Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
வரப்போகும் குரு பெயர்ச்சியில் இருந்து மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
வாக்கிய பஞ்சாங்கத்தின் படி, ஐப்பசி மாதம் 27 ஆம் தேதி (நவம்பர் 13) மாலை 6.22 மணிக்கு குரு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயரவுள்ளார்.
ஜோதிடத்தில் உள்ள கிரகங்களின் நிலைகள் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் சில கிரகங்கள் அடிக்கடி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறும். இப்படி மாறுவதால் 20 சதவீதம் மட்டுமே பலன்கள் மாறுபடும். கிரக பெயர்ச்சிகள் என்று வரும் போது, சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி போன்றவை முக்கியமானதாக கருதப்படுகிறது. ஜோதிடத்தை அதிகம் பின்பற்றாதவர்களும் இந்த பெயர்ச்சிகளின் போது தங்கள் ராசிக்கான பலனைக் கவனிக்கிறார்கள்.

அந்த வகையில் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி, ஐப்பசி மாதம் 27 ஆம் தேதி (நவம்பர் 13) மாலை 6.22 மணிக்கு குரு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயரவுள்ளார். திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, கார்த்திகை 4 ஆம் தேதி (நவம்பர் 20) குரு பெயர்ச்சி நடைபெற உள்ளது. குரு பகவான் 2,5,7,9,11 ஆகிய வீடுகளைப் பார்த்தால், மிகவும் நல்ல பலனை அளிப்பார். ஆகவே குரு பகவான் மகரத்தில் இருந்து கும்ப ராசிக்கு செல்வதால் எந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இப்போது காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 9 ஆம் வீட்டில் இருந்து 10 ஆவது வீட்டிற்கு குரு பகவான் பெயர்ச்சி ஆக போகிறார். பத்தில் குரு இருந்தால், பதவி பறிப்போகும் என்பது விதி. ஆனால் இந்த குரு பெயர்ச்சியால் யாருடைய வேலையம் பறிப் போகாது. மாறாக சிறு மாற்றங்கள் ஏற்படும். இக்காலத்தில் கடினமாக உழைத்தால் முன்னேற்றத்தைக் காணலாம். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு அது நடக்க வாய்ப்புள்ளது. ஆனால் இக்காலத்தில் உங்கள் வேலை அல்லது தொழிலில் எந்த மாற்றம் வந்தாலும், அதை மனமாற ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள். இக்காலத்தில் இட மாற்றம், வீடு மாற்றம், வாகனம் மாற்றம் போன்றவை ஏற்படலாம். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம். இக்காலத்தில் வேலை மற்றும் தொழிலில் எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுக்காதீர்கள். கடன் வாங்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள். எதிலும் முதலீடு செய்துவிடாதீர்கள்.

கடகம்
கடக ராசியின் 7 ஆம் வீட்டில் இருந்து 8 ஆம் வீட்டிற்கு குரு இடம் மாறவுள்ளார். இதனால் இக்காலத்தில் துன்பங்கள், பிரச்சனைகள் போன்றவை உங்களில் செயல்களால் தான் நடக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இக்கால கட்டத்தில் நற்பெயர் கெட வாய்ப்புள்ளது. செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தேவையில்லாமல் வாயைக் கொண்டு சண்டையில் சிக்க வாய்ப்புள்ளது. எதிலும் தடைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. குரு பார்வை கடக ராசியின் மீது மோசமாக விழுவதால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். என்ன தான் கெட்டது நடந்தாலும், நல்லதும் நடக்கும். அதற்கு பல நல்ல வாய்ப்புகள் உருவாகும். புதிய முதலீடுகள், பங்கு சந்தை போன்றவற்றால் நிதியிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. சொத்து வாங்கும் யோகம் உண்டு. ஆனால் கோபத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

கன்னி
கன்னி ராசியின் 5 ஆம் வீட்டில் இருந்து 6 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பயணங்களின் போது கவனமாக இருக்க வேண்டும். வாகனம் ஓட்டும் போது மெதுவாக செல்ல வேண்டும். உங்களின் பேச்சு மற்றும் நடத்தையில் கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் கடன் பிரச்சனைகள் அதிகரிக்கும். தாயாரின் ஆரோக்கியத்திற்காகவும், கல்விக்காகவும் அதிக செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். சுப காரியங்கள் தள்ளிப் போகும். கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 5 ஆம் வீட்டில் இருந்து 4 ஆம் வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் நிதி நிதி ஓரளவாகவே இருக்கும். வீண் செலவுகள் ஏற்படும். தேவையற்ற வாக்குகளை கொடுத்து விட்டு, அதற்காக செலவுகளையும் செய்ய வேண்டியிருக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புள்ளது. பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வும் கிடைக்கலாம். இருப்பினும் அதற்காக வீண் செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். மொத்தத்தில் இந்த பெயர்ச்சியால் செலவுகள் அதிகமாக இருக்கும்.

மகரம்
மகர ராசியின் 2 ஆம் வீட்டிற்கு குரு செல்கிறார். பொதுவாக குரு இரண்டாவது வீட்டில் இருந்தால் நல்லது நடக்கும் என்று சொல்வார்கள். ஆனால் குரு இரண்டாம் வீட்டில் அமர்ந்து, 6 மற்றும் 8 ஆம் வீட்டைப் பார்ப்பதால், உடல்நல பிரச்சனைகள் அதிகரிக்கும். குடும்பம், தொழில், வியாபாரம் போன்ற இடங்களில் எதிரிகள் அதிகரிப்பார்கள். எதற்கும் யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள். எதிலும் கையெழுத்து போடாதீர்கள். முடிந்தளவு அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. என்ன தான் நிதி நிலை மற்றும் வேலை வாய்ப்பு சிறப்பாக இருந்தாலும், பல வழிகளில் பிரச்சனையும் வரக்கூடும்.

மீனம்
மீன ராசியின் 11 ஆம் வீட்டில் இருந்து 12 ஆம் வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் தொழில், வியாபாரம் போன்றவற்றில் பெரிய முன்னேற்றம் ஏதும் இருக்காது. வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைப்பதால், அலைச்சல்கள் அதிகரிக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படும். கடன் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நற்பெயர் பாதிக்கப்படும். பணிபுரிபவர்கள் திடீர் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வேலை இழப்பு, திடீர் இடமாற்றத்தால் மனதளவில் பாதிக்கப்படுவீர்கள். நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், திடீர் செலவுகள் அச்சுறுத்தும். ஆகவே எப்போதும் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள்.



Click it and Unblock the Notifications











