Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம்
பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியைப் பராமரிக்க சில டிப்ஸ்...
தாயின் வயிற்றில் வளரும் குழந்தைகள், ஊட்டச்சத்துக்களையும் ஆரோக்கியத்தையும் தாயின் கர்ப்பப்பையுடன் இணைந்திருக்கும் நஞ்சுக்கொடி மூலமாக பெறுவார்கள். தொப்புள் கொடி என்பது வளரும் சிசுவிற்கும் தொப்புள் கொடிக்கும் இடையே உள்ள குழாயாகும். குழந்தை பிறந்தவுடன் ஊட்டச்சத்திற்கு தொப்புள் கொடி தேவையில்லை. குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடி இடுக்கிடப்பட்டு, குழந்தையின் உடம்பில் இருந்து எவ்வளவு தூரம் வெட்ட முடியுமோ, அவ்வளவு தூரம் வலியெடுக்காமல் வெட்டி விட வேண்டும்.
தொப்புள் கொடியில் எந்த ஒரு நரம்பு முடிவுகளும் இல்லாததால் அது வலியில்லாத ஒன்றாக இருக்கும். தொப்புள் கொடி இருந்த இடத்தில் ஒரு துண்டித்த உறுப்பு மட்டுமே இருக்கும். அதுவும் மூன்று வார காலத்திற்குள் உதிர்ந்து விடும். குழந்தையின் தொப்புள் கொடியை கீழ்கூறியுள்ள சில குறிப்பிட்ட வழிமுறைகளால் பராமரிக்க முடியும். சொல்லப்போனால், குழந்தையின் தொப்புள் கொடி மீது மிகுந்த முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும்.

குளியல்
குழந்தையின் தொப்புள் கொடியை சரியாக பராமரிக்க வேண்டும். அதனை சுத்தமாகவும் வறட்சியாகவும் வைத்திருக்க வேண்டும். குழந்தையை சுத்தப்படுத்த வேண்டும் என்றால் ஸ்பான்ஜ் ஒன்றை வைத்து துடைத்து எடுக்கலாம். கண்டிப்பாக தொட்டி குளியல் கூடவே கூடாது. தொப்புள் கொடி அதிகமாக ஈரமாகாமல் பார்த்துக் கொள்வதில் மிகுந்த கவனத்துடன் இருங்கள். அரிதான ஒன்றாக இருந்தாலும் கூட, சில நேரங்களில் தொப்புள் கொடி ஈரத்துடன் இருந்தால் தொற்றுக்கள் ஏற்படலாம். இருப்பினும் குழந்தைகளுக்கு அசௌகரியம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதில் மிகுந்த கவனம் தேவை.

தொப்புள் கொடியை சுத்தப்படுத்துங்கள்
தொப்புள் கொடி முழுமையாக உதிர்ந்து, அது ஆறும் வரை குழந்தையை குளிப்பாட்ட சிலர் தயங்குவார்கள். தொப்புள் கொடியை சுத்தப்படுத்த, ஸ்பான்ஞ் ஒன்றை தண்ணீரில் முக்கி, கொடியை மென்மையாக சுத்தப்படுத்துங்கள். பின் பஞ்சுருண்டையை கொண்டு அதனை துடைத்து எடுங்கள். அதனை ஈரம் படாமல் பார்த்துக் கொண்டால், குழந்தையின் தொப்புள் கொடி பராமரிப்பு சுலபமாகி விடும்.

ஆடைகள்
குழந்தைக்கு லூசான மற்றும் வசதியாக உள்ள ஆடைகளையே அணியுங்கள். டையப்பர் அணிவித்தால் அது தொப்புள் கொடிக்கு கீழே வருமாறு கட்டுங்கள். தொப்புள் கொடி உலர்ந்து வரும் வேளையில் சில குழந்தைகளுக்கு இரத்தம் வெளியேறுவது இயல்பான ஒன்று தான். அந்த மாதிரி நேரத்தில் கையோடு மாற்றுத் துணிகளை வைத்துக் கொள்ளுங்கள். குழந்தையின் தொப்புள் கொடி பராமரிப்பில் இது முக்கிய பங்கை வகிக்கிறது.

துண்டித்த உறுப்பு தானாக உதிரட்டும்
தொப்புள் கொடி தானாக உதிர்வதற்காக தான் குளியல், சுத்தப்படுத்துதல் மற்றும் ஆடை அணிவித்தல் ஆகியவைகள் பரிந்துரைக்கப்படுகிறது. மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் உள்ள தொப்புள் கொடி பழுப்பு நிறத்தில் மாறும். பின் உதிர்வதற்கு முன்பு கருப்பு நிறத்தில் மாறும். தனியாக தொங்கி கொண்டிருந்தாலும் கூட அதனை நீங்களாக பிய்த்து விடாதீர்கள்.

தொற்றுக்களும் அதை தடுப்பதற்கான வழிகளும்...
பொதுவாக இது ஆறுவதற்கு 3 வாரங்களாவது ஆகும். இந்த கால கட்டத்தில் தொப்புள் கொடியின் அருகில் வறண்ட இரத்தத்தை காணலாம். குழந்தைக்கு காய்ச்சல் வந்தாலோ அல்லது தொப்புள் கொடி சீக்கிரமாகவே புடுங்கப்பட்டு அதனால் இரத்தக்கசிவு ஏற்பட்டாலோ மருத்துவரை அணுக வேண்டும்.

தொப்புள் குறுமணிகள்
சில நேரம் சிறிய சிவப்பு நிற வடுக்களை தொப்புள் கொடி உண்டாக்கும். இதனால் மஞ்சள் நிறத்திலுள்ள திரவம் வெளியேறும். இது தானாகவே ஒரு வாரத்திற்குள் சரியாகி விடுவதால், இதற்கு பொதுவாக எந்த ஒரு மருத்துவ உதவியும் தேவையில்லை. ஆனால் அது குணமாகவில்லை என்றால், இந்த வடுவை நீக்க மருத்துவரை அணுக வேண்டும். தொப்புள் கொடி பராமரிப்பில் இதுவும் முக்கிய பங்கை வகிக்கிறது.



Click it and Unblock the Notifications