நடக்கும் மரம் முதல் கொதிக்கும் நதி வரை அமேசான் காடுகளின் பயமுறுத்தும் ரகசியங்கள்... ஷாக் ஆகாம படிங்க...!

அமேசான் மழைக்காடுகள் இயற்கையின் தீர்க்க முடியாத மர்மங்கள் மற்றும் அதிசயங்களில் ஒன்றாகும். 2.1 மில்லியன் சதுர மைல் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இதுவே உலகின் மிகப்பெரிய அகலமான மழைக்காடாகும்.

அமேசான் மழைக்காடுகள் இயற்கையின் தீர்க்க முடியாத மர்மங்கள் மற்றும் அதிசயங்களில் ஒன்றாகும். 2.1 மில்லியன் சதுர மைல் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இதுவே உலகின் மிகப்பெரிய அகலமான மழைக்காடாகும். தென் அமெரிக்காவில் அமைந்துள்ள அமேசான் மழைக்காடுகள் பிரேசில், பொலிவியா, பெரு, ஈக்வடார், கொலம்பியா, வெனிசுலா, கயானா, சுரினாம் மற்றும் பிரெஞ்ச் கயானா உள்ளிட்ட நாடுகளிலும் நீண்டுள்ளது.

Unknown Secrets of the Amazon Rainforest in Tamil

அமேசான் காடுகள் உலகின் மிகப்பெரிய காடு என்றும் அங்கு ஏராளமான மூலிகைகள் கிடைக்கும் என்றும் மட்டுமே நாம் அறிவோம். ஆனால் அமேசான் காடுகளில் எண்ணற்ற மர்மங்களும், ரகசியங்களும் நிறைந்துள்ளது. இந்த பதிவில் அமேசான் காடுகள் பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 நடக்கும் மரம்

நடக்கும் மரம்

ஹாலிவுட் படங்களிலும் சில சீரியல்களிலும் கிராபிக்ஸ் உதவியுடன் நடக்கும் மரங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் அமேசான் காட்டில் உண்மையிலேயே நடக்கும் பனைமரம் உள்ளது என்றால் நீங்கள் நம்புவீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும், ஹாலிவுட் படங்களில் வரும் பேய் மரங்கள் போல் வேகமாக ஓடவில்லை என்றாலும், இந்த நேரத்தில் அது தன் இடத்தை விட்டு நகர்ந்து கொண்டே இருக்கிறது. சூரிய ஒளி எந்த திசையில் வருகிறதோ அதே திசையில் இந்த மரம் நகர்வதுதான் இதற்கு மிகப்பெரிய காரணம். இதன் காரணமாக, அதன் புதிய வேர்கள் முன்புறம் உருவாகத் தொடங்கி, அதன் பின்னால் உள்ள வேர்கள் மெதுவாக முடிவடையும், அதனால்தான் இந்த மரம் முன்னோக்கி நகர்கிறது, ஆனால் அதன் வேகம் மிகவும் மெதுவாக உள்ளது.

விஷ டார்ட் தவளை

விஷ டார்ட் தவளை

உலகின் மிகவும் ஆபத்தான விலங்குகள் என்னவென்று கேட்டால் அனைவரும் வெவ்வேறு விலங்குகளின் பெயர்களை கூறுவார்கள். ஆனால் அமேசான் காடுகளில் இருக்கும் இந்த மிகச்சிறிய தவளைகள் அவற்றை விட ஆபத்தானவை. தங்க நிறத்தில் அழகாக காணப்படும் இது உலகின் அதிக நச்சுத்தன்மை வாய்ந்த விலங்குகளில் ஒன்றாகும். இந்த "டார்ட் தவளை" பூமியில் உள்ள மிகவும் நச்சு உயிரினங்களில் ஒன்றாகும், மேலும் இந்த சிறிய தோற்றமுடைய தவளையின் விஷம் 10 பேரைக் கொல்ல போதுமானது. இந்த தவளைகள் அமேசான் காடுகளில் உள்ள மற்ற ஆபத்தான உயிரினங்களிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள மிகவும் விஷத்தன்மை வாய்ந்தவை என்று விஞ்ஞானிகள் கூறினாலும், அவற்றின் விஷத்தின் உண்மையான மூலத்தைக் கண்டுபிடிப்பது இன்னும் கடினமாக உள்ளது.

