Latest Updates
-
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது.. -
உடல் சூட்டைக் குறைக்கும் வெந்தய களி - இப்படி பாரம்பரிய முறைப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
சூரியன் ரிஷப ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும்
World Art Day: வீட்டின் முன் போடப்படும் கோலம் பற்றி பலரும் அறியாத சில உண்மைகள்!
World Art Day: தமிழ்நாடு என்றதுமே அனைவருக்கும் நினைவிற்கு வருவது அற்புதமான கோவில்கள், துடிப்பான பண்டிகைகள் மற்றும் வளமான கலாச்சார மரபுகள் தான். அதே சமயம் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டின் வாசலும் தினமும் ஒரு அழகான கோலத்தால் அலங்கரிக்கப்பட்டிருப்பதும் நினைவிற்கு வரலாம்.
இப்படி வீட்டு வாசலில் போடப்படும் அழகான கோலம் பல நூற்றாண்டுகளாக பயிற்சி செய்து வரும் ஒரு அழகான கலை வடிவமாகும். கோலம் போடுவது அவ்வளவு பெரிய கஷ்டமா என்று கேட்கலாம். ஆனால் அந்த கோலம் போடுவதும் ஒரு கலை ஆகும். ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டுப் பெண்கள் தங்கள் வீட்டிற்கு வெளியே பல அழகான கோலங்களை உருவாக்குகிறார்கள். இந்த கோலம் வீட்டின் வாசலுக்கு ஒரு அழகான தோற்றத்தைக் கொடுப்பதைத் தவிர, வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலையும் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது.

இன்று உலக கலை தினம். ஒவ்வொரு ஆண்டும் உலக கலை தினம் ஏப்ரல் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. பல்வேறு கலாச்சரங்களுக்கு மையமாக இந்த கொண்டாட்டம் உள்ளது. கலையின் வளர்ச்சியை போற்றும் வகையில் இது நடத்தப்படுகிறது. இப்போது கோலக் கலை பற்றி உங்களுக்குத் தெரியாத சில உண்மைகளைக் காண்போம்.
* கோலம் என்பது ஒரு பழைய கலை வடிவமாகும். இது நமக்கு ஓவியத்தின் அடிப்படைகளை கற்பிக்கிறது. இந்த கோலம் தமிழர்களின் தினசரி வழக்கங்களுள் ஒன்று. காலையில் எழுந்ததும் வீட்டின் முன் ஒரு கோலத்தைப் போட வேண்டும். இது வீட்டிற்குள் லட்சுமி தேவியை வரவேற்பதன் ஒரு அடையாளமாகும்.
* பொதுவாக காலையில் ஒரு எளிய கோலத்தைப் போடுவதற்கு 10 நிமிடங்கள் ஆகும். ஆனால் பண்டிகை காலத்தில் போடப்படும் கோலங்களை போட குறைந்தது 2 மணிநேரம் ஆகும். ஏனெனில் இது ஒவ்வொரு பண்டிகையைப் பொறுத்து, அந்த பண்டிகையுடன் தொடர்புடைய வடிவங்களை வரைய நேரம் எடுக்கும். உதாரணமாக, பொங்கல் பண்டிகையை எடுத்தால், அந்த பண்டிகையுடன் தொடர்புடைய கரும்பு, பொங்கல் பானை போன்றவை வரையப்படும்.
* கோலம் போட்ட பின், அந்த கோலத்தை மெருகேற்ற வெவ்வேறு வண்ணப் பொடிகளை பயன்படுத்தலாம். சாதாரண கோலப் பொடியானது அரிசி மாவுடன், வெள்ளைக் கல் பொடி சரியான விகிதத்தில் கலக்கப்பட்டிருக்கும். கோலப்பொடி சற்று மென்மையாக இருந்தால் தான், கோலத்தை சரியாகவும் அழகாகவும் போட முடியும்.
* கோலத்தில் இரண்டு விதங்கள் உள்ளன. ஒன்று புள்ளி வைத்த கோலம் மற்றும் ரங்கோலி. இவ்விரண்டுமே வீட்டு வாசலில் போடப்படும் ஒரே மாதிரியான கோலங்கள் தான். ஆனால் ரங்கோலியில் எவ்வித புள்ளியும் வைக்காமல் ஓவியத்தைப் போன்று சுதந்திரமாக வரையும் கலை. அதே சமயம் புள்ளி வைத்த கோலம் என்பது புள்ளிகளை வைத்து, அவற்றை இணைத்து வரையும் கலை. புள்ளி கோலத்தில் எத்தனை புள்ளிகளை வைத்தும் கோலம் போடலாம். ஒருவரது விருப்பத்திற்கு ஏற்ப கோலத்தை பெரிதாக்கலாம். ஆனால் கோலம் போடுவதற்கு பொறுமை மிகவும் அவசியம்.
* கோலங்களில் பல வகைகள் உள்ளன. கம்பி கோலம், ஊடுப்புள்ளி கோலம், படி கோலம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இதில் கம்பி மற்றும் ஊடுப்புள்ளி கோலம் புள்ளிகளால் மட்டுமே வரையப்படுகிறது. இந்த வகை கோலத்தில் புள்ளிகளைத் தொடக்கூடாது. இதில் ஒரு புள்ளியில் தொடங்கி புள்ளிகளைத் தொடாமல் கோடுகளை வரைந்து, நீங்கள் கவனம் செலுத்தி திறமையானவராக இருந்தால், நீங்கள் தொடங்கிய அதே இடத்திற்கு ஒரே ஓட்டத்தில் திரும்பி வரலாம்.
இறுதியாக, கோலம் ஒவ்வொரு நாளும் தெய்வீகத்துடன் ஈடுபடுவதற்கான ஒரு வழியாகவும் பார்க்கப்படுகிறது. தமிழ் பாரம்பரியத்தில், வீட்டின் முன் வரையப்பட்ட கோலம் கடவுள்களுக்கான நுழைவாயிலாக செயல்படுகிறது, இது குடும்பத்திற்கு தெய்வீக ஆசீர்வாதங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்கிறது. மொத்தத்தில் சரியான கோலம் நேர்மறை ஆற்றல், நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பை அழைக்கும் என கூறப்படுகிறது .
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











