Latest Updates
-
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த பொருட்களை ஒருபோதும் வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை அதிகரிக்கும்.. -
Malai Ice Cream: கொளுத்துற வெயிலுக்கு வெறும் 4 பொருளை வெச்சு குளுகுளு-ன்னு இப்படி ஐஸ்க்ரீம் செய்யுங்க.. -
வெயிலால் உங்க கை கருப்பா மாறுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்.. -
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க! -
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா?
வாரத்தின் எந்த நாளில் தங்கம் வாங்குவது அதிர்ஷ்டம் தெரியுமா? இந்த 4 ராசிக்காரங்க தங்கம் அணியவே கூடாதாம்...!
பூமியின் மிகவும் விலைமதிப்புள்ள உலோகம் என்றால் அது தங்கம்தான். தங்கம் அழகு மற்றும் செல்வத்தைக் குறிப்பதையும் தாண்டி நமது சமூகத்தில் கௌரவத்தின் அடையாளமாகவும், இலாபகரமான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.
பூமியின் மிகவும் விலைமதிப்புள்ள உலோகம் என்றால் அது தங்கம்தான். தங்கம் அழகு மற்றும் செல்வத்தைக் குறிப்பதையும் தாண்டி நமது சமூகத்தில் கௌரவத்தின் அடையாளமாகவும், இலாபகரமான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. நம் நாட்டு மக்களுக்கு இந்த மஞ்சள் உலோகத்தின் மீதான அளவில்லாத ஆசையால்தான் இந்தியா தங்கத்தின் மிகப்பெரிய நுகர்வோராக மாறியுள்ளது.

பொதுவாக பொங்கல், தீபாவளி, நவராத்திரி மற்றும் அனைத்திலும் மேலாக அட்சய திருதியை போன்ற நாட்களில் தங்கம் வாங்குவது சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த நாட்கள் திருவிழாவாகவும், மங்களகரமானதாகவும் கொண்டாடப்படுகின்றன. எனவே, இந்த நாட்களில் தங்கம் வாங்குவது உங்கள் வாங்குதலை அதிவேகமாக அதிகரிக்கும். ஆனால் சாதாரண நாட்களில் தங்கம் வாங்கும்போது எந்த நாட்களில் வாங்க வேண்டும் என்று யாரும் சிந்திப்பதில்லை. தங்கத்தை சில நாட்களில் வாங்குவது அதிர்ஷ்டத்தைக் கொடுப்பது போல சில நாட்களில் வாங்குவது துரதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். எந்த நாளில் தங்கம் வாங்க வேண்டும், வாங்க கூடாது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தங்கம் வாங்க சிறந்த நாள் எது?
சாதாரண நாட்களில் வியாழன் தங்கம் வாங்க மிகச்சிறந்த நாளாக கருதப்படுகிறது.செல்வம் மற்றும் செழிப்புக்கான தெய்வமான லட்சுமி தேவி இந்த நாளில் பிறந்ததாக கூறப்படுகிறது. பூச நட்சத்திரத்தின் அதிபதியாக வியாழன் இருப்பதால், வியாழன் அன்று பூச நட்சத்திரம் வரும் நாளில் தங்க நகைகள் அல்லது தங்கப் பொருட்களை வாங்குவதற்கு இரட்டிப்பு செழிப்பைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

தங்கம் வாங்க நல்ல நாள் எது?
திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு ஒரு வாரத்தில் தங்கம் வாங்க சிறந்த நாட்களாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் தங்கம் வாங்குவது தங்கத்தால் கிடைக்கும் நன்மைகளை முழுமையாக உங்களுக்குக் கொடுக்கும்.

எந்த நாளில் தங்கம் வாங்கக்கூடாது?
சனிக்கிழமை தங்கம் வாங்குவதற்கு நல்ல நாளாக இருப்பதில்லை. இந்த கிழமையில் தங்கம் வாங்குவது உங்களுக்கு அதிர்ஷ்டத்திற்கு பதிலாக துரதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். சனிபகவான் அதிபதியாக இருக்கும் இந்த நாளில் இரும்பு வாங்குவது உங்களுக்கு நல்லது.

எந்த கையில் அணிய வேண்டும்?
தங்கத்தின் மூலம் கிடைக்கும் ஆன்மீக நன்மைகளை முழுமையாகப் பெற, பெண்கள் தங்கள் இடது கையில் தங்க மோதிரத்தை அணிய வேண்டும், மற்றும் ஆண்கள் அதை தங்கள் வலது கையில் அணிய வேண்டும். கைகள் மாற்றி அணிவது உங்களுக்கு விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தலாம்.

எந்த ராசிக்காரர்கள் அணியலாம்?
மேஷம், கடகம், சிம்மம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு தங்கம் அதிர்ஷ்டகரமான மற்றும் மங்களகரமான உலோகம் என்று நம்பப்படுகிறது. அதேசமயம் விருச்சிகம் மற்றும் மீனம் ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன்களைத் தரும். மறுபுறம், ரிஷபம், மிதுனம், கன்னி மற்றும் கும்பம் ராசிக்காரர்கள் தங்கம் அணிவது அவர்களுக்கு நல்லதல்ல. இது தவிர, துலாம் மற்றும் மகர ராசிக்காரர்கள் குறைந்த அளவிலான தங்கத்தை அணிய வேண்டும்.

தங்கம் அணிவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
உடலில் தொடர்ச்சியாக தங்கம் அணிந்திருப்பது சிலருக்கு முடக்கு வாதம் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. இது இரத்த ஓட்டம், உங்கள் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்ஸிஜன் ஓட்டம் மற்றும் வெப்பநிலை ஒழுங்குமுறை ஆகியவற்றை ஊக்குவிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. மூட்டுவலி மூட்டுகளில் வலி மற்றும் வீக்கத்தை குறைக்கிறது.

எந்த விரலில் அணியலாம்?
தங்கமாக இருந்தாலும் சரி, மற்றபடியாக எந்த உலோக மோதிரமாக இருந்தாலும் சரி மக்கள் அதனை மோதிர விரலில் அணிவதையே விரும்புவார்கள். மோதிர விரலில் அணிவது நல்ல அதிர்ஷ்டம், செல்வம், புகழ் ஆகியவற்றைக் கொண்டுவருகிறது மற்றும் வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்கான ஆற்றலை உங்களுக்கு நிரப்புகிறது.இது தவிர கட்டைவிரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரலிலும் தங்க மோதிரத்தை அணியலாம். ஆனால் சுண்டு விரலில் ஒருபோதும் மோதிரத்தை அணியக்கூடாது.

எந்த நாளில் தங்கத்தை விற்கக்கூடாது?
வேத ஜோதிடத்தின் படி, தங்கத்தை செவ்வாய் கிழமைகளில் ஒருபோதும் விற்கக்கூடாது. ஏனெனில் இது உங்கள் வீட்டிலுள்ள அதிர்ஷ்டத்தை வெளியே அழைத்து சென்றுவிடும்.



Click it and Unblock the Notifications











