Latest Updates
-
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா?
இந்த 5 பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா உங்க பர்ஸ்-ல பணமே நிக்காது...
Vastu Tips In Tamil: ஒவ்வொருவரின் வாழ்விலும் செல்வம், ஆரோக்கியம் போன்ற இரண்டு விஷயங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. பணப் பற்றாக்குறையுடன், ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டிருந்தால், அது ஒருவரின் நிலையை மோசமாக்கிவிடும்.
நம் அனைவரிடமும் நல்ல மற்றும் கெட்ட பழக்கங்கள் இருக்கும். ஆனால் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியின் ஆசியைப் பெற வேண்டுமானால், கெட்ட பழக்கங்களை கைவிட்டு, நல்ல பழக்கங்களைக் கொள்ள வேண்டும்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவரது பழக்கவழக்கங்களும் அவர்களின் நிதி நிலையிலும் ஆரோக்கியத்திலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே நல்ல செழிப்பான வாழ்க்கையை வாழ விரும்பினால், நல்ல பழக்கங்களை வழக்கமாக கொள்ள வேண்டும்.
இப்போது வாஸ்துப்படி எந்த பழக்கங்கள் ஒருவரது நிதி நிலைமையை பாதித்து, ஏழையாக்கும் என்பதைக் காண்போம். உங்களிடம் இந்த பழக்கங்கள் இருந்தால் உடனே நிறுத்த முயலுங்கள்.
1. சூரிய உதயத்திற்கு பின் எழுவது
பொதுவாக சூரியன் உதிக்கும் முன்பு எழுவது மிகவும் மங்களகரமானதாக மற்றும் ஒருவருக்கு நல்ல ஒழுக்கத்தை கொண்டு வருவதாக கருதப்படுகிறது. வாஸ்துப்படி, ஒருவர் சூரியன் உதயமான பின்னர் அதாவது காலையில் தாமதமாக எழுவது அந்நபருக்கு பண இழப்பை ஏற்படுத்துவதோடு, அந்நபரின் செல்வத்தை இழக்க வைக்கும். எனவே உங்களிடம் பணம் அதிகம் சேர வேண்டுமானால், சூரிய உதயத்திற்கு முன் எழ முயற்சி செய்யுங்கள்.
2. நீரை வீணடிப்பது
மனிதன் உயிர் வாழ நீர் இன்றியமையாதது. அந்த நீரை நாம் முடிந்த வரை சேமிக்க முயற்சிக்க வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தில் நீர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சாஸ்திரங்களின் படி, நீரை வீணடிப்பது அல்லது வீட்டில் நீர் குழாயில் இருந்து நீர் கசிவது போன்றவை அசுபமானதாக கருதப்படுகிறது மற்றும் இது ஒருவரது நிதி மற்றும் செல்வ இழப்பிற்கு வழிவகுக்கும்.
3. குப்பைகளை சேர்த்து வைப்பது
இந்து நம்பிக்கைகளின் படி, செல்வம் மற்றும் செழிப்பின் தெய்வமாக லட்சுமி தேவி கருதப்படுகிறார். லட்சுமி தேவி தூய்மையான இடத்தில் வசிப்பவர் மற்றும் தூய்மையை விரும்புபவர். எனவே வீட்டில் லட்சுமி தேவி எப்போதும் குடியிருக்க வேண்டுமானால், வீட்டை சுத்தமாக, குப்பைகளின்றி வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் சேரும் குப்பைகளை அவ்வப்போது அகற்றிவிட வேண்டும். குப்பைகளை வீட்டில் சேர்த்து வைத்திருந்தால், அது பண இழப்பை ஏற்படுத்தும்.
4. வியாழக்கிழமைகளில் நகம் மற்றும் முடியை வெட்டுவது
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வியாழக்கிழமைகளிலும், ஏகாதசி நாட்களிலும் நகங்களை வெட்டவோ, முடியை வெட்டவோ கூடாது. அப்படி செய்தால், அது லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாக்கி, வாழ்வில் பண நெருக்கடியை அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும்.
5. சூரிய அஸ்தமனத்திற்கு பின் குறிப்பிட்ட பொருட்களை மற்றவர்களுக்கு கொடுப்பது
இந்து மதத்தில் பால், தயிர் அல்லது பணம் போன்றவற்றை சூரிய அஸ்தமனத்திற்கு பின் மற்றவர்களுக்கு கொடுப்பது அசுபமாக கருதப்படுகிறது. சூரிய அஸ்தமனத்திற்கு பின் இந்த பொருட்களை மற்றவர்களுக்கு கொடுத்தால், அது நிதி நிலைமையில் நிலையற்ற தன்மையைக் கொண்டு வருவதோடு, வாழ்க்கையில் பண இழப்பை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. எனவே இந்த தவறை செய்வதைத் தவிர்த்திடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications