Latest Updates
-
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள சமசப்தக் யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியும்! -
கொத்தமல்லி மாங்காய் சாதமும், உருளைக்கிழங்கு வறுவலும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாருங்க.. -
உஷார்.. இந்த 5 உணவுகள் ஒருவரது ஆயுளை பாதியாக குறைக்குமாம்.. எச்சரிக்கும் டாக்டர். பிள்ளை! -
கடகம் செல்லும் சுக்கிரன்: ஜூன் 08 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.! -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை குறையும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் இருப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி தேடிவருமாம் -
குருபெயர்ச்சியால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு கூரையை பிச்சுட்டு அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம் -
10 வரமிளகாயும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த கர்நாடகா கெம்பு சட்னியை அரைங்க - சுருக்குனு சூப்பரா இருக்கும் -
பாபா வாங்காவின் கணிப்பு படி 2026-ன் பிற்பகுதியில் உலகில் என்னென்ன சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
டெல்லியை ஆண்ட முதல் சுல்தான் யார்? அவர் எந்த வம்சத்தை சேர்ந்தவர் தெரியுமா?
நிலாவில் தங்குவதற்கு நீங்க ரெடியா? உங்ககிட்ட இத்தனை கோடி இருந்தா போதும்...அமெரிக்க நிறுவனத்தின் அறிவிப்பு...!
பூமிக்கும், சந்திரனுக்கும் இடையிலான தொடர்பு 1969-லிருந்தே தொடங்கிவிட்டது. ஆரம்பத்தில் விண்வெளிப் பபயணம் என்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. காலபோக்கில் மனிதர்களின் தொடர் முயற்சியாலும், தொழில்நுட்ப வளர்ச்சியாலும் நிலவுப்பயணம் என்பது மிகவும் எளிதானதாக மாறியது. தற்போது பல படிகள் முன்னேறி சந்திரனில் ஒரு ஆடம்பர ஹோட்டல் கட்டும் அளவிற்கு மனிதர்கள் முன்னேற்றமடைந்துள்ளனர்.
சந்திரனில் அமையவிருக்கும், வரலாற்றிலேயே முதல் ஹோட்டலில் தங்குமிடத்திற்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளன. நிலாவில் தங்கப்போகும் பயணிகள் அதற்காக மிகப்பெரிய தொகையை செலவு செய்ய வேண்டியிருக்கும். அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனமான கேலக்டிக் ரிசோர்ஸ் யூட்டிலைசேஷன் ஸ்பேஸ் (GRU Space), சந்திரனில் கட்டப்படும் ஹோட்டல் அறைகளுக்கான முன்பதிவுகள் திறக்கப்பட்டுள்ளதாக திங்களன்று அறிவித்தது. முன்கூட்டிய முன்பதிவுகளுக்கான கட்டணம் ஒரு நபருக்கு தோராயமாக ₹2.2 கோடி ரூபாயிலிருந்து தொடங்குகின்றன.

இந்த நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, இந்த திட்டத்தின் நோக்கம் சந்திரனில் ஒரு நீடித்த உள்கட்டமைப்பு மற்றும் குடியிருப்பை உருவாக்குவதாகும். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் இன்றுவரை, நாசாவின் அப்பல்லோ சந்திரப் பயணங்கள் மூலம் வெறும் 12 விண்வெளி வீரர்கள் மட்டுமே நிலவின் மேற்பரப்பில் கால் பதித்துள்ளனர். ஆனால், நீண்ட காலம் தங்குவதற்கான முதல் படிகளை தொடங்குவதன் மூலம் GRU ஸ்பேஸ் இதை மாற்ற விரும்புகிறது.
