Latest Updates
-
வாகனங்களின் டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிகள் அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டுவரும் தூய ஆன்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ச்சலின் போது எந்த உணவுகளை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர்! -
ஐயங்கார் ஸ்டைல் சுட்ட கத்திரிக்காய் மசியல் ரெசிபி - செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
பாபா வாங்கா கணிப்புப்படி செப்டம்பர் மாத முதல் வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
உலகின் முதல் ஏவுகணையை உருவாக்கிய நாடு எது தெரியுமா? அமெரிக்காவும் இல்ல, ரஷ்யாவும் இல்ல -
1/2 கப் ஜவ்வரிசி இருந்தா.. இப்படி தோசை சுட்டு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம்
சனி, குரு, புதன் வக்ரமாக இருப்பதால் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிகளுக்கு பண மழை பொழியும்..
Saturn Jupiter Mercury In Retrograde Motion: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதைத் தவிர, வக்ரமாகி பின்னோக்கியும் பயணிக்கும். அப்படி கிரகங்கள் பின்னோக்கி பயணிக்கும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அதுவும் ஒரே நேரத்தில் பல முக்கியமான கிரகங்கள் வக்ரமாகும் போது, அதன் தாக்கம் இன்னும் அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் நீதிமான் சனி பகவான், புத்திகாரகன் புதன் மற்றும் செழிப்பிற்கு காரணமான குரு பகவான் ஆகிய மூன்று கிரகங்களும் வக்ர நிலையில் உள்ளன.

இப்படி மூன்று கிரகங்களும் வக்ரமாக இருப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த வக்ர காலத்தில் குரு, சனி மற்றும் புதனின் அருளைப் பெற்று பல அற்புதமான நன்மைகளைப் பெறுவார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
சனி, குரு, புதன் வக்ரமாக இருப்பதால், பணிபுரியும் ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. மேலும் பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவும் கிடைக்கும். சொத்துக்களில் முதலீடு செய்வது எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். வேலை இல்லாமல் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பரம்பரை சொத்துக்களால் நல்ல பலனைப் பெறக்கூடும்.
கன்னி
சனி, குரு, புதன் வக்ரமாக இருப்பதால், கன்னி ராசிக்காரர்கள் நிதி ரீதியாக சிறப்பான பலனைப் பெறுவார்கள். சிக்கிய பணம் இக்காலத்தில் கைக்கு வந்து சேரும். பேச்சால் பல காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். மேலும் உங்கள் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். முக்கியமாக இக்காலத்தில் உங்களின் ஆசைகள் நிறைவேறும். தடைப்பட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். வாகனம், சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
தனுசு
சனி, குரு, புதன் வக்ரமாக இருப்பதால் தனுசு ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபத்தையும், முன்னேற்றத்தையும் காண்பார்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். கடவுள் வழிபாட்டினால் மன அமைதி கிடைக்கும். இக்காலத்தில் பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். ஆனால் தாயின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications