Latest Updates
-
ராகுவின் ஆசியால் ஏப்ரல் 2027 வரை இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
கேது சிம்ம ராசிக்குள் செல்வதால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஒருடைம் பசங்க லன்ச் பாக்ஸ்-க்கு இப்படி தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
கொங்கணி சுண்டல் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல முடி தான் டேமேஜ் ஆகும்! உஷார்.. -
பூமியின் உண்மையான எடை எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி கிலோவா? ஷாக் ஆகாதீங்க -
கல்யாண வீட்டு சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ஆண்களிடம் எப்போதும் கடுமையாக நடந்து கொள்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உணவு உண்ட பின் 90% மக்கள் செய்யும் தவறுகள் இதான்.. நீங்களும் இத பண்றீங்களா-ன்னு பாருங்க.. -
பெங்காலி முட்டை புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும்
ஆண்களில் குடும்பக் கட்டுப்பாட்டிற்கு பின் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அதன் விளைவுகள்!
குடும்பக் கட்டுப்பாடு என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே நடத்தப்படலாம். பொதுவாக பெரும்பான்மையான இடங்களில் பெண்களே குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்கின்றனர்; ஆண்களில் மிகச்சிலரே இதை செய்து கொள்
குடும்பக் கட்டுப்பாடு என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே நடத்தப்படலாம். பொதுவாக பெரும்பான்மையான இடங்களில் பெண்களே குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்கின்றனர்; ஆண்களில் மிகச்சிலரே இதை செய்து கொள்கின்றனர். பெண்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்தால் அவர்களுக்கு வழிகாட்ட, என்ன மாற்றங்கள் நிகழும் என்பதை பல பதிப்புகள் எடுத்துரைத்து இருக்கின்றன.

ஆனால், ஆண்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டால், அவர்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது பற்றிய பதிப்புகள் மிகச்சிலவே. ஆண்களில் குடும்பக் கட்டுப்பாடு செய்த பின் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பக்க விளைவுகள் குறித்து இங்கு படித்தறியுங்கள்.

வாசக்டமி என்றால் என்ன?
வாசக்டமி என்பது ஆண்களில் குடும்பக் கட்டுப்பாடு செய்யும் அறுவை சிகிச்சையின் அறிவியல் அல்லது மருத்துவ பெயர் ஆகும். ஆண் இந்த சிகிச்சை செய்து கொள்வதால், குழந்தை பிறப்பு தடுக்கப்படுகிறது; மேலும் இந்த சிகிச்சை செய்த ஆணின் காதலி அல்லது மனைவி போன்றோர் கர்ப்பம் அடைய முடியாது. இந்த சிகிச்சையில் ஆணின் பிறப்புறுப்பு பகுதியில் விந்து வெளிப்படுவது தவிர்க்கப்படுகிறது; இதை மருத்துவர்கள் ஆண் ஸ்டெர்லிசேஷன் என்று குறிப்பிடுவர்.

அறுவை சிகிச்சை
இந்த அறுவை சிகிச்சை ஆணின் பிறப்புறுப்பில் விந்துக்களை கடத்தும் குழாயை அறுத்து, விந்து கடத்துதலை தடை செய்வதன் மூலமாக நிறைவேற்றப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை முடிந்த பின் குறைந்தது 1 வாரம், முடிந்தால் 1 மாத காலம் என ஆண்கள் நன்கு ஓய்வு எடுக்க வேண்டும். மேலும் அறுவை சிகிச்சை முடிந்த பின் பிறப்புறுப்பு பகுதியில் அதிகமான வலி மற்றும் எரிச்சல் இருக்கும்; இந்த உணர்வுகள் அடுத்த 1 நாள் முழுதும் நீடிக்கலாம்; அந்த சமயங்களில் பிறப்புறுப்பை அரித்து விடாமல் கைகளை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள வேண்டும்.

உடலுறவு கொள்ளலாமா?
அறுவை சிகிச்சை முடிந்த பின், காயங்கள் அனைத்தும் ஆறி உடல் பழைய நிலையை எட்டிய பின் தராளமாக நீங்கள் உடலுறவு கொள்ளலாம்; ஆனால் அதற்கு முன் சற்று உடல் தெரியதும் மருத்துவரிடம் சென்று ஒருமுறை பரிசோதித்து கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த பரிசோதனையை நீங்கள் செய்யத் தவறினால், உடலுறவு கொண்ட பின் கருத்தரிப்பு நிகழும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும். அதனால் ஒருமுறை கண்டிப்பாக மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்த பின் உடலுறவு கொள்ளலாம்.