2032-ஆம் ஆண்டுக்குள் நிலவில் தளம் அமைக்கும் திட்டம்
2032-ஆம் ஆண்டுக்குள், விண்வெளிப் பயணத்தையும், சுற்றுலாவையும் இணைத்து, நிலவின் மேற்பரப்பில் மனிதர்களின் இருப்பை நிலைநிறுத்த GRU ஸ்பேஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பை அந்நிறுவனத்தின் 22 வயது நிறுவனர் ஸ்கைலர் சான் வெளியிட்டார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இது விண்வெளிச் சுற்றுலா அல்ல. இதுவரை பன்னிரண்டு மனிதர்கள் மட்டுமே நிலவுக்குச் சென்றுள்ளனர்," என்று அந்த இணையதளம் கூறுகிறது. "நிலவில் தங்கிய முதல் மனிதர்களில் ஒருவராக, எதிர்கால சந்ததியினர் நினைவுகூர நீங்கள் வழி வகுப்பீர்கள்." என்று கூறியுள்ளார்.
கமர்சியல் விண்வெளிப் பயணம் என்பது சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் சுற்றுலாப் பயணங்கள் அல்லது பூமியைச் சுற்றி வருவதை விடவும் பலமடங்கு வித்தியாசமானது. உலகின் பல நிறுவனங்கள் நாம் விண்வெளியை ஆராயும் விதத்தையும், பிற உலகங்களில் வாழ்ந்து பணியாற்றும் விதத்தையும் மாற்றுவதற்கான கனவில் கூட நினைக்க முடியாத திட்டங்களையும் கொண்டுள்ளன.
சந்திரனில் தங்குவதற்கு எவ்வளவு செல்வாகும்?
முன்பதிவுகளுக்கான ஆரம்ப கட்டணம் ஒரு நபருக்கு ₹2.2 கோடி என நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும், அடுத்தடுத்த முன்பதிவுகளுக்கு இது சுமார் ₹9 கோடி ($1 மில்லியன்) வரை உயர்கிறது. இருப்பினும், நிறுவனத்தின் அதிகாரிகள் இந்த பயணத்திற்கான மொத்த செலவு ₹90 கோடிக்கும் ($10 மில்லியன்) அதிகமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
இந்த அரிய பயணத்திற்கு முன்பதிவு செய்வதற்கு, பயணத்திற்கு முன் திரும்ப பெற முடியாத $1,000 டாலர் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் மற்றும் பின்புல சரிபார்ப்புகளுக்கும் உட்பட வேண்டும் என்று நிறுவனம் நிபந்தனை விதிக்கிறது. இதுமட்டுமின்றி கடுமையான மருத்துவ மற்றும் பொருளாதார தகுதி நிபந்தனைகளுக்கும் அவர்கள் உட்படுத்தப்படுவார்கள்.
முதல் கட்டப்பணிகள்
GRU ஸ்பேஸ் நிறுவனம், 2029-ஆம் ஆண்டில் ஒரு சந்திரனில் முதல்கட்ட பணிகளை அமைப்பதற்குத் தயாராக, அதற்கான பொருட்களை நிலவின் மேற்பரப்பிற்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அடுத்ததாக, சந்திரனின் மண்ணிலிருந்து செங்கற்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதே இதன் நோக்கம். இந்த செங்கற்கள் எதிர்காலத்தில் சந்திரனில் உருவாக்கப்படும் வாழ்விடங்களை கதிர்வீச்சு மற்றும் தீவிர வெப்பநிலையிலிருந்து பாதுகாக்கப் பயன்படுத்தப்படலாம்.
எதிர்காலத்தில் கட்டணம் குறையலாம்
சந்திரனில் தங்கும் காலம் இன்னும் வெகு தொலைவில் இருந்தாலும், GRU ஸ்பேஸ் நிறுவனம் பல சவால்களை எதிர்கொண்டாலும், இந்த அறிவிப்பு, சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்வதற்கான முன்பதிவுகளைத் தொடங்கும் முதல் வணிக நிறுவனமாக GRU ஸ்பேஸை மாற்றியுள்ளது. இதன் முதல்கட்ட கட்டணம் மிகவும் அதிகமாக இருந்தாலும் காலப்போக்கில் பலரும் இந்த பயணத்தைத் தொடங்கும்போது இந்த கட்டணம் குறைய வாய்ப்புள்ளதாக நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications
