Latest Updates
-
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால் போதும்… வாஸ்து தோஷம் நீங்கி பணவரவு கொட்டும்! -
உங்களை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்யாதீர்கள்! உறவில் விரிசல் ஏற்படுத்தும் அந்த ஒரு விஷயம் இதுதான்! -
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள் -
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சூரியன்-சுக்கிரன் இணைப்பால் ஜூன் 08-க்கு பின் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 06 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது!
உங்க குழந்தைய தூங்க வைக்க ரொம்ப கஷ்டம் படுறீங்களா? அப்போ இத பண்ணுங்க.
தூங்குவதற்குக் கூறிய நேரம் வந்துவிட்டால் அதைக் குழந்தைகளுக்கு உணர்த்தும் விதத்தை நீங்கள் முதலில் தொடர வேண்டும். பெற்றோர்கள் பெரும்பாலும் குழந்தைகளைத் தூங்க வைப்பதற்கு மூன்று முறைகளைப் பின்பற்றி வருகிற
குழந்தைகளைத் தூங்க வைப்பதுதான் அம்மாக்களின் பெரிய பிரச்சனையாக இருக்கும். இரவு முழுவதும் முழித்துக் கொண்டு அம்மாவைத் தொந்தரவு செய்யும் குழந்தைகளும் உள்ளார்கள். அவர்களைத் தூங்க வைத்துப் பெற்றோர்கள் தூங்குவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். அதிலும் வேலைக்குச் செல்லும் அம்மாக்கள் என்றால் இன்னும் கஷ்டம் தான். இரவு முழுவதும் குழந்தைகளுடன் போராடி அவர்களைத் தூங்க வைத்து விட்டுப் பெற்றோர்கள் தூங்குவதற்குள் விடிந்து விடும். எனவே, குழந்தைகளைத் தூங்க வைத்தால் போதும் என்று பெற்றோர்கள் நினைக்கிறார்கள். ஆனால் குழந்தைகள் ஆரோக்கியமான தூக்கத்தை மேற்கொள்கிறார்களா என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது 4 மாத குழந்தைகள் முதல் ஆரோக்கியமான தூக்கப் பழக்கத்தை ஏற்படுத்துவது பெற்றோரின் கடமையாகும். உங்கள் குழந்தை இரவில் அதிக நேரம் தூங்குவதுதான் ஆரோக்கியமான ஒன்று. குழந்தைகள் ஒரு நாளைக்கு எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும் என்று கால அளவு உள்ளது அதன் படி குழந்தைகள் தூங்கும் நேரத்தை அட்டவணைப் படுத்திக்கொள்ளுங்கள். குழந்தை தூங்க ஆரமிக்கும் போதே அவர்களைப் படுக்கையில் போடுவது அவசியம். அவர்கள் முழு தூக்கத்தில் இருக்கும் போது தொந்தரவு செய்யக் கூடாது.

குழந்தையின் தூக்கம்
தூங்குவதற்குக் கூறிய நேரம் வந்துவிட்டால் அதைக் குழந்தைகளுக்கு உணர்த்தும் விதத்தை நீங்கள் முதலில் தொடர வேண்டும். பெற்றோர்கள் பெரும்பாலும் குழந்தைகளைத் தூங்க வைப்பதற்கு மூன்று முறைகளைப் பின்பற்றி வருகிறார்கள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதாவது குழந்தைகளைக் குளிக்க வைத்துத் தூங்க வைப்பது, உணவு கொடுத்துத் தூங்க வைப்பது மற்றும் பாடல் பாடி தூங்க வைப்பது இந்த முறைகளைத் தான் பின்பற்றி வருகிறார்கள். மற்றும் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மசாஜ் செய்தும், நல்ல மென்மையான இசை கொண்ட ஒலிகளை இசைத்தும் தூங்க வைக்கிறார்கள். இவற்றில் எது உங்கள் குழந்தை தூங்குவதற்கு உதவி செய்கிறது என்பதைக் கண்டு பிடியுங்கள். அதனைப் பின்பற்றி குழந்தைகளைத் தூங்க வையுங்கள்.

