Latest Updates
-
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா?
இந்தியாவில் கல்வியறிவு மோசமாக உள்ள டாப் 10 மாநிலங்கள் இதுதான்... முதலிடத்தில் இருப்பது எந்த மாநிலம் தெரியுமா?
ஒருவர் வாழ்க்கையை வெற்றியை நோக்கி நகர்த்தும் சிறந்த ஆயுதம் கல்வி மட்டுமே. அதனால்தான் இந்தியாவில் கல்வியை வைத்தே எப்போதும் அரசியல் கட்டமைக்கப்படுகிறது. கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது இந்தியா தற்போது கல்வியில் கணிசமாக முன்னேறியிருந்தாலும், சில மாநிலங்களில் இன்னும் குறைந்த எழுத்தறிவு விகிதங்களே உள்ளன. எழுதப் படிக்கும் திறன் எழுத்தறிவு என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது ஒரு மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியமானது.
நாட்டின் சில பகுதிகளில், குறிப்பாக கிராமப்புற மற்றும் பழங்குடிப் பகுதிகளில், தரமான கல்வி என்பது மக்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. வறுமை, போதுமான பள்ளிகள் இல்லாமை, போதுமான வசதிகள் இல்லாதது மற்றும் கலாச்சார நம்பிக்கைகள் போன்ற காரணங்களால் இந்தியாவின் பல பகுதிகளில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை.

வட இந்தியாவின் பல பகுதிகளில் பெண்கள் பள்ளிக்குச் செல்வது தடைசெய்யப்படுகிறது, மேலும் குழந்தைகள் தங்கள் குடும்பங்களை பராமரிக்க வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும் இன்னும் சில மாநிலங்கள் கல்வியறிவில் பின்தங்கியுள்ளன. அவை எந்தெந்த மாநிலங்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஆந்திரப் பிரதேசம் - 72.6%
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஆந்திரப் பிரதேசம். ஆந்திரப் பிரதேசம் மிகக் குறைந்த கல்வியறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது. கிராமப்புற மற்றும் பழங்குடி மக்கள் உயர்தர கல்வியைப் பெற இயலாமையே முக்கிய காரணங்களில் ஒன்றாகும். குறிப்பாகப் பெண்களைப் பொறுத்தவரை, பல குடும்பத்தினர் இன்னும் கல்வியை விட வேலைக்கு அதிக முன்னுரிமை அளிக்கின்றன. போதுமான பள்ளி வசதிகள் இல்லாததாலும், ஆசிரியர் பற்றாக்குறையாலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.
பீகார் - 74.3%
பீகார் வறுமை மற்றும் போதுமான கல்வி வளங்கள் இல்லாததால், குறிப்பாக கிராமப்புறங்களில் போதுமான வசதிகள் இல்லாததால் மக்களால் கல்வியறிவின்மையால் பாதிக்கப்படுகிறது. பல குழந்தைகள் தங்கள் குடும்பங்களை பராமரிக்க பள்ளிக்குச் செல்வதை தவிர்க்கிறார்கள். சாதிய பாகுபாடுகளாலும், நிதி பற்றாக்குறையாலும் இங்கு மக்களுக்கு கல்வியறிவு கிடைப்பது அரிதாக இருக்கிறது.
மத்தியப் பிரதேசம் - 75.2%
மத்தியப் பிரதேசத்தில் பழங்குடி சமூகங்கள் மற்றும் வளர்ச்சியடையாத பகுதிகளில் பெரும்பாலும் அடிப்படை கல்வி வசதிகள் மக்களுக்கு கிடைப்பதில்லை. குறைந்த ஆசிரியர்-மாணவர் விகிதம், இளம் வயதிலேயே குழந்தை திருமணம் மற்றும் கல்வியின் முக்கியத்துவம் குறித்த புரிதல் இல்லாமை ஆகியவை மக்கள் கல்வியறிவு பெறுவதைத் தடுக்கிறது.
