Latest Updates
-
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை!
September 2023 Horoscope: செப்டம்பர் மாதம் இந்த 5 ராசிக்காரங்களோட ஆரோக்கியத்துக்கு பெரிய ஆபத்து வரப்போகுதாம்..
Health Horoscope for September 2023: ஒவ்வொரு மாதமும் நமக்கு ஒவ்வொரு விதமான அனுபவங்களையும், வாய்ப்புகளையும் அளிக்கிறது. இந்த அனுபவங்கள் அந்த மாதம் உங்கள் ராசிக்கான கிரக நிலைகளைப் பொறுத்து அமைகிறது. அந்த வகையில் இன்று பிறந்திருக்கும் செப்டம்பர் மாதம் உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களைக் கொண்டுவரப்போகிறது.
"நோயில்லா வாழ்வே குறைவற்ற செல்வம்" என்று முன்னோர்கள் கூறுவார்கள். ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் ஆரோக்கியத்தில் பெரும்பாலான மக்கள் ஏழையாகவே உள்ளனர். ஜோதிட கணிப்புகள் உங்களின் எதிர்காலத்தில் வரப்போகும் ஆரோக்கிய சிக்கல்களை கணிக்கக்கூடியவை.

வரப்போகிற ஆரோக்கிய பிரச்சினைகளை முன்கூட்டியே தெரிந்து கொள்வது பெரிய ஆபத்துகளில் இருந்து உங்களை பாதுகாக்க உதவும். இந்த பதிவில் உங்கள் ராசியின் படி வரப்போகிற மாதம் உங்களின் ஆரோக்கியம் எப்படி இருக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
இந்த மாதம் இதயம் அல்லது வயிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது, மேலும் 16 ஆம் தேதிக்குப் பிறகு, குறைந்த ஆற்றலால் அன்றாடப் பணிகளை செய்வதில் தடங்கல்கள் ஏற்படலாம்.
தியானம் அல்லது தூக்கத்திற்கு முன் புத்தகம் வாசிப்பது மூலம் உங்கள் மனதை அமைதிப்படுத்தி மனஅழுத்தத்தை வெல்லலாம். மோசமான நாட்களுக்குப் பிறகு இது உங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
ரிஷபம்
தினசரி வாழ்க்கையின் அழுத்தங்கள் உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம் என்பதால், இந்த மாதத்தில் உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் சில மிதமான உடல்நலத் பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம், குறிப்பாக அஜீரணம் அல்லது மார்பு அசௌகரியம் ஏற்படலாம்.
மிதுனம்
இந்த மாதத்தின் பிற்பகுதியில், கழுத்து பதற்றம் மற்றும் தசை பலவீனம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வழக்கமான உடற்பயிற்சியை கடைபிடிப்பதன் மூலம் எந்த மந்தமான நிலையையும் சமாளிக்கலாம். சோம்பேறித்தனம் உங்களின் மிகப்பெரிய எதிரி என்பதை மறந்து விடாதீர்கள்.
கடகம்
இந்த மாதம் கடுமையான உணவு அல்லது உடற்பயிற்சி மாற்றங்களிலிருந்து ஒரு இடைவெளியை எடுத்துக் கொள்வது நல்லது. மன அழுத்த புயல்கள் உங்கள் நல்வாழ்வை பாதிக்கலாம், கண் பிரச்சினைகள் அல்லது ஒற்றைத் தலைவலி உங்களை அதிகம் பாதிக்கலாம். மொத்தத்தில், இது நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது மாதமாகும்.
சிம்மம்
இரத்த அழுத்தம் மற்றும் வெப்ப உணர்திறன் போன்ற பிரச்சினைகள் உங்களின் கவலைகளை அதிகரிக்கலாம். 17 ஆம் தேதிக்குப் பிறகு, அதிக சர்க்கரை உணவுகளை எடுத்துக் கொள்ளாதீர்கள். முழுமையான உடல் உழைப்பு, மென்மையான உடற்பயிற்சி மற்றும் புத்துணர்ச்சியூட்டும் உப்புக் குளியல் மூலம் உங்கள் ஆற்றலை அதிகரிக்கலாம். இந்த மாதம் உங்களுக்கு மிதமான மாதமாக இருக்கும்.
கன்னி
உங்கள் உணவுப் பழக்கத்தை சரிசெய்வது வயிற்றுப் பிரச்சனைகள் மற்றும் பருவகால காய்ச்சலுக்கு எதிராக உங்களை பாதுகாக்கும். மாதத்தின் பிற்பகுதியில் உங்களின் நீண்ட கால மனஅழுத்த பிரச்சினைகள் மற்றும் வயிறு உபாதைகள் முடிவுக்கு வரும். மொத்தத்தில் இந்த மாதம் உங்களுக்கு ஆரோக்கியத்தில் சிறப்பான மாதமாக இருக்கும்.
துலாம்
தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்க இந்த மாதத்தில் கடந்தகால ஆரோக்கிய பயிற்சிகளை மறுசீரமைக்கவும். கால், கண் அல்லது வயிற்றில் ஏற்படும் கவலைகள் காரணமாக ஆற்றல் குறைய வாய்ப்புள்ளது.
மாதத்தின் கடைசி வாரத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்கவும். எச்சரிக்கையுடன் இருந்தால் இந்த மாதத்தை பாதுகாப்பாக கடந்து விடலாம்.
விருச்சிகம்
உங்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு பலனளிக்கும் என்பதால் இந்த மாதம் உங்களுக்கு சிறப்பான மாதமாக இருக்கும். கடந்த காலங்களில் உங்களை பாடாய்படுத்திய நோய்கள் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது. சீரான உணவு, நிதானமான தூக்கம் மற்றும் வழக்கமான உடற்பயிற்சி ஆகியவற்றை கடைபிடிக்கவும்.
தனுசு
இந்த மாதம் உங்களின் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மார்பு அல்லது முழங்கால் பிரச்சனைகளைத் தூண்டும் மன அழுத்ததத்தை கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். மாதத்தின் பிற்பகுதியில் உங்களின் சீரான உணவுமுறை உங்களை ஆரோக்கிய பிரச்சினைகள் மற்றும் பருவகால காய்ச்சலில் இருந்து பாதுகாக்கலாம்.
மகரம்
உங்களின் கடுமையான மனஅழுத்தம் இந்த மாதம் தொல்லைதரும் வலிகளின் மூலம் வெளிப்படும். உங்களுக்கு பருவகால காய்ச்சல் அல்லது வயிற்றில் பிரச்சனைகள் இருந்தால், கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். விரைவில் குணமடைய மருத்துவர்களின் உதவியை நாடவும்.
கும்பம்
இந்த மாதம் மன அழுத்தத்தைச் சமாளிப்பது மிகவும் கடினமாக இருக்கும் மற்றும். மாதத்தின் பிற்பகுதியில் உங்கள் நோய்வாய்ப்பட்ட மனைவி அல்லது குழந்தைகளால் உங்கள் மனஅழுத்தம் அதிகரிக்கும்.
இரத்த அழுத்தம் மற்றும் வயிற்று பிரச்சனை உள்ளவர்கள் இந்த மதம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மொத்தத்தில் இந்த மாதம் உங்களுக்கு மனஉளைச்சல் நிறைந்த மாதமாக இருக்கும்.
மீனம்
இந்த மாதம் உங்கள் பிஸியான வாழ்க்கை முறை உங்கள் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கலாம். வயிறு பிரச்சினைகள், கண் அல்லது மார்பு பிரச்சினைகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும்.
மாதத்தின் இறுதி வாரத்தில் உங்கள் மனைவியின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த தயாராக இருங்கள். பெரிய உணவு மாற்றங்களைச் செய்வதற்கு முன் மருத்துவரை அணுகவும்.



Click it and Unblock the Notifications