பொட்டூ பறவை

பொட்டூ பறவை

பொட்டூ என்று பெயரிடப்பட்ட இந்த பறவை அமேசான் காடுகளில் காணப்படுகிறது மற்றும் தன்னை மறைக்கும் கலையில் நிபுணத்துவம் பெற்றது. சூழ்நிலைக்கு ஏற்ப உடலை சரி செய்து கொண்டு மரக்கிளை உடைந்தது போல் காட்சியளிக்கிறது. இந்த பறவை பொதுவாகக் காணப்படுவதில்லை, ஏனெனில் அது பெரும்பாலும் இரவில் வெளியே வந்து பகலில் ஒரு மரத்தின் உடைந்த கிளையாக மாறும், இதன் காரணமாக அவற்றைப் பார்க்க முடியாது. இந்த பறவை ஒரே தோரணையில் நீண்ட நேரம் அமர்ந்திருக்கும்.

கொதிக்கும் நதி

கொதிக்கும் நதி

நீங்கள் பல்வேறு வகையான நதிகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் அமேசானில் கொதிக்கும் நதி பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த கொதிக்கும் நதி தென்னமெரிக்காவின் அமேசான் காடுகளைத் தவிர வேறு எங்கும் இல்லை. இந்த ஆற்றின் நீளம் 4 மைல்கள் மற்றும் அகலம் சுமார் 25 மீட்டர். ஆனால் இந்த ஆற்றின் வெப்பநிலையைப் பற்றி நாம் பேசினால், இங்கு வெப்பநிலை 50 ° C முதல் 100 ° C வரை இருக்கும். இதனால்தான் இதற்கு கொதிக்கும் நதி என்ற பெயர் வைக்கப்பட்டது. இங்குள்ள உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, இந்த நதியின் வரலாறு பல நூற்றாண்டுகள் பழமையானது, இது சூரியனின் வெப்பத்தால் கொதிக்கும் நதி என்று அழைக்கப்படுகிறது, மேலும் இந்த நதியின் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அதன் நீர் குளிர்காலத்திலும் கொதிக்கும். அமேசான் மழைக்காடுகளைத் தவிர வேறு எங்கும் காணப்படாத இந்த நதி எவ்வளவு மர்மமானது மற்றும் தனித்துவமானது.

ரகசியமான பழங்குடியினர்கள்

ரகசியமான பழங்குடியினர்கள்

அமேசான் காடுகளில் மர்ம உயிரினங்கள் மட்டுமல்ல, பழங்குடியின மனிதர்களும் வாழ்கின்றனர். காடுகளின் ஓரத்தில் குடியேறிய பழங்குடியினரில் சிலர் வெளி உலகத்துடன் கலந்திருந்தாலும், சில பழங்குடியினர் இந்த காட்டில் உள்ளனர், அவர்களுக்கும் வெளி உலகத்திற்கும் நமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்களுக்கு வெளிஉலகம் பற்றி எதுவுமே தெரியாது. அந்த பழங்குடியினர் இன்னும் பழங்கால வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள், அதில் அவர்கள் விலங்குகளை கொன்று, அவற்றை நெருப்பில் எரித்து, உண்கிறார்கள். மரத்தின் இலைகளால் தங்கள் ஆடைகளை இன்றும் அணிகிறார்கள். அமேசான் காடுகளுக்குள் வாழும் இந்த பழங்குடியினர் ஒருபோதும் வெளி உலகத்தை சந்திக்க விரும்பவில்லை அல்லது வெளியில் உள்ளவர்களை தங்கள் உலகிற்குள் வர அனுமதிக்க மாட்டார்கள். இவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள சென்றவர்கள் யாருமே உயிருடன் திரும்பவில்லை. இவர்களின் வாழ்விடங்களும், புகைப்படங்களும் கூட ஹெலிகாப்டரில் இருந்து எடுக்கப்பட்டவைதான்.