அமைதியான சூழல்
குழந்தைகள் தூங்குவதற்கு முதலில் அமைதியான சூழலை உருவாக்குங்கள். எப்படி சில இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்கள் அமைதியான சூழலில் தூங்க விரும்புகிறார்களோ அதே போல் குழந்தைகளும் அமைதியான சூழலில் தூங்குவதைத் தான் எதிர் பார்க்கிறார்கள். எனவே குழந்தைகள் தூங்குவதற்கு அமைதியான, இரைச்சல் இல்லாத இடத்தை தேர்வு செய்யுங்கள். மேலும் குழந்தைகள் தூங்கும் மெத்தைகள் உறுதியாகவும் குழந்தைகளுக்கு ஏற்றதா என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். அத்துடன் குழந்தைகள் தூங்கும் அறை மிகப் பெரிய வசதியுடன் இருக்க வேண்டிய அவசியமில்லை ஆனால் சரியான வெப்பநிலை மற்றும் காற்றோற்றத்துடன் இருக்க வேண்டும். அதேபோல் குழந்தைகள் உறங்கும் போது இரவில் அறை இருட்டாக இருக்கக் கூடாது. ஒரு சிறிய மின்விளக்காவது இருக்க வேண்டும்.

மகிழ்ச்சியான வயிறு
உண்மை என்னவென்றால் வயிறு நிறைந்து விட்டால் தானாகவே தூக்கம் வந்துவிடும். ஆரோக்கியமான தூக்கத்திற்கு முதலில் குழந்தையின் வயிறு நிரம்பி இருக்க வேண்டும். அப்படி வயிறு நிரம்பி விட்டால் குழந்தை நீண்ட நேரம் நிம்மதியாகத் தூங்குவார்கள். குழந்தைகள் நிம்மதியாக அழாமல் தூங்க வேண்டுமென்றால் நீங்கள் தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியம் அல்லது ஒரு டப்பா பால் கொடுத்து குழந்தையை உறங்க வைக்கலாம்.

கவனச்சிதறல்கள்
முதலில் குழந்தைகளின் கவனச் சிதறல்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அதாவது பெரும்பாலான குழந்தைகள் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு மிகவும் சிரமப்படுகிறார்கள். சில வகையான தொந்தரவுகளால் அவர்களின் கவனத்தைச் சிதற விடுகிறார்கள். எனவே தூக்கம் இன்றி அழுகிறார்கள். குழந்தைகள் தூங்கச் செல்லும் அரை மணி நேரத்திற்கு முன்பே டிவி போன்ற தொந்தரவு செய்யும் விஷயங்களை அணைத்து விட்டு உங்கள் வேலைகளையும் நிறுத்திவிட்டு குழந்தைகளின் அருகில் வந்து அமருங்கள். குழந்தைகளுக்குப் புத்தகங்களை வாசித்துக் காட்டுதல், மென்மையான இசையைப் போடுதல் போன்றவற்றைச் செய்யலாம்.

பின்பற்றுதல்
எப்போதும் ஒரே நடைமுறையைப் பின்பற்றுங்கள். இது மிகவும் எளிதான ஒன்று தான். அதாவது உங்கள் குழந்தை தூங்கும் நேரத்தை எப்போதும் மாற்றாதீர்கள். குழந்தையின் தூக்க நேரத்தைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டிருந்தால் உங்களுக்கும் குழந்தையும் கடினம் தான். விடுமுறை நாட்கள், விசேஷ நாட்கள் என்று குழந்தைகளை நேரம் தாழ்த்தி தூங்க வைப்பது மற்ற நாட்களுக்கும் அதே பழக்கத்தைத் தொடர்வார்கள். எனவே எப்போதும் குழந்தை தூங்கும் நேரத்திற்கு அவர்களைத் தூங்க வைப்பது நல்லது. இப்போது இருந்தே இந்த பழக்கங்களைப் பழக்குவது உங்களுக்கும் குழந்தைக்கும் ஆரோக்கியமான தூக்கப் பழக்கத்தை நீண்ட காலத்திற்குத் தர உதவும்.



Click it and Unblock the Notifications