Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
பாபா வாங்காவின் 2025 கணிப்புகளுக்கு மத்தியில் ஜப்பானில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு.. உண்மையில் பேரழிவு ஏற்படுமா?
Japan Baba Vanga's Predictions: ஜப்பானைச் சேர்ந்த மங்கா கலைஞரான புதிய பாபா வாங்கா என்று அழைக்கப்படும் ரியோ டாட்சுகி, ஜப்பானில் ஜூலை 05 ஆம் தேதி ஒரு பெரிய பேரழிவு ஏற்படும் என்றும், அதுவும் பூகம்பம் தாக்கும் என்று 'தி ஃபியூச்சர் ஐ சா' என்னும் புத்தகத்தின் 2021 மறுபதிப்பில் குறிப்பிட்டிருந்தார். இந்த கணிப்பால் கடந்த சில மாதங்களாகவே மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஏனெனில் 2011 ஆம் ஆண்டில் பேரழிவை ஏற்படுத்திய டோஹோகு பூகம்பம் மற்றும் சுனாமியை டாட்சுகி கணித்ததாக கூறப்படுகிறது. இந்த பேரழிவால் சுமார் 20,000 பேர் உயிரிழந்தனர். உலகிலேயே நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று. இருந்தாலும், அறிவியல் பூர்வமாக நிலநடுக்கம் ஏற்படும் என்று கணிப்பது "சாத்தியமற்றது" என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

புதிய பாபா வாங்காவான ரியோ டாட்சுகி எழுதிய "தி ஃபியூச்சர் ஐ சா" என்ற புத்தகத்தில், ஜப்பானுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையில் கடலுக்கு அடியில் ஒரு விரிசல் உருவாகும், இது 2011 இல் ஏற்பட்டதை விட மூன்று மடங்கு பெரிய சுனாமியைத் தூண்டும் என்று கணித்து குறிப்பிட்டிருந்தார். இதனால் மக்கள் பலரும் அச்சத்தில் இருந்தனர். இருப்பினும், தனது கணிப்புகளை மிகையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று தட்சுகியே மக்களை வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் ஜப்பானின் கியூஷு தீவில் உள்ள கிரிஷிமா மலைத்தொடரில் உள்ள மவுண்ட் ஷின்மோடேக் எரிமலை புதன்கிழமை வெடித்து, வானில் 5,000 மீட்டர் உயரத்தில் சாம்பல் புகையை உருவாக்கியது. இந்த எரிமலை வெடிப்பானது ஜூன் 02 ஆம் தேதி மதியம் 3.30 மணியளவில் ஏற்பட்டது.
இந்த எரிமலை பெரிய அளவில் வெடித்தால், 2 மைல் சுற்றளவில் எரிமலைப் பாறைகள் மற்றும் பைரோகிளாஸ்டிக் ஓட்டங்கள் விழும் அபாயம் உள்ளதால் ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை அளவை 3 ஆக உயர்த்தியுள்ளது. குறிப்பாக இந்த எரிமலை வெடிப்பானது டோகாரா தீவுகள் அருகே ஏற்பட்ட 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்டது. கடைசியாக இந்த மவுண்ட் ஷின்மோடேக் எரிமலையானது 2018 ஆம் ஆண்டில் வெடித்தது. அப்போது இது குறைவான தீவிரத்தை கொண்டிருந்தது.
முக்கியமாக இந்த எரிமலையைச் சுற்றி சுமார் 900,000-க்கும் அதிகமான மக்கள் வசிப்பதால், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். அதோடு ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனமும் 24 மணிநேரமும் மலையை கண்காணித்து வருகிறது.
ஜப்பானில் பெரிய பூகம்பம் ஏற்படாவிட்டாலும், எரிமலை வெடிப்பு நிகழ்வை காணும் போது, பல்கேரிய பாபா வாங்கா மற்றும் புதிய பாபா வாங்காவின் கணிப்புகளுள் ஒன்றான இயற்கை பேரழிவு உண்மையாகிவிடுமோ என்ற அச்சம் தான் எழுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