புல்லட் எறும்பு

புல்லட் எறும்பு

நம் வீட்டில் இருக்கும் எறும்புகள் போல இவை சாதாரணமானவை அல்ல. இவை ஒருமுறை கடித்தால் துப்பாக்கி குண்டு துளைத்தது போல வலி ஏற்படும். அதனால்தான் இதற்கு பெயர் புல்லட் எறும்பு. அமேசான் காடுகளில் பழங்குடியினர்களும், ராட்சத பாம்புகள் மட்டும் ஆபத்தானவை அல்ல. இந்த சிறிய எறும்புகள் கூட ஆபத்தானவைதான். இவை கடித்தால் 24 மணி நேரத்திற்கு வலி இருக்கும்.

ராட்சத பாம்பு

ராட்சத பாம்பு

அமேசான் காடுகளில் சுமார் 70 வகையான பாம்புகள் காணப்படுகின்றன, அவற்றில் சில மிகப் பெரியவை. இவ்வளவு பெரிய பாம்பு இந்த பூமியில் இருக்கிறதா என்று சிந்திக்க வைக்கும் அளவிற்கு பாம்புகள் இருக்கிறது. நிஜ வாழ்க்கையில் அனகோண்டா மிகவும் பெரியது என்றாலும், அவற்றின் உண்மையான அளவு தெரியவில்லை, ஆனால் விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, அனகோண்டா 30 அடி வரை இருக்கும், மேலும் 2012 இல், டைட்டானோபோவா என கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு 42 அடி அளவு இருந்தது. ஆனால் அமேசான் காடுகளை சுற்றி வாழும் மக்கள் 160 அடி நீளமுள்ள பாம்பை பார்த்ததாக நம்புகிறார்கள், அதன் வாய் 6 அடி நீளம் இருந்ததாக கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

 வேம்பயர் மீன்

வேம்பயர் மீன்

வேம்பயர் மீன் (பயரா மீன் என்றும் அழைக்கப்படுகிறது) ஒரு மூர்க்கமான வேட்டைக்கார மீனாகும், அது ஒருபோதும் சண்டையிலிருந்து பின்வாங்குவதில்லை. பெரிய அடிப் பற்கள் மற்றும் ரேசர் கூர்மையான பற்களுடன் ஆயுதம் ஏந்திய இந்த தீய மீன் அமேசான் படுகையில் அதிகம் காணப்படுகிறது. இந்த மீன் மீன் நீரோட்டத்துடன் நீந்துகிறது, ரேபிட்ஸ் மற்றும் நீர்வீழ்ச்சிகள் வாம்பயர் மீன்கள் கூடும் பொதுவான இடங்களாகும். இந்த பயமுறுத்தும் மீன் அதன் பற்களால் இந்த பெயரைப் பெற்றுள்ளது, ஆனால் இந்த மீன்கள் மனிதர்களை துன்புறுத்தாது, அவற்றின் விருப்பமான உணவு மற்றொரு வேட்டைக்கார மீன் வகையான பிராணாவாகும்.

அச்சமூட்டும் கவலை

அச்சமூட்டும் கவலை

காடழிப்பு காரணமாக, ஒவ்வொரு நொடியும் 1.5 ஏக்கர் அமேசான் காடுகளை நாம் இழந்து வருகிறோம். ஒவ்வொரு நாளும், சுமார் 137 இனங்கள் அழிந்து வருகின்றன. இந்த அழிவு விகிதத்தைக் கருத்தில் கொண்டு, காடழிப்பு நிறுத்தப்படாவிட்டால், அமேசான் மழைக்காடுகள் முழுவதும் சுமார் 40 ஆண்டுகளில் அழிந்துவிடும் என்பது உறுதி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, July 21, 2022, 14:37 [IST]
Desktop Bottom Promotion