ரிவர்ஸ் செய்யலாமா?
அறுவை சிகிச்சை செய்த பின்னரும் பிறப்புறுப்பில் இருந்து திரவம் வெளிப்படும்; ஆனால் அதில் விந்துக்கள் இருக்காது. அறுவை சிகிச்சைக்கு பின், பிறப்புறுப்பு திரவம் விந்துக்களை கொண்டுள்ளதா என்று அறியவே இந்த பரிசோதனை செய்யப்படுகிறது.
சிலருக்கு அறுவை சிகிச்சை செய்து முடித்த பின்,இந்த நிலை வேண்டாம், நான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தோன்றலாம். அந்நிலையில் இந்த சிகிச்சையை மீண்டும் பழைய நிலைக்கு அதாவது ரிவர்ஸ் ப்ரோஸெஸ் செய்ய முடியுமா என்றால், அது மிக மிகக் கடினம். ஆகையால், முழுமனதாக இனி விந்துகளின் அவசியம் தேவையில்லை. பெற்ற குழந்தைகள் போதும் என்று தோன்றினால் மட்டும் இந்த அறுவை சிகிச்சையை செய்து கொள்ளவும்.

பக்க விளைவுகள்
இந்த அறுவை சிகிச்சை நிகழ்ந்த பின் ஆணின் பிறப்புறுப்பில்,
- ஷொர்ட் டேர்ம் மற்றும் கிரோனிக் வலி - மேற்கொண்ட அறுவை சிகிச்சை காரணமாக தோன்றும் வலி. இது ஓரிரு நாட்களில் அல்லது பல நாட்கள் வரை நீடிக்கலாம்; வலியின் அளவு ஒருவருக்கொருவர் மாறுபடும்.
- வீக்கம், எரிச்சல், அரிப்பு - அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இடத்தில வீக்கம் மற்றும் எரிச்சல் ஏற்படலாம்; அரிப்பு ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்படலாம்.
- நோய்த்தொற்றுகள் - சிகிச்சை முடிந்த பின் பிறப்புறுப்பை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்; நோய்த்தொற்றுகள் எதுவும் தாக்காமல், முக்கியமாக ஈஸ்ட் தொற்று போன்றவை ஏற்படாமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.
போன்ற விளைவுகள் சாதாரணமாக ஏற்பட்டு விடலாம்.

அசாதாரண விளைவுகள்
கீழ்கண்ட அசாதாரண விளைவுகளில் அனைவர்க்கும் ஏற்படாது; ஆனால் யாரேனும் ஒருசிலருக்கு ஏற்படலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
4. ஹெமடோமா - சிகிச்சை நடந்த இடத்தில் இரத்தக்கசிவு, இரத்தக் குழாய்களில் கசிவு போன்றவை உண்டாகலாம்.
5. எபிடெமிடிஸ் - பிறப்புறுப்பில் தொடர்ந்த அரிப்பு ஏற்படலாம்.
6. ஆன்டிபாடீஸ் - பிறப்புறுப்பில் நோய்த்தொற்றுகளை உண்டாக்கும் கிருமிகள் உண்டாகலாம்.
7. ஸ்பெர்ம் கிரேனுலோமஸ் - அறுவை சிகிச்சை நிகழ்ந்த விந்துக்குழாய்களில் இருந்து, நிறுத்தப்பட்ட விந்து வெளிப்பட்டு சிறு சிறு கட்டிகளாக மாறுவது ஸ்பெர்ம் கிரேனுலோமஸ் என்றழைக்கப்படுகிறது.
8.கர்ப்பம் - இத்தனை கஷ்டப்பட்டு சிகிச்சை செய்து கொண்ட பின்னரும், சில சமயங்களில் விந்தணு வெளிப்பட்டு, உங்கள் துணை கர்ப்பம் தரிக்க நேரிடலாம்.

பாலியல் நோய்களை தடுக்குமா?
இந்த சிகிச்சை செய்து கொண்டதால் உடலில் பாலியல் நோய்கள் ஏற்படாதா? அல்லது இந்த சிகிச்சை பாலியல் நோய்களை முற்றிலுமாக தடுத்து விடுமா என்றால், கண்டிப்பாக இல்லை. இது கர்ப்பத்தை மட்டுமே தடுக்கும்; பாலியல் நோய்களை அல்ல. பாலியல் நோய்கள் உடலில் ஏற்படாமல் இருக்க விரும்பினால் காண்டம் போன்ற கருத்தடை சாதனங்களை பயன்படுத்தி கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications
