Latest Updates
-
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சத்தான பீர்க்கங்காய் சாதம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!
குழந்தைகளுக்கு முதன்முதலில் கொடுக்க வேண்டிய திடமான உணவுகள்!!!
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போதே, சற்று திட உணவுகளையும் கொடுக்க ஆரம்பிக்கும் போது தாய்மார்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் திடமான உணவுகள் பல உள்ளன. அவை அனைத்தையுமே குழந்தைகளால் சாப்பிட முடியாது.
ஆகவே குழந்தைகளுக்கு முதல் முதலில் உணவுகளைக் கொடுக்க நினைக்கும் போது, எந்த உணவுகளையெல்லாம் முதலில் கொடுக்கலாம் என்பதைப் பற்றி தாய்மார்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதுப்போன்று வேறு சில: அழும் குழந்தையை சமாதானப்படுத்துவதற்கான சில எளிய வழிகள்!!!
அதுமட்டுமின்றி, சிலருக்கு குழந்தைக்கு எப்போது திட உணவுகளைக் கொடுக்க ஆரம்பிக்கலாம் என்பதில் சந்தேகம் இருக்கும். அப்படி குழந்தைகளுக்கு எப்போது திட உணவுகளை கொடுப்பதென்று சந்தேகம் இருந்தால், கீழே கொடுத்துள்ள அறிகுறிகளைக் கொண்டு அறிந்து கொள்ளுங்கள்.
* உங்கள் குழந்தை நன்கு உட்காரவோ அல்லது தவள ஆரம்பிக்கும் போது திட உணவுகளைக் கொடுக்கலாம்.
* வாயில் உணவுகளை வைக்கும் போது அதை துப்பாமல், வாயில் வைத்து சப்ப ஆரம்பித்தால், அதுவும் திட உணவுகளை கொடுக்கலாம் என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.
* குழந்தை பிறக்கும் போது இருந்த எடையுடன், தற்போதுள்ள எடையை சோதித்து பார்க்கும் போது, எடையானது இரண்டு மடங்கு அதிகமாக இருந்தால், திட உணவுகளைக் கொடுக்கலாம் என்று அர்த்தம்.
மேற்கூறிய அறிகுறிகள் தென்பட்டால், அவர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை கொடுத்து வந்தால், அவர்களது வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, குழந்தையும் ஆரோக்கியமாக வளர ஆரம்பிக்கும்.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஆகவே குழந்தைக்கு உருளைக்கிழங்கை கொடுக்கும் போது, அதனை நன்கு மென்மையாக மசித்து, உங்கள் விரலால் ஊட்டி விட வேண்டும்.

பூசணிக்காய்
பூசணிக்காயைக் கூட குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அதிலும் இனிப்பு பூசணிக்காயை குழந்தைக்கு கொடுத்தால், பற்கள் வளரும் போது ஏற்படும் வலியில் இருந்து சற்று நிவாரணம் கிடைக்கும்.

வாழைப்பழம்
நன்கு கனிந்த வாழைப்பழத்தையும் கொடுக்கலாம். இதனால் அந்த வாழைப்பழத்தில் உள்ள இனிப்பு சுவையினால் குழந்தை விரும்பி சாப்பிட ஆரம்பிக்கும்.

ஆப்பிள்
குழந்தைகளுக்கு முதன் முதலில் கொடுக்க வேண்டிய உணவுப் பொருட்களில் ஒன்று தான் ஆப்பிள். இப்படி ஆப்பிளை குழந்தைக்கு கொடுத்தால், அவர்களது நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும்.

மீன்
மீனை கூட குழந்தைக்கு கொடுக்கலாம். அதிலும் சால்மன் மீன் கொடுப்பது தான் மிகவும் சிறந்தது. குறிப்பாக பாதி துண்டு சால்மன் மீனில் ஒரு சிட்டிகை உப்பு தூவி, வாரத்திற்கு ஒரு முறை கொடுத்தால், மீனில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் கிடைத்து, குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

கோதுமை பிரட்
குழந்தை பசியாக இருக்கும் போது, அவர்களுக்கு ஒரு துண்டு கோதுமை பிரட்டை கொடுத்தால், குழந்தையின் குடலியக்கமானது சீராக செயல்படும்.

செரில்
நிறைய குழந்தைகளுக்கு நல்ல ஃப்ளேவர்டு செரில்கள் தான் அதிகம் பிடிக்கும். எனவே உங்கள் குழந்தைக்கு நல்ல சுவைமிக்க ஃப்ளேவர்டு செரில்களை, பாலுடன் சேர்த்து காலை வேளையில் கொடுத்தால், குழந்தை அந்நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் செயல்படும்.

சிக்கன்
சிக்கன் உடலின் வெப்பத்தை தூண்டிவிடும் உணவுப் பொருளாக இருந்தாலும், இதனை வாரம் ஒரு முறை அளவாக கொடுத்து வருவது நல்லது.

டோஃபு
டோஃபு கூட குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவுப் பொருட்களில் ஒன்று. அதிலும் இந்த டோஃபுவில் கால்சியம் அதிகம் இருப்பதால், குழந்தைக்கு இதைக் கொடுத்தால், அவர்களின் எலும்பு மிகவும் உறுதியாக இருக்கும்.

முட்டை
குறிப்பாக நன்கு வேக வைத்த முட்டையை குழந்தைகளுக்கு வாரம் இரண்டு முறை கொடுத்தால், குழந்தை நன்கு வலுவுடன் வளரும்.

ஓட்ஸ்
பற்கள் வளரும் நிலையில் உள்ள குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகளில் ஒன்று தான் ஓட்ஸ். இதனால் குழந்தையின் ஈறு மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.

அவகேடோ
அவகேடோவை பாதியாக வெட்டி, அதில் உள்ள கூழ் போன்ற பகுதியை மசித்து, குழந்தைக்கு கொடுத்தால், குழந்தையின் செரிமானம் தடையின்றி நடைபெறும்.



Click it and Unblock the Notifications