Latest Updates
-
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
2025-ல் அதிக குற்றங்கள் நடைபெற்ற உலகின் டாப் 10 மோசமான நாடுகள்... எந்த நாடு முதலிடத்தில் இருக்கு தெரியுமா?
2025 ஆம் ஆண்டு கிட்டதட்ட முடிவுக்கு வரப்போகிறது. இந்த வருடத்தில் உலகம் முழுவதும் பல நாடுகளில் பல்வேறு சிக்கல்களும், பிரச்சினைகளும் நிகழ்ந்தது. அனைத்து நாடுகளின் குற்றங்களின் எண்ணிக்கை மற்றும் பாதுகாப்பு குறியீட்டு மதிப்பெண்கள், புள்ளிவிவர தளமான Numbeo-வால் தொகுக்கப்படுகின்றன. ஒரு நாட்டில் நடக்கும் குற்றங்களின் அடிப்படையில் 0 முதல் 100 வரையிலான மதிப்பெண்கள் அளிக்கப்படுகின்றன.
ஒரு நாட்டின் பாதுகாப்பை அளவிடும் மற்றொரு வழியாக Global Organised Crime Index (GOCI) ஆகும், இது மூன்று துணைப்பிரிவுகளில் தரவைப் பயன்படுத்துகிறது: Criminal Markets, Criminal Actors மற்றும் Resilience. நிதி மற்றும் சைபர் குற்றங்கள் முதல் கடத்தல் நெட்வொர்க்குகள் மற்றும் ஒரு நாட்டின் நீதித்துறை மற்றும் காவல் அமைப்புகளின் வலிமை வரை அனைத்தும் இதில் கணக்கிடப்படுகிறது.

உலகளவில், குற்ற விகிதங்கள் பொதுவாக மொத்த குற்றங்களின் எண்ணிக்கையை மக்கள்தொகையால் வகுத்து, அதன் விளைவை 100,000 ஆல் பெருக்குவதன் மூலம் கணக்கிடப்படுகின்றன. இந்த கணக்கீடுகளின் அடிப்படையில் 2025-ல் மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உள்ள 2025-ன் ஆபத்தை நாடுகள் என்னென்னெ என்று தெரிந்து கொள்ளலாம்.
ஹைதி
81 மதிப்பெண்களுடன் ஹைத்தி இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இங்கு நிலவும் அரசியல் அமைதியின்மை காரணமாகநாட்டின் 60-100% பகுதியை 150-200 சட்டவிரோத கும்பல்கள் கட்டுப்படுத்துவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் ஹைதியில் 2,490 கடத்தல்கள் மற்றும் 4,789 கொலைகள் பதிவாகியுள்ளன, இது முந்தைய ஆண்டை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம். எல்லைப் பாதுகாப்பு பலவீனமடைதல் மற்றும் பலவீனமான சட்ட அமலாக்கத்தின் காரணமாக, கோகோயின் மற்றும் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் கடத்தலுக்கான முக்கிய மையமாக இந்த நாடு மாறியுள்ளது.
பப்புவா நியூ கினியா
80.7 மதிப்பெண்களுடன் பப்புவா நியூ கினியா இரண்டாவது இடத்தில் உள்ளது. பப்புவா நியூ கினியாவில் இந்த ஆண்டில் சிறிய மற்றும் பெரிய வன்முறை குற்றங்கள் இரண்டும் அதிக அளவில் பதிவாகியுள்ளன. சமூக மற்றும் பொருளாதார மாற்றங்கள், குறைந்த வேலைவாய்ப்பு வாய்ப்புகளை எதிர்கொள்ளும் இளைஞர் குழுக்களிடையே, சட்ட விரோத செயல்பாட்டை தீவிரப்படுத்தியுள்ளன. இந்த நாடு அமைந்துள்ள புவியியல் இடமும், அரசியல் நிலையற்றது தன்மையும் மற்றும் பரவலான ஊழலும், போதைப்பொருள் மற்றும் மனித கடத்தல் கும்பல்களின் வளர்ச்சியை அதிகமாக்கியுள்ளது.
வெனிசுலா
80.5 மதிப்பெண்களுடன் வெனிசுலா உலகின் ஆபத்தான நாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறையால் வழங்கப்பட்ட லெவல் 4 ஆலோசனையின் படி பயணிகள் இந்த நாட்டிற்குள் நுழைய வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள். நாட்டில் நிலவும் ஊழல் மற்றும் பலவீனமான நீதித்துறை ஆகியவை அதிக குற்ற விகிதங்களுக்கு காரணமாக உள்ளது. ஆயுதமேந்திய கொள்ளைகள், கடத்தல்கள் மற்றும் வன்முறை குற்றங்கள் இங்கு அதிகளவில் எந்த பயமும் இன்றி நடத்தப்படுகிறது.
ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் 75.2 மதிப்பெண்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது. ஊழல், படுகொலைகள், போதைப்பொருள் கடத்தல், கடத்தல் மற்றும் பணமோசடி போன்ற தொடர்ச்சியான குற்ற சம்பவங்களை ஆப்கானிஸ்தான் எதிர்கொண்டு வருகிறது. 2020 ஆம் ஆண்டில் உலகின் 85% சட்டவிரோத அபின் விநியோகத்திற்கு காரணமாக ஆப்கானிஸ்தான் இருந்தது. இந்த தொழிலைக் கட்டுப்படுத்துவதாக தலிபான்கள் உறுதியளித்த போதிலும், அது ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்துடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. இங்கு நிலவும் வேலையில்லா திண்டாட்டமும் கொள்ளை மற்றும் தாக்குதல் போன்ற குற்றங்களைத் தூண்டுவதற்கான காரணங்களில் ஒன்றாகும்.
தென் ஆப்பிரிக்கா
74.6 மதிப்பெண்களுடன் தென் ஆப்பிரிக்கா ஐந்தாவது இடத்தில் உள்ளது. தனிமனித தாக்குதல், கொலை மற்றும் பாலியல் வன்முறை போன்ற குற்றங்களின் அதிக விகிதங்களுடன், தென்னாப்பிரிக்கா உலகின் ஆபத்தான நாடுகளில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த எண்ணிக்கை பரவலான பாலியல் சமத்துவமின்மை, வேலையின்மை மற்றும் வன்முறையை சமூக இயல்பாக மாற்றியதன் விளைவாகும்.
ஹோண்டுராஸ்
ஹோண்டுராஸ் 71.9 மதிப்பெண்களுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. பல்வேறு குழுக்களின் கேங்வார் மற்றும் வன்முறையை நீண்ட காலமாக எதிர்த்துப் போராடி வருகிறது. போதைப்பொருட்களுக்கான முக்கிய போக்குவரத்து பாதையாகவும் இந்த நாடு உள்ளது, அதே நேரத்தில் பலவீனமான சட்ட அமலாக்க அமைப்புகள், அமெரிக்க வெளியுறவுத்துறையை இந்த நாட்டிற்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடும்படி செய்துள்ளது.
டிரினிடாட் மற்றும் டொபாகோ
இந்த கரீபியன் நாடு 71.0 மதிப்பெண்களுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. கும்பல் வன்முறைகள், போதைப்பொருள் கடத்தல், அதிகார மோதல்கள்மற்றும் பொருளாதார அழுத்தங்கள் போன்ற சவால்களுக்கு வழிவகுக்கிறது. இங்கு பயணிகள் பொதுவாக பிக்பாக்கெட், தாக்குதல் மற்றும் மோசடி போன்ற ஆபத்துகளை எதிர்கொள்கின்றனர். இந்த நாட்டிற்கும் லெவல் 3 எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிரியா
68.4 மதிப்பெண் பெற்று சிரியா எட்டாவது இடத்தில் உள்ளது. சிரியாவின் நீண்ட கால உள்நாட்டுப் போர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை, குறிப்பாக கேப்டகன் என்ற போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தலை தீவிரப்படுத்தியுள்ளது. மனித கடத்தல், ஆயுதக் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் கடத்தல் பொருட்களின் விற்பனை போன்ற குற்றங்களை மிகவும் பரவலாகியுள்ளது. போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் சிக்கலான குற்றவியல் நெட்வொர்க்கை இயக்குகின்றன.
ஜமைக்கா
2020 ஆம் ஆண்டில் அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஜமைக்கா பத்தாவது இடத்தைப் பிடித்தது. தற்போது 67.4 மதிப்பெண்களுடன் ஒரு இடம் முன்னேறி ஒன்பதாவது இடத்திற்கு சென்றுள்ளது. அரசாங்க ஊழல், கும்பல் வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வன்முறை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாட்டின் சட்ட ஒழுங்கும், மக்கள் பாதுகாப்பும் பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது. இந்த நாட்டின் ஸ்பானிஷ் டவுன் மற்றும் கிங்ஸ்டன் மற்றும் மான்டெகோ விரிகுடாவின் சில பகுதிகளைத் தவிர்க்க பயணிகள் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பெரு
உலகின் அதிகளவு கோகோயின் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான யாளர்களில் பெரு 66.7 மதிப்பெண்களுடன் பத்தாவது இடத்தில் உள்ளது. போதைப்பொருள் கடத்தல் குழுக்கள் அதிகமாக செயல்படும் VRAEM போன்ற கோகோ வளரும் பகுதிகளில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் அதிகம் நடைபெறுகின்றன. 2022 ஆம் ஆண்டில் 700 க்கும் மேற்பட்ட கொலைகளைப் பதிவு செய்த லிமா உள்ளிட்ட நகர்ப்புறப் பகுதிகளும் பல்வேறு கும்பல்களுடன் தொடர்புடைய வன்முறையை எதிர்கொள்கின்றன.



Click it and Unblock the Notifications












