Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
குழந்தைக்கு வயிற்றுப் போக்கா? ஈஸியா குணப்படுத்தலாம்!!!
குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் வயிற்றுப் போக்கு. இத்தகைய வயிற்றுப் போக்கால், இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறப்பிற்கு ஆளாகின்றனர். இதற்கு பெரும் காரணம், சரியான வைத்தியத்தை கடைப்பிடிக்காததே ஆகும். ஆனால் உண்மையில் இந்த பிரச்சனை அவ்வளவு பெரியது அல்லது. எளிதில் குணமாக்கக்கூடியவையே ஆகும். இருப்பினும் பலருக்கு, அதனை குணப்படுத்துவதற்கான முறை தெரியவில்லை.
ஆகவே அத்தகைய தாய்மார்களுக்காக, அதனை எப்படி எளிதில் குணப்படுத்தலாம் என்று கூறியுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, குழந்தைக்கு வயிற்றுப் போக்கினால் ஏற்படும் ஆபத்தை தடுக்கலாம். குணப்படுத்தும் முறை என்றதும், மருந்து மாத்திரைகளை தேட வேண்டாம். வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்களை வைத்தே இயற்கையான முறையில் குணப்படுத்தலாம்.

* குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுவதற்கு பெரும் காரணம் உடல் வறட்சி தான். அதிலும் தாய்ப்பால் குடிக்கும் குழந்தை என்றால், அடிக்கடி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இல்லை சற்று பெரிய குழந்தை என்றால், அவர்களது உடலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதற்கு, அவர்களுக்கு அவ்வப்போது ஜூஸ் போன்ற நீர்மத்தை கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைகளின் உடலில் வறட்சி ஏற்படாமல் தடுக்கலாம்.
* குழந்தைக்கு வயிற்றுப் போக்கு இருந்தால், அப்போது அவர்களது உடலில் இருந்து உப்பு மற்றும் நீர்ச்சத்தானது வெளியேறிவிடும். எனவே அவர்களது உடலில் இருந்து வெளியேறிய உப்புச்சத்தை மீண்டும் பெற வைப்பதற்கு, தண்ணீரில் உப்பு மற்றும் சர்க்கரை கலந்து குடிக்க கொடுக்க வேண்டும். ஒரு வேளை அவர்கள் குடிக்க மறுத்தால், வற்புறுத்தியாவது கொடுக்க வேண்டும்.
* குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு இருந்தால், அப்போது அவர்களுக்கு செர்லாக் போன்ற உணவுப் பொருட்களை கொடுக்க கூடாது. அதற்கு பதிலாக வீட்டில் சமைத்த உணவுகளான சாதம், வாழைப்பழம், ஆப்பிள் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.
* சிலசமயங்களில் பற்கள் முளைப்பதால் ஏற்படும் வலியின் காரணமாகவும், வயிற்றுப் போக்கு ஏற்படலாம். எனவே இந்த நேரத்தில் அவர்களது ஈறுகளுக்கு மசாஜ் செய்யும் வகையில், அவர்கள் கடிப்பதற்கு ஏற்றவாறான பொம்மைகளை கொடுக்க வேண்டும். இல்லையெனில் விரல்களை வைத்துக் கூட, குழந்தைகளின் ஈறுகளை மசாஜ் செய்யலாம்.
* குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கோ அல்லது வயிற்று வலியோ ஏற்பட்டால், உடனே கிரேப் வாட்டர் கொடுக்க வேண்டும் என்ற விஷயம் உலகத்திற்கே தெரிந்த ஒன்று தான். அதிலம கிரேப் வாட்டர் கொடுத்தால், குழந்தைகளின் வயிற்று வலி நீங்குவதோடு, வயிற்றில் இருக்கும் வாயுவும் வெளியேறிவிடும்.
இத்தகைய செயல்களையெல்லாம் குழந்தைகளுக்கு மூன்று நாட்கள் வயிற்றுப் போக்கு இருக்கும் போது செய்ய வேண்டும். இதனால் அவை குணமாகிவிடும். ஒருவேளை மூன்று நாட்களுக்கும் மேல், ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை நீராக மலமானது வெளியேறினால், உடனே குழந்தைகளை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.



Click it and Unblock the Notifications