Latest Updates
-
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
சனி பகவானின் அருளால் பிப்ரவரி 24 முதல் இந்த 3 ராசிக்காரங்களோட வாழ்க்கையே மாறப் போகுது...
சனி பகவான் 2022 ஜனவரி 22 ஆம் தேதி அஸ்தமனமாகி, 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி உதயமாகி இயல்பு நிலையில் பயணிக்க உள்ளார். இக்காலத்தில் 3 ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ராஜயோகம் உருவாகிறது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கிரகங்களில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டாலும் அது ஒரு நபரின் வாழ்க்கையில் சிறு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டில் பல முக்கிய கிரகங்கள் இடம் மாறவுள்ளன. அதில் நீதியின் கடவுளான சனி பகவான் ராசியை மாற்றவுள்ளார்.

பெரிய கிரகங்கள் ராசியை மாற்றுவதற்கு முன்பு அஸ்தமனம் ஆகும். ஆகவே சனி பகவான் 2022 ஜனவரி 22 ஆம் தேதி அஸ்தமனமாகி, 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி உதயமாகி இயல்பு நிலையில் பயணிக்க உள்ளார். இக்காலத்தில் 3 ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ராஜயோகம் உருவாகிறது. இப்போது எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் உருவாகிறது மற்றும் அவர்கள் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம். உங்கள் ராசி இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
ஜோதிடத்தின் படி, மேஷ ராசியின் பத்தாவது வீட்டில் சனி உதயமாவதால் ராஜயோகம் உருவாகிறது. மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இவர் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். ஆகவே இந்த ராசிக்காரர்கள் ராஜ வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்பைப் பெறலாம். அரசியலில் இருப்பவர்கள் பெரிய பதவியைப் பெறலாம். பணிபுரிபவர்கள் வேலையை மாற்ற நினைத்தால் புதிய வேலை வாய்ப்பைப் பெறலாம். இல்லாவிட்டால் வருமான உயர்வைப் பெறலாம். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு, வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

ரிஷபம்
பிப்ரவரி 24 ஆம் தேதி சனி உதயமாவதால், ரிஷப ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ராஜயோகம் உருவாகிறது. இதனால் இக்காலம் எந்த ஒரு புதிய தொழிலையும் தொடங்க சிறந்த நேரமாக இருக்கும். அதிர்ஷ்டம் இக்காலத்தில் உங்களை ஆதரிக்கும். இக்காலத்தில் உங்களின் எந்த ஒரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். அதே வேளையில், தோல்வியுள்ள வேலையிலும் இக்காலத்தில் வெற்றியைக் காண்பீர்கள். மேலும் அரசியலில் ஆர்வம் உள்ள ரிஷப ராசிக்காரர்கள் இக்காலத்தில் அரசியலில் முயற்சி செய்யலாம்.

கடகம்
கடக ராசியின் 7 ஆவது வீட்டில் சனி உதயமாவதால், இந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகிறது. இந்நிலையில் இந்த ராசிக்காரர்களுக்கு கூட்டு வேலை பயனுள்ளதாக இருக்கும். மேலும் கூட்டாண்மை வேலையும் சிறப்பான முன்னேற்றத்தில் இருக்கும். வியாபாரிகள் மற்றும் பிற வேலையில் இருப்பவர்களுக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். அதோடு இக்காலத்தில் எண்ணெய், பெட்ரோலியம், சுரங்கம், இரும்பு போன்ற சனி தொடர்பான வேலைகளில் இருப்பவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications