Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
ஆண்களின் மலட்டுத் தன்மையை சரிசெய்யும் காய்கறிகள்!!!
நகரங்களில் வசிக்கும் ஆண்களிடம் மலட்டுத் தன்மை அதிகரித்து வருகிறது. இதற்கு அறியாமையும், நெருக்கடியான வாழ்க்கை முறையையும் பின்பற்றி வருவதே காரணம் என்பதை மறுக்க முடியாது. இது போன்ற நெருக்கடியான வாழ்க்கை முறையால் ஆண்களிடம் மலட்டுத் தன்மை உருவாகி அவர்களுடைய துன்பங்கள் அதிகரிக்கின்றன. முறையற்ற உணவு முறை மற்றும் மோசமான வேலை நேரங்கள் ஆகியவை ஆண்களுக்கு பெறுமளவு மன அழுத்தம் கொடுப்பதுடன், அதன் தொடர்ச்சியாக அவர்களுடைய ஆரோக்கியத்திற்கு உலை வைக்கவும் செய்கின்றன. இந்த போட்டி நிறைந்த உலகத்தின் வேகத்தில், ஆண்கள் பலரும் தங்களுடைய அடிப்படை சுகாதாரத்தையும், அதன் காரணமாக வரும் மலட்டுத் தன்மையையும் பாதிப்பதை உணருவதில்லை.
ஆரோக்கியமான வாழ்வு முறையையும், ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ளுவதன் மூலமும் ஆண்கள் மலட்டுத் தன்மையை தவிர்க்க முடியும். உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வருவதால் உடலை உறுதிப்படுத்தி வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தையும், சுகாதாரத்தையும் நிலைநாட்ட முடியும். புகைப் பழக்கமும் மலட்டுத்தன்மை வர முக்கியமான காரணமாக உள்ளது. புகைப் பழக்கத்தினால் மலட்டுத் தன்மையும், செயல்பாட்டில் பயமும் ஏற்படும். மேலும், அதீதமான அளவிற்கு ஆல்கஹால் குடிப்பதும் மலட்டுத் தன்மையை உருவாக்கும். சில நேரங்களில் சுகாதாரமற்ற உணவு, உயிரணுக்களின் தரம் மற்றும் அவற்றின் எண்ணிக்கை ஆகியவற்றாலும் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது.
வைட்டமின் சி மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிறைந்திருக்கும் உணவை உட்கொள்வதன் மூலம் மலட்டுத் தன்மையை குறைக்கவும், செயல்பாட்டை உத்வேகப்படுத்தவும் முடியும். வைட்டமின்களான ஏ, சி, ஈ மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை தரமான உயிரணுக்கள் அதிக எண்ணிக்கையில் உற்பத்தியாக உதவி செய்கின்றன. இந்த வைட்டமின்களில் பெரும்பாலானவை பச்சைக் காய்கறிகள், ஆரஞ்சு, தக்காளி, பீன்ஸ் போன்றவற்றில் கிடைக்கின்றன. இந்த காய்கறிகளை அதிகளவில் தொடர்ந்து உட்கொண்டு வருவதன் மூலம், உங்களுக்கு மலட்டுத் தன்மை வருவதை பெருமளவு குறைக்க முடியும்.

கீரைகள்
உடலுக்கு மிகவும் அவசியமான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் பசுந்தழைகளில் பெருமளவு குவிந்துள்ளன. தாதுக்கள் நிரம்பியதாக உள்ள கேல், பசலைக் கீரை, ஸ்விஸ் சார்ட், கடுகு இலைகள் ஆகியவற்றில் உள்ள அவசியமான ஊட்டச்சத்துக்கள் மலட்டுத் தன்மையை குறைக்கவும் மற்றும் உயிரணுக்களின் திறனை அதிகரிக்கவும் செய்கின்றன.

கேரட்
கேரட் சாப்பிடுவது பார்வையை தெளிவுபடுத்த உதவுவது மட்டுமல்லாமல், ஆண்களின் மலட்டுத் தன்மையை குறைக்கவும் உதவுகின்றன. கரு முட்டையை நோக்கி உயிரணுக்களை எடுத்துச் செல்லும் சத்துக்கள் கேரட்டில் மிகவும் அதிகளவு உள்ளதாக ஹார்வார்டு பல்கலைக் கழகத்தின் பொது சுகாதார துறையினரின் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

ஆரஞ்சு
ஆண்களின் கருத்தரிக்கும் திறனை அதிகப்படுத்துவதில் அடர் வண்ண காய்கறிகள் மற்றும் பழங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு நிற காய்கறி அல்லது பழத்திற்கும் குறிப்பிட்ட வகையான சுகாதார பலன்களும், கருத்தரிக்கும் திறனை ஊக்கப்படுத்தும் சத்துக்களும் உள்ளன. ஆக்ஸிஜன் எதிர்பொருட்களும், வைட்டமின் C-யும் நிரம்பியிருக்கும் ஆரஞ்சுகள் செயல்பாட்டு உத்வேகத்தையும், கருத்தரிக்கும் திறனையும் மேம்படுத்த பெருமளவு பயன்படுகின்றன.

தானியங்கள்
வெள்ளை ரொட்டிகள் அல்லது வெள்ளை அரிசிகளை தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக முழு தானியங்களை உணவாக எடுத்துக் கொள்ளும் போது, அது இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தச் செய்கின்றது. உங்களுடைய இன்சுலின் முறையாக செயல்படும் போது, ஹார்மோன் அளவுகள் மிகவும் சமநிலையுடன் காணப்படும். இதன் மூலம் உங்களுடைய கருத்தரிக்கும் தன்மை அதிகரிக்கும்.

வெண்ணெய் பழம் மற்றும் பாதாம்
உங்களுடைய உணவுடன் வெண்ணெய் பழம் மற்றும் பாதாம் கொட்டைகளை சேர்த்துக் கொள்வது நீண்ட கால அளவில் உங்களுக்கு மிகவும் உதவும். இந்த உணவுகளில் காணப்படும் கொழுப்புகள் உடலுக்கு மிகவும் ஏற்றவையாகும். இவை உங்கள் உடலில் உள்ள இன்சுலின் முறையாக செயல்படவும், அதன் மூலமாக ஹார்மோன்கள் சமநிலைப்படவும் உதவி செய்து, உங்களுடைய கருத்தரிக்கும் திறனை அதிகப்படுத்துகின்றன.

பீன்ஸ் மற்றும் பசலைக் கீரை
இயற்கையாகவே கருத்திரிக்கும் திறனை அதிகரிக்கும் போலிக் அமிலம் நிறைந்திருக்கும் உணவுளாக பீன்ஸ் மற்றும் பசலைக் கீரை ஆகியவை உள்ளன. ஆண்கள் தங்களுடைய உயிரணுக்களின் எண்ணிக்கை மற்றும் அடர்த்தியை அதிகரிக்க போலிக் அமிலம் தேவைப்படுகிறது. போலேட் நிரம்பியுள்ள உணவுகளை அதிகம் உட்கொள்வதன் மூலமாக கருத்தரிக்கும் தன்மையை அதிகரிக்கும் போலிக் அமிலம் இயற்கையாகவே கிடைக்கும்.

முறை கட்டிய தானியங்கள் மற்றும் நாற்றுகள்
சமைக்காத காய்கறிகள் அல்லது நாற்றுகளில் உள்ளதை விட 100 மடங்கு அதிகளவிலான என்ஸைம்களை முறை கட்டிய தானியங்கள் கொண்டிருக்கின்றன. ஆண்களின் கருத்தரிக்கும் தன்மையை அதிகப்படுத்த ஆக்ஸிஜன் எதிர்பொருட்களும், புரதங்களும் அதிக அளவில் தேவைப்படுகின்றன.

ஸ்ட்ராபெர்ரி
சுவை மிக்க ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி மட்டுமல்லாமல், ஆண்களின் மலட்டுத் தன்மையை நீக்கும் சத்துக்களும் உள்ளன. தங்களுடைய கருத்தரிக்கும் தன்மையை அதிகப்படுத்த நினைக்கும் ஆண்கள் தினமும் 90 கிராம் அளவிற்கு இந்த சத்துக்களை உட்கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications