Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
Thaipusam 2024: வீட்டில் செல்வம் செழிக்கணுமா? அப்ப தைப்பூசம் விரதம் இருங்க...
Thaipusam 2024: சனி திசை செவ்வாய் புத்தி, செவ்வாய் திசை சனி புத்தி நடப்பவர்கள் பழனி மலை முருகனை தரிசனம் செய்தால் சனி, செவ்வாயினால் ஏற்பாடும் பாதிப்புகள் நீங்கும் என்பது நம்பிக்கையாகும். பழனிமலை முருகன் கோவில் செவ்வாய் தலமாக திகழ்கிறது. தைப்பூச திருநாள் நடைபெறும் இந்த நாளில் முருகனை நினைத்து விரதம் இருந்து தரிசனம் செய்தால் தோஷங்கள் நீங்குவதோடு செல்வ வளம் பெருகும்.
தைப்பூச நாளில், அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்து முடித்து, துளசி மாலை அல்லது ருத்ராட்ச மாலையை அணிந்து கொண்டு, பூஜை செய்ய வேண்டும். அன்றை தினம், காலை முதல் இரவு வரையிலும் திட உணவுகளை உண்ணாமல் திரவு உணவுகளான, இளநீர், ஜூஸ், பால் போன்ற எளிய உணவுகளை உண்ண வேண்டும். முடியாதவர்கள் பழங்களை மட்டும் சாப்பிடலாம்.

காலை, மாலை வேளைகளில், அருகிலுள்ள சிவாலயத்திற்கும், முருகன் கோவிலுக்கும் சென்று அங்கு நடைபெறும் பூஜையில் பங்கேற்று இறையனாரையும், முருகப் பெருமானையும் தரிசித்துவிட்டு, பின்னர் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
ஆறுமுகக் கடவுளான முருகனை வழிபடுவதற்கு வைகாசி விசாகம், சஷ்டி விரதம், திருக்கார்த்திகை விரதம், தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் ஆகிய நாட்கள் உகந்த நாட்களாக இருக்கின்றன. இருந்தாலும், இவற்றில் தைப்பூச திருநாள் முக்கிய பங்கு வகிக்கின்றது. உத்தராயண காலத்தின் தொடக்க மாதமான தை மாதத்தில் பவுர்ணமி திதியும் பூச நட்சத்திரமும் சேரும் நாளே தைப்பூச திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தை மாதமும் பூசம் நட்சத்திரமும்
ஜோதிட சாஸ்திரப்படி நட்சத்திர மண்டலத்தில் 8ஆவது நட்சத்திரமாக வருவது பூசம் நட்சத்திரம். ஒவ்வொரு மாதமும் பூசம் நட்சத்திரம் வந்தாலும், தை மாதத்தில் பவுர்ணமி திதியும் பூசம் நட்சத்திரமும் கூடும் நாளே புண்ணியம் நிறைந்த தைப்பூச நாளாகும். மேலும், குறிஞ்சி நிலக்கடவுளான முருகன் தமிழர்களுக்கு பிடித்தமான கடவுள் என்பதாலேயே உலகத் தமிழர்களால் தைப்பூசத் திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சிவனின் ஆனந்த நடனம்
தைப்பூச திருநாள் முருகப் பெருமானுக்கு மட்டும் உகந்த நாளாக இல்லாமல், எல்லாம் வல்ல எம்பெருமான ஈசனாருக்கும் மிக உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் தான் இறையனார் வியாக்ரபாதர், பதஞ்சலி மகரிஷி, மற்றும் பிரம்மா, விஷ்ணு ஆகியோருக்கு தன்னுடைய ஆனந்த திருநடனத்தை காட்டி தரிசனம் அளித்த திருநாளாகும். மேலும், பூசம் நட்சத்திரம் தேவகுருவான பிரகஸ்பதிக்கு உரிய நட்சத்திரமாகும்.

