Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
பைரவரை வணங்கி இன்று அன்னதானம் செய்யுங்க.. சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்..
தேய்பிறை அஷ்டமி திதியில் மகாதேவர் என்கிற சிவபெருமான் பைரவர் அவதாரம் எடுத்து பூமிக்கு வந்தார். இவரை வணங்கி தனக்கு அருளும், ஆசியும் வேண்டும் என்று ஆயுளையும், அழிவில்லா பொருளையும்..
பங்குனி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமியை திரியம்பகாஷ்டமி என்று கூறுவர். இந்த தினத்தில் அன்னதானம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், அன்ன தானம் செய்து சொர்ண ஆகர்ஷ பைரவரை வழிபட்டு அவரின் அருளாசியை பெறுவது அவசியமாகும்.

அஷ்டமி திதிகளில் சுப காரியங்கள் திருமணம், கிரகப்பிரவேசம், சொத்து வாங்குதல் உள்ளிட்டவை) மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால், இந்த திதிகள் தெய்வீக காரியங்களுக்கு தீட்சை பெறுவது, மந்திரங்கள் ஜெபிப்பது, ஹோமங்கள் உள்ளிட்டவை) உகந்தவை.
தேய்பிறை அஷ்டமி திதியில் மகாதேவர் என்கிற சிவபெருமான் பைரவர் அவதாரம் எடுத்து பூமிக்கு வந்தார். இவரை வணங்கி தனக்கு அருளும், ஆசியும் வேண்டும் என்று ஆயுளையும், அழிவில்லா பொருளையும், ஆன்ம சாந்தியையும் தரும் சனிதேவர் பணிந்தார்.

பைரவருக்கு தீபம்
ஸ்ரீபைரவருக்கு ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி திதிக்கு பின்பு வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும், செய்யும் தொழிலில் வளர்ச்சி காணவும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும், செல்வச் செழிப்போடு வாழவும், தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு செய்ய வேண்டும்.

தேய்பிறை அஷ்டமி
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை என இரண்டு தடவை அஷ்டமி திதி வந்தாலும், தேய்பிறை அஷ்டமி திதியே பைரவருக்கு மிகவும் உகந்ததாகும். தேய்பிறை அஷ்டமியில் பைரவரை ஏன் வணங்க வேண்டும் என்றால், அஷ்ட லட்சுமிகளும் அஷ்டமி அன்றுதான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு செல்வங்களை வாரி வழங்கி வருகின்றனர் என்பது ஆன்றோர்கள் மற்றும் சித்தர்களின் நம்பிக்கை.

குழந்தை பாக்கியம்
பங்குனி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமியை திரியம்பகாஷ்டமி என்று கூறுவர். இந்த தினத்தில் அன்னதானம் செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும். இன்று பங்குனி மாத திரியம்பகாஷ்டமி தினம் என்பதால், நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், அன்ன தானம் செய்து சொர்ண ஆகர்ஷ பைரவரை வழிபட்டு அவரின் அருளாசியை பெறுவது அவசியமாகும். நாமும் அதுபோல் தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட, அஷ்ட லட்சுமிகளின் ஆசி கிடைப்பதோடு, பைரவரின் பூரண ஆசிகளும் வரங்களும் ஒரே சமயத்தில் கிடைத்துவிடும்.

ராகு கால வழிபாடு
தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். மேலும், நமது ஏழு ஜென்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களின் பாவ வினைகள் தீரத் துவங்கும். அப்படி பாவ வினைகள் தீரத் துவங்கிய மறு நொடியே நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும்.

கடன் தீரும்
தேய்பிறை அஷ்டமி தினத்தில் பைரவரை வணங்குவதால் நீண்ட நாட்களாக வராமல் நிலுவையில் உள்ள வர வேண்டிய பணம் வந்துவிடும். அதேபோல், நாம் யாருக்காவது தர வேண்டிய கடன் தொகை இருந்தால் அந்தப் பணத்தை உடனடியாக திருப்பிக் கொடுக்கும் நிலை உருவாகிவிடும். எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.

நோய்கள் நீங்கும்
வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் தீரும். வலியும், வேதனையும் பெருமளவு குறையும். சனி பகவானின் கொடூர பார்வையின் தாக்கம் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத சம்பள உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரித்துக்கொண்டே செல்லும். பணம் சார்ந்த பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.



Click it and Unblock the Notifications