Latest Updates
-
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 02 முதல் இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
மசாலா மினி இட்லி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும்
Ramadan 2024: புனிதமான ரமலான் மாதத்தில் செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள்!
Ramadan 2024: இஸ்லாமியர்களின் புனிதமான மாதமான ரமலான் மாதம் தொடங்கிவிட்டது. இஸ்லாமிய நாட்காட்டியானது சந்திர சுழற்சியை அடிப்படையாக கொண்டது என்பதால், ஒவ்வொரு ஆண்டும் இந்த ரமலான் மாதம் சுமார் 10 நாட்கள் மாறுகிறது.
இந்த ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் சூரிய உதயத்திற்கு முன் நோன்பை தொடங்கி, பகல் முழுவதும் எதுவும் உண்ணாமல், சூரிய அஸ்தமனத்திற்கு பின் நோன்பை முடிப்பார். இதில் சூரிய உதயத்திற்கு முன் உட்கொள்ளும் உணவை செஹ்ரி (Sehri) என்றும் சூரிய அஸ்தமனத்திற்கு பின் உண்ணும் உணவை இப்தார் (Iftar) என்றும் அழைப்பர்.

சூரிய அஸ்தமனத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் நேரங்கள் மாறுபடும். இந்த ஆண்டின் ரமலான் மாதத்தை எடுத்துக் கொண்டால், சவுதி அரேபியாவில் மார்ச் 10 ஆம் தேதி பிறை தென்பட்டதால், அங்கு மார்ச் 11 முதல் ரமலான் நோன்பு தொடங்கியது. இந்தியாவில் பிறை மார்ச் 11 ஆம் தேதி தெரிந்ததால், ரமலான் நோன்பு மார்ச் 12 ஆம் தேதி, அதாவது நாளை தொடங்குகிறது. மேலும் வசிக்கும் இடத்தைப் பொறுத்து நோன்பு கால அளவானது 12 முதல் 17 மணிநேரம் வரை நீடிக்கும். அதுவும் இந்தியாவில் முக்கிய நகர வாரியான ரமலான் மாதத்தின் செஹ்ரி மற்றும் இப்தார் நேரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
* டெல்லி: செஹ்ரி: காலை 05:18 ; இப்தார்: மாலை 06:27
* சென்னை: செஹ்ரி: காலை 05:08; இப்தார்: மாலை 06:20
* பெங்களூரு: செஹ்ரி: காலை 05:19; இப்தார்: மாலை 06:31
* அகமதாபாத்: செஹ்ரி: காலை 05:38; இப்தார்: மாலை 06:47
* ஹைதராபாத்: செஹ்ரி: காலை 05:16; இப்தார்: மாலை 06:26
* மும்பை: செஹ்ரி: காலை 05:38; இப்தார்: மாலை 06:48
* கொல்கத்தா: செஹ்ரி: காலை 04:35; இப்தார்: மாலை 05:45
* புனே: செஹ்ரி: காலை 05:34; இப்தார்: மாலை 06:44
* சூரத்: செஹ்ரி: காலை 05:38; இப்தார்: மாலை 06:47
* கான்பூர்: செஹ்ரி: காலை 05:06; இப்தார்: மாலை 06:15
இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் இந்த ரமலான் நோன்பு 29 முதல் 30 நாட்களுக்கு பின், ரம்ஜான் என்ற பண்டிகையுடன் ஏப்ரல் 10 ஆம் தேதி முடிவடைவதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புனிதமான ரமலான் மாதத்தில் நோன்பை கடைப்பிடிப்பதைத் தவிர, இஸ்லாமியர்கள் இந்த மாதம் முழுவதும் நபிகள் நாயகத்தின் போதனைகளையும் பின்பற்றுகிறார்கள். இப்போது ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகள் என்னவென்பதைக் காண்போம்.
ரமலான் மாதத்தில் செய்ய வேண்டியவைகள்:
* இஸ்லாமியர்களின் முக்கியமான கடமைகளுள் நோன்பு இருப்பது. அதுவும் ரமலான் மாதத்தில் தவறாமல் நோன்பு இருக்க வேண்டும்.
* ஒரு நாளைக்கு குறைந்தது 5 முறையாவது தொழுக வேண்டும்.
* ரமலான் மாதத்தில் மட்டுமின்றி, ஆண்டு முழுவதும் ஏழை எளியோருக்கு முடிந்தவரை தொண்டுகளை செய்ய வேண்டும்.
* ரமலான் நோன்பை அதிகாலையில் செஹ்ரியுடன் தொடங்கி, சூரிய அஸ்தமனத்திற்கு பின் இப்தாருடன் நோன்பை முடிக்க வேண்டும்.
* புனித குர்ஆன் நூலை ஓத வேண்டும்.
* ரமலான் நோன்பை மேற்கொள்ளும் போது கண்ணியமாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும்.
* இந்த புனிதமான மாதம் முழுவதும் பிரம்மச்சரியத்தை வேண வேண்டும். அல்லாவுடனான பிணைப்பை வலுப்படுத்த பிராத்தனைகளில் அதிகம் ஈடுபட வேண்டும்.
ரமலான் மாதத்தில் செய்யக்கூடாதவைகள்:
* ரமலான் மாதத்தில் நோன்பு இருக்கும் போது, சூரிய அஸ்தமனத்திற்கு முன் சாப்பிடவோ, நீர் அருந்தவோ கூடாது.
* மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த நோன்பு செல்லாது.
* யாருடனும் வாக்குவாதம், சண்டை அல்லது எதிர்மறையான தொடர்புகளை கொள்ளக்கூடாது. அமைதியாகவும், நேர்மறையான தொடர்புகளை வளர்ப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
* ரமலான் நோன்பு இருந்தால், இசையை கேட்பது, திரைப்படம் பார்ப்பது போன்றவற்றை செய்யக்கூடாது. தொழுகையில் அதிக நேரம் ஒதுக்கி அல்லாவை நினைவில் நிறுத்த வேண்டும்.
* கர்ப்பமாக இருந்தாலோ, தாய்ப்பால் கொடுத்தாலோ அல்லது மாதவிடாய் சுழற்சி இருந்தாலோ விரதத்தை தவிர்க்க வேண்டும்.
* ரமலான் மாதத்தில் தொழுகையை ஒருபோதும் தவறவிடக்கூடாது. மேலும் நோன்பை தாமதமாக திறக்கக்கூடாது.
* முக்கியமாக நோன்பு இருப்பவர்கள் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications