Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
செயற்கை முறையில் கர்ப்பமானால் கர்ப்ப கால நீரிழிவு நோய் வரும் அபாயம் இருக்கிறதாம் - அதிர்ச்சி தகவல்!
வெளிச் சோதனை முறை கருத்தரிப்பு (IVF) மூலம் கருத்தரிக்கும் பெண்களுக்கு கர்ப்ப கால நீரிழிவு நோய் வருவது கண்டறியப்பட்டுள்ளது.
இன்றைய நவீன கால மருத்துவ முறையில் கருத்தரிப்பதற்கு என்று ஏராளமான சிகச்சை முறைகள் உள்ளன. இந்த சிகிச்சை முறைகளின் மூலம் குழந்தை இல்லாத தம்பதிகள் கூட தற்போது குழந்தை பெற்றுக் கொள்ள முடிகிறது. ஆண், பெண் இருவர்களில் யாரோ ஒருவருக்கு பிரச்சனை என்றால் கூட நீங்கள் இந்த மாதிரியான செயற்கை கருத்தரிப்பை நாடிச் செல்லலாம்.

ஆனால் இந்த மாதிரியான செயற்கை முறைகளில் சில பக்க விளைவுகள் ஏற்படுகின்றன என்று ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வெளிச் சோதனை முறை கருத்தரிப்பு (IVF) மூலம் கருத்தரிக்கும் பெண்களுக்கு கர்ப்ப கால நீரிழிவு நோய் வருவது கண்டறியப்பட்டுள்ளது. அதைப் பற்றிய விரிவான தொகுப்பு தான் இந்த கட்டுரை.

IVF கர்ப்பம் மற்றும் கர்ப்ப கால நீரிழிவு நோய்க்கான தொடர்பு
IVF கருத்தரிப்பு மிக நுட்பமான நவீன முறையாகும். 1978 இல் தான் இந்த IVF கருத்தரிப்பு தொடங்கியது. அதன் பின்னர் தான் உலகளவில் 8 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் பிறந்தன. IVF தொழில்நுட்பத்துடன் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சமீபத்திய ஆய்வின் படி , IVF முறை மூலம் கர்ப்பமாகும் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கர்ப்ப கால நீரிழிவு நோய்க்கு ஆளாகின்றனர் என்று ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆய்வறிக்கை
புதிய ஆராய்ச்சியின் படி, IVF கருவுறுதல் சிகிச்சையைப் பெறும் பெண்களில் 50% க்கும் அதிகமானோர் கர்ப்ப கால நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆராய்ச்சியை தெசலோனிகியின் என்ற அரிஸ்டாட்டில் பல்கலைக்கழகம் (கிரீஸ்) செய்துள்ளது. இந்த ஆய்வில் IVF அல்லது இன்ட்ராசைட்டோபிளாஸ்மிக் ஸ்பெர்ம் இன்ஜெக்ஷன் (ஐ.சி.எஸ்.ஐ) நுட்பங்களுடன் கர்ப்பமான 63,760 பெண்கள் இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன.
குறிப்பு : இந்த அறிக்கை டெய்லி மெயிலில் வெளியிடப்பட்டுள்ளது.

IVF மற்றும் நீரிழிவு நோய்க்கும் என்ன தொடர்பு?
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, IVF ஏன் கர்ப்பத்திற்குப் பிறகு நீரிழிவு நோயை அதிகரிக்கிறது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று தெரிவித்து உள்ளனர். ஆனால் IVF சிகிச்சையின் போது நீரிழிவு நோயை அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. காரணம் பெண்கள் கர்ப்பமாவதை வெற்றிகரமாக்க IVF கருவுறுதல் சிகிச்சையின் போது திடீரென பயன்படுத்தப்படும் வெவ்வேறு விதமான ஹார்மோன்கள் இதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும் இது குறித்து அவர்கள் கூறுகையில் நீரிழிவு நோய்க்கான ஐரோப்பிய சங்கத்தின் வருடாந்திர கூட்டத்தில் இந்த ஆய்வுகள் விரைவில் நடைபெறும் என்றும் தெரிவித்து உள்ளனர்.

கர்ப்ப கால நீரிழிவு நோய் அல்லது ஜி.டி.எம் எவ்வளவு ஆபத்தானது?
கர்ப்ப கால நீரிழிவு என்பது கர்ப்ப காலத்தில் பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதாகும்.பெண்கள் பொதுவாக கர்ப்பத்தின் 5 வது மாதத்தில் இருந்து நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான பெண்களில், நீரிழிவு பிரச்சினை பிரசவத்திற்குப் பிறகு முடிவடைகிறது மற்றும் உடல் சாதாரணமாக பழைய நிலைக்கு வரத் துவங்குகிறது. ஆனால் சில சமயங்களில் இந்த கர்ப்ப கால நீரிழிவு நோய் ஆபத்தை விளைவிக்கக் கூடும். கர்ப்ப கால நீரிழிவு ஆபத்தானது (சில நேரங்களில்) ஏனெனில் இது கருச்சிதைவு, பலவீனமான அல்லது ஆரோக்கியமற்ற குழந்தை, முன்கூட்டிய பிரசவம் அல்லது தீவிர சூழ்நிலைகளில் தாயின் இறப்புக்கு கூட வழிவகுக்க நேரிடும்.

கர்ப்ப கால ஜி.டி.எம் சிகிச்சை
கர்ப்ப கால நீரிழிவு நோயானது கர்ப்பமான காலத்திலும் மற்றும் பிரசவத்தின் போதும் சிரமத்தை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, பெண்கள் டாக்டரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளையும், இன்சுலின் அளவையும் சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இது தவிர, உணவுக் கட்டுப்பாட்டிலும் கூட கர்ப்பகால நீரிழிவு நோயின் அபாயத்தைக் நீங்கள் குறைக்கலாம். கர்ப்ப காலத்தில், நீரிழிவு உங்கள் குழந்தையை பாதித்ததா இல்லையா என்பதை கண்காணிக்க நீங்கள் பல அல்ட்ராசவுண்ட் சோதனைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். பெரும்பாலும், கர்ப்ப கால நீரிழிவு நோய்க்குப் பிறகு பிறந்த குழந்தைகள் அதிக எடை கொண்டவர்களாக இருப்பார்களாம்.



Click it and Unblock the Notifications