ராஜஸ்தான் - 75.8%
ராஜஸ்தானில் நிலவும் குறைந்த எழுத்தறிவு விகிதத்திற்கு பாலின சமத்துவமின்மையே முக்கிய காரணம். குறிப்பாக கிராமப்புறங்களில், பெண்கள் பள்ளிக்கு செல்வது தடைசெய்யப்படுகிறது. கடுமையான வானிலை மற்றும் நீண்ட பயணங்கள் காரணமாக குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்குச் செல்வது கடினமாக இருக்கிறது.
ஜார்கண்ட் - 76.7%
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பள்ளிகள் மிகவும் குறைவாக உள்ள தனிமைப்படுத்தப்பட்ட காட்டுப் பகுதிகளிலேயே பழங்குடியின மக்கள் பெரும்பகுதி வசிக்கின்றனர். மோசமான சாலைகள் மற்றும் குறைந்த வருமானம் போன்றவை மாணவர்களின் கல்விக்கான அணுகலைத் தடுக்கின்றன. இங்கு பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் வருமானத்தை நம்பியுள்ளன.
தெலுங்கானா - 76.9%
தெலுங்கானா தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்திருந்தாலும், நல்ல பள்ளிகள் இல்லாத பல வளர்ச்சியடையாத மாவட்டங்கள் இந்த மாநிலத்திலும் உள்ளன. இங்கு நிலவும் பொருளாதார சிக்கல்கள் மற்றும் நகர்ப்புற-கிராமப்புற பிளவுகள் பல குழந்தைகள், குறிப்பாக பெண்கள் பள்ளிக்குச் செல்வதைத் தடுக்கின்றன.
உத்தரப் பிரதேசம் - 78.2%
இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் உத்தரப் பிரதேசத்திற்கு மிகப்பெரிய பிரச்சினையே அதன் மக்கள் தொகைதான். கிட்டத்தட்ட 27 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை இருப்பதால், இங்கு அனைவருக்கும் கல்வி கற்பிப்பது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. மோசமான மாணவர்-ஆசிரியர் விகிதாச்சாரமும், போதுமான பள்ளிகள் இல்லாமையும் இங்க மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. இங்கு கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகள் வறுமை மற்றும் குழந்தைத் திருமணம் காரணமாக பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்துகிறார்கள்.
சத்தீஸ்கர் - 78.5%
ஜார்க்கண்ட் மாநிலத்தைப் போலவே, சத்தீஸ்கரிலும் அதிக பழங்குடி மக்கள் வசிக்கின்றனர், மேலும் நக்சல் நடவடிக்கைகளின் விளைவாக இங்கு மாணவர்கள் கல்வியில் அடிக்கடி இடையூறுகளை சந்திக்கின்றனர். குறிப்பாக சமூக விதிமுறைகள் மற்றும் போதுமான வசதிகள் இல்லாததால் பெண்களின் கல்வி இங்கு பாதிக்கப்படுகிறது , மேலும் பல குழந்தைகள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்துகின்றனர்.
லடாக் - 81%
கடுமையான வானிலை மற்றும் இந்தியாவின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட இடமாக இருப்பதால் லடாக்கில் பள்ளிப்படிப்பு மிகவும் சவாலானது. நீண்ட காலம் இங்கு நிலவும் குளிரால் பள்ளிகள் பல மாதங்களாக மூடப்படும். இதுமட்டுமின்றி உயரமான மலை கிராமங்களில், தகுதிவாய்ந்த ஆசிரியர்களின் பற்றாக்குறையும் உள்ளது.
ஜம்மு & காஷ்மீர் - 82%
கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது ஜம்மு & காஷ்மீரில் கல்வியில் முன்னேற்றம் இருந்தபோதிலும், அரசியல் அமைதியின்மை மற்றும் பிராந்திய மோதல்கள் ஜம்மு & காஷ்மீரை தொடர்ந்து பாதிக்கின்றன. ஊரடங்கு உத்தரவுகள் மற்றும் பொது முடக்கங்கள் அடிக்கடி கல்வியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆசிரியர்களின் பற்றாக்குறை மற்றும் போதுமான போக்குவரத்து வசதி இல்லாமை போன்றவை இந்த பகுதிகளில் பிரச்சினையை அதிகரிக்கின்றன.



Click it and Unblock the Notifications












