Latest Updates
-
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை
செல்லங்கள் தவழ ஆரம்பிச்சுடாங்களா!!! இதை படிச்சு பாருங்க...

1. எப்போது குழந்தைகள் தவழவும், நிலை தடுமாறி நடக்கவும் துவங்குகிறார்களோ, அப்போது அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில், அவர்கள் முன் நின்று அவர்களை அழைக்கலாம் அல்லது அவர்கள் முன் ஏதேனும் அவர்கள் கண்ணை பறிக்கும் வகையான பொருட்களை வைத்து அவர்கள் எடுக்க முன் வரும்படி செய்யலாம். உதாரணமாக, குழந்தைகளுக்கு சத்தம் வரும் பொம்மைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனை அவர்கள் முன் வைத்து சத்தத்தை ஏற்படுத்தி அவர்கள் கைக்கு எட்டும் வகையில் வைக்கலாம். இதனால் அவர்கள் மேலும் சுறுசுறுப்படைவார்கள்.
2. எலும்புகள் உறுதியாக இருந்தால் குழந்தைகளுக்கு எந்த நோய் மற்றும் வேறு எந்த ஒரு பிரச்சனையும் உடலில் வராது. ஆகவே அவ்வாறு அவர்கள் எலும்புகளை வலுப்படுத்த, குழந்தைகளுக்கு குளிப்பாட்டும் முன் எண்ணெய் வைத்து அவர்களுக்கு உடல் முழுவதும் மசாஜ் செய்ய வேண்டும். இத்தகைய எண்ணெய் மசாஜ் ஆனது, அவர்களுக்கு சரியான வடிவத்தை தரும். உதாரணமாக, இப்போது குழந்தைகளுக்கு மசாஜை மூக்கில் மற்றும் உதட்டில் செய்தால், மூக்கானது கூர்மையாக அழகாக வடிவம் பெறும். எப்படியென்றால் குழந்தைகளது எலும்பானது மிகவும் மென்மையாக இருப்பதால், இந்த வகையான மசாஜ் அவர்களுக்கு வடிவத்தை தருவதோடு, வலிமையும் அடையும்.
3. எப்போது குழந்தையானது தவழ ஆரம்பிக்கிறதோ, அப்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முதலில் எந்த ஒரு பொருளையும் ஜன்னல் அருகே வைக்க வேண்டாம். ஏனெனில் அந்த பொருள் அவர்கள் கண்களைப் பறித்தால் கண்டிப்பாக எப்போதாவது அதை எடுக்க அவர்கள் முயற்சி செய்து, அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். மேலும் எந்த ஒரு கூர்மையான பொருளையும் அவர்கள் முன்னாடி வைக்காதீர்கள். வீட்டின் கதவை திறந்து வைத்து வேலை செய்யாதீர்கள். சொல்லப்போனால், எந்த வேலை செய்தாலும், எப்போதும் அவர்களை கவனித்துக் கொண்டே செய்யுங்கள்.
4. குழந்தைகள் எப்போதும் ஒரே இடத்தில் இருக்க மாட்டார்கள். ஆகவே அவர்கள் தவழ ஆரம்பித்தால், அவர்களை கட்டிலில் தனியாக விட்டு விட வேண்டாம். என்ன தான் அவர்களைச் சுற்றி தலையணை, விளையாட்டுப் பொருட்கள் என்று வைத்தாலும், தவழ ஆரம்பித்தால் அவர்கள் கை, கால்கள் துறுதுறுவென்று இருக்கும். அப்போது கட்டிலில் விட்டால் அவர்கள் விழ வேண்டிவரும். கட்டிலானது உயரம் குறைவாக இருந்தால் பாரவாயில்லை, ஆனால் உயரமாக இருந்தால் ஆபத்து தான்.
ஆகவே உங்கள் குழந்தை தவழ ஆரம்பித்தால் மேற்கூறிய அனைத்தையும் நினைவில் வைத்து செயல்படுங்கள்.



Click it and Unblock the Notifications
