Latest Updates
-
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா?
சூரியன் அஸ்தமனமாகும் போது இத பார்த்தா.. உங்கள தேடி பணம் வரப்போகுது-ன்னு அர்த்தம்...
Vastu Tips In Tamil: ஒவ்வொருவருக்குமே தங்கள் வீடு செல்வ செழிப்போடு இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். வீட்டில் செல்வம் அதிகம் சேர வேண்டும் என்பதற்காக பலரும் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள சில விஷயங்களைப் பின்பற்றுவார்கள்.
வாஸ்துவில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களைப் பின்பற்றும் போது, அது வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரிப்பதோடு, செல்வத்தின் தெய்வமாக கருதப்படும் லட்சுமி தேவியின் அருளைப் பெறச் செய்யும்.

ஒருவருக்கு லட்சுமி தேவியின் பரிபூர்ண ஆசி கிடைத்தால், அவர் நல்ல மகிழ்ச்சியான மற்றும் செழிப்பான வாழ்க்கையை வாழ்வார். மேலும் லட்சுமி தேவி ஒருவரது வீட்டிற்கு வரவுள்ளார் என்றால், அதற்கு முன் ஒருசில அறிகுறிகள் தென்படும்.
அந்த அறிகுறிகளுள் சில சூரிய அஸ்தமனத்தின் போது அல்லது பின் தெரியும். இப்போது வீட்டில் பணம் அதிகம் சேரப் போகிறது அல்லது லட்சுமி தேவி வீட்டிற்கு வருகை தருவதாக இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். இப்போது அவை என்னவென்பதைக் காண்போம்.
பறவை கூடு
உங்கள் வீட்டிற்குள் ஒரு பறவை வந்து கூடு கட்டுகிறது என்றால், அது மிகவும் மங்களகரமானதாகும். ஏனெனில் எங்கு அதிர்ஷ்டம் உள்ளதோ, அங்கு தான் பறவை கூடு கட்டும். மேலும் பறவை கூடு கட்டும் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சியும் செல்வமும் நிலைத்திருக்கும் மற்றும் அந்த அந்த வீட்டில் பண வரவு சிறப்பாக இருக்கும்.
கனவில் இவற்றை காண்பது
ஒருவரது கனவில் பல்லி, ஆந்தை, விளக்கமாறு ஆகியவற்றை காண்பது என்பது மிகவும் நல்லது. இப்படிப்பட்ட கனவுகள் ஒருவரை நோக்கி பணம் வரப்போகிறது என்பதைக் குறிக்கிறது. மேலும் கனவு சாஸ்திரத்தின் படி, இம்மாதிரியான கனவுகள் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகின்றன.
கருப்பு எறும்புகள்
சூரியன் அஸ்தமனத்திற்கு பின், வீட்டில் கருப்பு எறும்புகள் அதிகம் சுற்றிக் கொண்டிருப்பதைக் காண்டால், அது மிகவும் நல்ல அறிகுறியாகும். ஏனெனில் கருப்பு எறும்புகளானது லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்கப் போவதைக் குறிக்கிறது. இந்நிலையில் அந்த கருப்பு எறும்புகளுக்கு சர்க்கரையை போட்டால், மாலையில் வீட்டிற்கு வரும் லட்சுமி தேவி மகிழ்ச்சியடைந்து, வீட்டில் பண வரவை அதிகரிப்பார்.
மூன்று பல்லிகள்
சூரிய அஸ்தமனத்தின் போது வீட்டின் ஒரே சுவற்றில் மூன்று பல்லிகளை ஒன்றாக பார்ப்பது என்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் லட்சுமி தேவி ஒருவரது வீட்டிற்கு வருகை தரும் போது தான் இம்மாதிரியான நிகழ்வு நடைபெறுவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதோடு, இது ஒருவரது நிதி பிரச்சனைகள் நீங்கி, நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படப் போகிறது என்பதன் அறிகுறியும் கூட.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications