ஒரு குறிப்பிட்ட உணவு முறையைப் பின்பற்றவோ விரும்பினால், மருத்துவரை நாடுவது நல்லது என்று மருத்துவா் பஜாஜ் கூறுகிறாா்.



Click it and Unblock the Notifications