முருக பக்தர்களின் விரதம்
தைப்பூச திருநாளை பெரும்பாலான தமிழர்கள் முறைப்படி விரதம் இருந்து முருகன் கோவில்களுக்கும், சிவாலயங்களுக்கும் சென்று வழிபட்டு வருகிறார்கள். விரதம் இருப்பதில் ஐயப்ப பக்தர்கள் சற்றும் சளைத்தவர்கள் இல்லை. சபரிமலை ஐயப்பனுக்கு எப்படி கார்த்திகை மாதம் முதல் கடுமையான விரதம் இருந்து, தை மாத முதல் நாளன்று மகர ஜோதி தரிசன நிகழ்வைக் காண, பதினெட்டு படிகள் ஏறிச்சென்று ஐயப்பனை தரிசிக்கின்றனரோ, அது போலவே, முருக பக்தர்களில் பெரும்பாலானவர்கள், கார்த்திகை மாதம் முதலோ அல்லது மார்கழி மாதம் முதலோ, மாலை அணிந்து, காலை மாலை என இரண்டு வேளைகளிலும் குளிர்ந்த நீரில் குளித்து. பூஜைகள் செய்து, பஜனைகள் பாடி கோவிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்வதுண்டு.

பக்தர்களுக்கு பிடித்த பழனிமலை
தைப்பூச திருநாளில் முருகனைக் காண அறுபடை வீடுகளுக்கு படையெடுத்து சென்றாலும், மூன்றாம் படைவீடான பழனிமலை தண்டாயுதபாணியை தரிசிக்க வேண்டிதான் லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகம் முழுவதும் இருந்தும் விரதமிருந்து காவடி எடுத்துக்கொண்டும், அலகு குத்திக்கொண்டும் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்த பாதயாத்திரையாக படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.

பக்திப் பாசுரங்கள்
சிலர், கடுமையான விரத முறைகளை பின்பற்ற முடியாவிட்டாலும் கூட, தைப்பூச நாளில் விரதம் இருந்து முருகனையும், சிவபெருமானையும் வழிபடலாம். தைப்பூச நாளில், அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்து முடித்து, துளசி மாலை அல்லது ருத்ராட்ச மாலையை அணிந்து கொண்டு, பூஜை செய்ய வேண்டும். கூடவே முருகனைப் பற்றிய கந்த சஷ்டிகவசம், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்தர் கலிவெண்பா, தேவாரம், திருவாசகம் போன்ற பக்திப் பாசுரங்களை மாலை வரையிலும் பாராயணம் செய்து வரவேண்டும். பின்னர் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கோ அல்லது முருகன் கோவிலுக்கோ சென்று தரிசித்து வழிபட வேண்டும்.

இறையனார், முருகன் தரிசனம்
தைப்பூச தினத்தன்று, காலை முதல் இரவு வரையிலும் திட உணவுகளை உண்ணாமல் திரவு உணவுகளான, இளநீர், ஜூஸ், பால் போன்ற எளிய உணவுகளை உண்ண வேண்டும். முடியாதவர்கள் பழங்களை மட்டும் சாப்பிடலாம். மாலை வேளையிலும், அருகிலுள்ள சிவாலயத்திற்கும், முருகன் கோவிலுக்கும் சென்று அங்கு நடைபெறும் பூஜையில் பங்கேற்று இறையனாரையும், முருகப் பெருமானையும் தரிசித்துவிட்டு, பின்னர் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

செல்வவளம் சேர்க்கும் தைப்பூசம்
முருகப் பெருமானுக்கு உகந்த இந்த தைப்பூச விரதத்தை மனநிறைவுடன் செய்து வந்தால், நம்முடைய வறுமையும் துன்பமும் நீங்கப்பெற்று, வீட்டில் ஆனந்தமும், செல்வச் செழிப்பு ஏற்படும். அதோடு, நம்முடைய கைவிட்டுச் சென்ற பொருள் திரும்பவும் நம்மை வந்தடையும். குழந்தைகளின் கல்வியும் ஏற்றம் பெரும். தொழிலிலும் முன்னேற்றம் உண்டாகும் என்பது ஐதீகமாகும்.

சனி கொடுத்த வாக்கு
சனிபகவான் பரிகார தலமாக திருநள்ளாறு திகழ்கிறது. நளமகராஜா இங்கு சென்றுதான் சனிதோஷம் நீங்கப்பெற்றதாக புராண கதைகள் சொல்கின்றன. நித்யநாதன் என்ற மன்னனிடம் அருளிய சனிபகவான், பழனிமலைக்கு வந்து தன்னை வழிபட்டால் விமோசனம் தருவேன் என்று கூறியுள்ளார். பொதுவாகவே செவ்வாயும் சனியும் பகை கிரகங்கள். ஆனால் செவ்வாய் திசை, சனி திசை, செவ்வாய் புத்தி, சனி புத்தி நடப்பவர்கள் பழனிமலை முருகனை தரிசித்தால் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.



Click it and Unblock the Notifications