Latest Updates
-
1 கப் புதினா இருந்தா இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியர்களே நுழைய முடியாத இந்தியாவிலுள்ள இடங்கள் - இதில் 3 இடங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்காம் தெரியுமா? -
சூரியன்-சந்திரனால் உருவாகும் வியாதிபாத யோகத்தால் ஜூலை மாதம் பணக்கஷ்டத்தில் சிக்கப்போகும் 4 ராசிகள் -
உருளைக்கிழங்கு இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பொடிமாஸ் பண்ணுங்க - டேஸ்ட் டக்கரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி பெண்களின் கழுத்தை பார்த்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லிரலாமாம் - கவனிச்சு பாருங்க -
வரகரிசி மசாலா தோசை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு குழப்பமான நாளாக இருக்குமாம் -
கஜலட்சுமி யோகம் கடக ராசியில் இருப்பதால் கோடீஸ்வர யோகாக்கத்தால் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வேர்க்கடலையும், கொத்தமல்லியும் இருந்தா இந்த மாதிரி சுருக்குனு சட்னி அரைங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
July 2026: ஜூலை மாதத்தின் முக்கியமான நாட்கள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா?
உங்களின் அனைத்து பணக்கஷ்டங்களும் தீர இந்த ஒரு பூஜை செய்தால் போதுமென்று புராணங்கள் கூறுகிறது...!
கடவுள் வழிபாடு உங்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றும், அதில் பணக்கஷ்டமும் ஒன்றாகும்.
நம்முடடைய வாழ்க்கையை வழிநடாத்துவதற்கும், ஆசைகளையும், அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள பணம் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். பணமும் அதற்கான தேவையும்தான் இந்த உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது. பணப் பற்றாக்குறை என்பது நம்முடைய வாழ்க்கையை நேரடியாக பாதிக்கக் கூடிய ஒன்றாகும்.

அனைவருக்குமே பணத்தேவை என்பது இருக்கும், ஆனால் அனைவருக்கும் அவர்களுக்கு தேவையான பணம் கிடைக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. கடவுள் வழிபாடு உங்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றும், அதில் பணக்கஷ்டமும் ஒன்றாகும். உங்களின் பணத்தேவைகளை நிறைவேற்ற நீங்கள் செய்ய வேண்டிய பூஜை என்னவென்று இந்த தெரிந்து கொள்ளுங்கள்.

குபேரர்
இந்து மக்களின் நம்பிக்கைப்படி செல்வம் மற்றும் பணத்தின் கடவுள் ஆவார். அனைத்து யக்ஷர்களுக்கும் இவர்தான் அரசர் ஆவார். அவர் வானத்தின் தலைமை பொருளாளராக உள்ளார் மற்றும் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து செல்வங்களின் பாதுகாவலராக கருதப்படுகிறார். பொதுவான சித்தரிப்புப்படி குபேரர் குள்ளமாகவும், பெரிய வயிறுடனும், பின்புறத்தில் பெரிய பணப்பையையும் வைத்திருப்பார் என்று கூறப்படுகிறது. நம்பிக்கையுடனும், பக்தியுடனும் குபேரரை வழிபடுவது உங்களின் பணக்கஷ்டங்களை போக்கும் என்பது நம்பிக்கையாகும்.

குபேரரின் முக்கியத்துவம்
அசுர வேந்தர் இராவணன் குபேரனிடம் இருந்து நிறைய கடன் வாங்கியிருந்தார். வெங்கடேஸ்வரரின் திருமணத்திற்கும் குபேரர் கடன் கொடுத்ததாக கூறப்படுகிறது. இன்றும் அந்த கடனை அவர் திருப்பி கொடுப்பதாக நம்பிக்கை நிலவுகிறது. அனைத்து செல்வங்களின் பாதுகாவலராக குபேரர் உயரிய நிலையில் உள்ளார், இவரை உங்கள் வீட்டில் வைப்பது உங்களுக்கு செல்வத்தை வழங்கும் என்று புராணங்கள் கூறுகிறது.

குபேர் யந்திரத்தின் முக்கியத்துவம்
தங்கம், வெள்ளி அல்லது பஞ்சலோஹா உள்ளிட்ட மூன்று உலோகங்களில் ஏதேனும் ஒன்றில் குபர் யந்திரம் தயாரிக்கப்படுகிறது. இந்த யந்திரத்திற்கு தவறாமல் பூஜை செய்வது ஒருவரின் வாழ்க்கையிலிருந்து துரதிர்ஷ்டத்தை விலக்கி, அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் வீட்டிற்கு கொண்டு வரும். குபேர யந்திரத்தை வைக்க வேண்டிய இடம் உங்கள் லாக்கர் ஆகும். குபேர பூஜையின் போது இந்த யந்திரத்தை வெளியே எடுத்து பூஜையில் வைத்து விட்டு பூஜை முடிந்தவுடன் மீண்டும் அதனை லாக்கரில் வைத்துவிட வேண்டும்.

குபேர மந்திரம்
குபேர பூஜையின் போது குபேர யந்திரத்தை கூற வேண்டியது அவசியமாகும். நீங்கள் கூற வேண்டிய குபேர மந்திரம் " ஓம் யக்ஷயா, குபேரயா, வைஸ்ரவனயா, தனாதன்யதிபதியே, தனதானன்ய சமுத்ரே தேஹி தபாய ஸ்வாஹா " என்பதாகும்.

குபேர தியான மந்திரம்
மனுஜா பஹ்யா விமனா வர்ஸ்டிதம் கருடா ரத்னா நிபம் நிடினாயகம் சிவசகா முகுதாடி விபூஷிதம்- வரதேஹயம் பஜம் தம்திலம் அகஸ்ய தேவா தேவேசா மார்ட்சியலோகா ஹிட்சேச்சியா- பூஜயமி விதானேனா பிரசன்னா சுமுகோபவா

குபேர பூஜை வழிமுறை
இந்த பூஜை செய்ய மிகவும் பொருத்தமான நேரம் த்ரயோதசி (சந்திர மாதத்தின் பதின்மூன்றாம் நாள்) ஆகும். இருப்பினும், நீங்கள் செய்ய விரும்பும் எந்த நாளிலும் இதைச் செய்யலாம். பூஜை செய்யும் தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு உங்கள் பூஜையறையை சுத்தம் செய்யவும். குபேர யந்திரத்தை வெளியே எடுத்து அதனை மஞ்சள், குங்குமம் மற்றும் மஞ்சள் அரிசி கொண்டு அலங்கரிக்கவும். மேலும் அதன் மீது சில பூக்களை வைக்கவும்.

குபேர பூஜை வழிமுறை 2
குபேர பூஜையை தொடங்குவதற்கு முன் நெய் விளக்கேற்றி, ஊதுபத்தி கொளுத்தி வைத்து பிள்ளையாரை வழிபடவும். முதலில் குபேர தியான மந்திரத்தை கூறவும், அதன்பின் குபேர மந்திரத்தை 108 முறை கூறவும். வெல்லம், தேன் மற்றும் பழங்கள் வைத்து வழிபடவும். கற்பூரம் ஏற்றி குபேர யந்திரத்தின் முன் உங்கள் வேண்டுதல்களை கூறவும். யந்திரத்தின் முன் விழுந்து வணங்கிவிட்டு அதனை மீண்டும் லாக்கரில் வைக்கவும்.



Click it and Unblock the Notifications