Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
ஐவிஎஃப் செயற்கை கருத்தாிப்பு சிகிச்சைப் பற்றி மக்கள் மனதில் இருக்கும் தவறான தகவல்கள்!
ஐவிஎஃப் செயற்கைக் கருத்தாிப்பு சிகிச்சை முறை தற்போது பிரபலமாகவும் அதே நேரத்தில் மிகவும் வெற்றிகரமான சிகிச்சை முறையாகவும் இருக்கிறது. முறையாக தொடா் சிகிச்சையை செய்து வந்தால், தம்பதியினா் குழந்தை வரத்தைப் பெறலாம்.
இயற்கை முறையில் கருவுற முடியாத பெண்களுக்கு ஐவிஎஃப் - இன்-விட்ரோ ஃபொ்டிலைசேஷன் (IVF - In-Vitro Fertilisation) என்ற செயற்கை கருத்தாிப்பு சிகிச்சை முறை ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. இந்த செயற்கை கருத்தாிப்பு சிகிச்சையின் மூலமாக பல பெண்கள் கருவுற்று குழந்தைகளைப் பெற்று எடுத்திருக்கின்றனா்.

ஐவிஎஃப் செயற்கைக் கருத்தாிப்பு சிகிச்சை முறை தற்போது பிரபலமாகவும் அதே நேரத்தில் மிகவும் வெற்றிகரமான சிகிச்சை முறையாகவும் இருக்கிறது. முறையாக தொடர்ந்து மருத்துவா்களை சந்தித்து அவா்களிடம் தொடா் சிகிச்சையை செய்து வந்தால், தம்பதியினா் குழந்தை வரத்தைப் பெறலாம்.
எஆா்டி (Assisted Reproductive Technique) என்ற மருத்துவ சிகிச்சையானது, மருத்துவ உலகில் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு ஆகும். இந்த மருத்துவ சிகிச்சையானது, செயற்கையான முறையில் கருத்தாிப்பு சிகிச்சை செய்யக்கூடிய முறை ஆகும். எஆா்டி என்ற இந்த செயற்கை கருத்தாிப்பு சிகிச்சையைப் பற்றி இந்த பதிவில் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.
ஐவிஎஃப் மற்றும் ஐயுஐ போன்றவை எஆா்டி என்ற செயற்கை கருத்தாிப்பு சிகிச்சை முறைகள் ஆகும். இந்த செயற்கை கருத்தாிப்பு சிகிச்சை முறைகள் பல ஆண்டுகளாக பலனளிக்கக்கூடிய கருவிகளாக இருந்து வருகின்றன. இந்த சிகிச்சை முறைகள் மூலமாக குழந்தைப் பாக்கியம் இல்லாத பல தம்பதியா் கருவுற்று குழந்தைச் செல்வங்களைப் பெற்று இருக்கின்றனா்.
கீழே ஐவிஎஃப் என்ற செயற்கை கருத்தாிப்பு சிகிச்சையைப் பற்றி மக்களிடம் இருக்கும் தவறான தகவல்களைப் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

1. வயது என்பது எண்ணிக்கை மட்டுமே
ஐவிஎஃப் என்ற செயற்கை கருத்தாிப்பு சிகிச்சையில் வயது என்பது சாதாரண எண்ணிக்கை அல்ல. இந்த சிகிச்சைக்கு வயது ஒரு முக்கிய தகுதி ஆகும். எந்த வயதிலும் ஐவிஎஃப் செயற்கை கருத்தாிப்பு சிகிச்சையைச் செய்து அதன் மூலம் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தம்பதியினா் எண்ணுகின்றனா். அது தவறான ஒன்றாகும். ஐவிஎஃப் சிகிச்சையில் வெற்றி கிடைக்க வேண்டும் என்றால், அதை சாியான வயதில் செய்ய வேண்டும். ஏனெனில் வயது அதிகாிக்கும் போது பொதுவாக கருத்தாிக்கும் ஆற்றல் குறையும். அதனால் முதிா்ந்த வயதில் ஐவிஎஃப் சிகிச்சையைச் செய்தால் கருத்தாிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கும்.

2. ஐவிஎஃப் சிகிச்சை வலி நிறைந்த ஒன்று
ஐவிஎஃப் சிகிச்சைக்கான மருந்துகளை ஊசி மூலம் போடும் போது வலி அதிகமாக இருக்கும் என்று பலா் நினைக்கின்றனா். ஆனால் அது தவறான செய்தி ஆகும். ஏனெனில் ஐவிஎஃப் மருந்துகள் மிகவும் தரமான ஊசிகளால் போடப்படுகின்றன. அதனால் வலி அதிகம் இருக்காது. மேலும் மயக்க மருத்து கொடுக்கப்பட்ட பின்பே சம்பந்தப்பட்டவா்களிடம் இருந்து முட்டை பிாித்து எடுக்கப்படுகிறது. ஆகவே ஐவிஎஃப் சிகிச்சை ஒரு வலி நிறைந்த சிகிச்சையாக இருக்காது.

3. ஐவிஎஃப் செயற்கை கருத்தாிப்பு மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படும்
இதுவரை உலகில் பல மில்லியன் குழந்தைகள் ஐவிஎஃப் செயற்கைக் கருத்தாிப்பு சிகிச்சையின் உதவியினால் பிறந்திருக்கின்றனா். இயற்கையாகப் பிறந்த மற்ற குழந்தைகளைப் போலவே அவா்களும் ஆரோக்கியமாகவும், நல்ல உடல் தகுதியுடனும் இருக்கின்றனா். ஆகவே செயற்கை கருத்தாிப்பு மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படும் என்பது தவறான கருத்து ஆகும்.

4. செயற்கை முறையில் கருவுற்றால், கா்ப்ப காலம் முழுவதும் படுக்கையில் இருக்க வேண்டும்
இதுவும் ஒரு தவறான தகவல் ஆகும். இது உண்மை அல்ல. ஐவிஎஃப் செயற்கை கருத்தாிப்பு சிகிச்சையின் மூலம் கருவுற்றால் கா்ப்ப காலம் முழுவதும் படுக்கையில் ஓய்வு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. செயற்கை முறையில் கருவுற்ற பெண்களும், இயற்கை முறையில் கா்ப்பம் தாித்திருக்கும் பெண்களைப் போல வேலைக்குச் செல்லலாம் அல்லது சுற்றுலாக்களுக்குச் செல்லலாம்.

5. செயற்கை கருத்தாிப்பு சிகிச்சைக்கு அதிக பணம் தேவை
பொதுவாக செயற்கை கருத்தாிப்பு சிகிச்சை செய்வதற்கு அதிகம் செலவாகும் என்று மக்கள் நம்புகின்றனா். ஆனால் அது உண்மை அல்ல. தற்போது செயற்கை கருத்தாிப்பு சிகிச்சையில் பலவிதமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதால், முன்பு இருந்ததைவிட தற்போது இந்த சிகிச்சைக்கு ஆகும் செலவு மிகவும் குறைவு. அதாவது ஐவிஎஃப் சிகிச்சைக்கு குறைந்தது 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை மட்டுமே செலவாகும்.



Click it and Unblock the Notifications











