Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்..
கம்பீரமான தோற்றமும், வலிமையான ஆரோக்கியமும் இந்த 4 ராசிக்காரங்களுக்கு இயற்கையாவே கிடைச்ச வரமாம்...!
அனைவருக்குமே ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டுமென்ற ஆசை இருக்கத்தான் செய்யும். ஆனால் எல்லோருக்கும் பல்வேறு காரணங்களால் அந்த ஆசை கைகூடாமல் போகிறது. கொரோனா பெருந்தொற்று நம் உலகை ஆக்கிரமித்த பிறகு அனைவருமே தங்கள் நோயெதிர்ப்பு சக்தி குறித்து கலக்கத்தில்தான் உள்ளனர்.
ஜோதிடம் ஒருவரின் ஆளுமையை கணிப்பது போல ஒருவரின் ஆரோக்கியத்தையும் கணிக்க உதவுகிறது. ஒருவரின் குணங்கள், பலம் மற்றும் பலவீனங்களைப் போலவே அவர்களின் ஆரோக்கிய வாழ்வையும் அவர்களின் பிறந்த ராசி மூலம் கணிக்கலாம். வலுவான நோயெதிர்ப்பு சக்தியும், வலிமையான ஆரோக்கியமும் சில ராசிக்காரர்களுக்கு வரமாய் கிடைக்கும். அது என்னென்ன ராசிகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

விருச்சிகம்
மர்மமான ஆளுமை கொண்ட விருச்சிக ராசிக்காரர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வார்கள் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ரிஸ்க் எடுக்க பயப்படாத சொல்லப்போனால் ஆபத்தான சூழ்நிலைகளை தேடி செல்கிற அவர்கள் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் எப்போதும் அதிலிருந்து இலாவகமாக தப்புகின்றனர். இது அவர்களின் அதிர்ஷ்டம் என்று அனைவரும் நினைத்தாலும் உண்மையில் அது அவர்களின் வாழ்க்கைமுறையின் பயனாகும்.
விருச்சிக ராசிக்காரர்கள் அளவுக்கதிகமாக சாப்பிடுவதை விரும்புவதில்லை, வயிறு நிரம்பிய பின் விருச்சிக ராசிக்காரர்கள் சாப்பிடுவதை நீங்கள் அரிதாகவே காண்பீர்கள். கூடுதலாக,அவர்கள் வேலை செய்ய பெரிதும் தேவை இல்லாவிட்டாலும், தங்களால் முடிந்த போதெல்லாம் படிக்கட்டுகளில் ஏறுதல், சின்ன சின்ன பயிற்சிகள் என்று ஆரோக்கியமாக இருக்க தேவையானவற்றை அவசியம் செய்வார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களின் அலட்சியமான வெளித்தோற்றத்தைப் பார்த்து ஒருபோதும் ஏமாறாதீர்கள், ஏனெனில் அவர்கள் ஜோதிட சாஸ்திரத்தின் படி மிகவும் ஆரோக்கியமான ராசிகளில் ஒருவராவர். அவர்களின் எச்சரிக்கை உணர்வு எப்போதும் கூர்மையாக இருப்பதால் எந்த நோயும் அவர்களைத் தாக்கும் முன்னரே அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.
எப்போதும் முன்னெச்சரிக்கையாகவும், உடல்ரீதியாக சுறுசுறுப்பாகவும் இருப்பது அவர்கள் அடிப்படை குணங்களில் ஒன்றாகும். இவை அவர்களை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான முக்கியமான காரணங்களாகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் அவர்களின் ராசியின் சின்னமான காளைப் போலவே உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் வலுவானவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் ஒருவேளை ஏதாவது நோயால் பாதிக்கப்பட்டாலும் அவை ஒருபோதும் தங்கள் மனஉறுதியை குழைக்க அனுமதிக்கமாட்டார்கள்.
மற்ற விஷயங்களை விட அவர்கள் தங்கள் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறார்கள். அவர்கள் பொதுவாக நோய்வாய்ப்பட்ட பிறகு விரைவில் அதிலிருந்து குணமடைவார்கள் மற்றும் பெரும்பாலும் தங்கள் உடல் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக்கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் உடல் தங்களின் கட்டுப்பாட்டை மீறாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள்.
சிம்மம்
ராசிகளின் ராஜா என்று அழைக்கப்படும் சிம்ம ராசிக்காரர்கள் ஒருபோதும் தங்களின் ஆரோக்கியத்தில் குறை ஏற்பட அனுமதிப்பதில்லை. தங்களின் ஆரோக்கியம் முதல் உடலமைப்பு வரை அனைத்திலும் அக்கறைக் காட்டுவார்கள். அவர்களை மிகவும் எரிச்சலடைய செய்வதே எதுவும் செய்யாமல் அமைதியாக இருக்க வேண்டுமென்ற சூழ்நிலைதான்.
அவர்களின் வலுவான உடலும், கம்பீரமான தோற்றமுமே அவர்களின் அடையாளமாக இருக்கும். அவர்கள் எப்போதும் மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதில் ஆர்வமானவர்களாக இருப்பார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள். அதற்கு தோற்றமும், ஆரோக்கியமும் முக்கியமென்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.



Click it and Unblock the Notifications
