Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
பொங்கல் பண்டிகையில் கரும்பை ஏன் நாம் வைக்கிறோம்? அதற்கான காரணம் என்ன தெரியுமா?
வாழ்க்கையில் நாம் அனைவரும் முன்னேற கடினமாக உழைக்க வேண்டியது அவசியம். கடின உழைப்பு நுனிக்கரும்பை போல ஆரம்பத்தில் இனிமை தராது. ஆனால் போகப்போக அடிக் கரும்பின் இனிப்பைப் போல அதிக வெற்றியையும் மகிழ்ச்சியையும் உங்களுக்கு தரும்
தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் கோலாகலமாக கொண்டப்படுகிறது. மார்கழி கடைசி நாள் தீமைகள் நம்மை விட்டு அகல போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தை முதல் நாள் தமிழர்களின் திருவிழாவாக தைப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அடுத்து 3 மற்றும் நான்காம் நாள் மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் விழா கொண்டாடப்படும். பொங்கல் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது சர்க்கரை பொங்கல் மற்றும் இனிக்கும் கரும்பு. நாம் பொங்கல் வைக்கும்போது கரும்பை பொங்கல் பானைக்கு அருகில் வைத்து வழிபடுவோம். ஆனால், கரும்பு ஏன் பொங்கலுக்கு இன்றியமையாதது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

ஆம், இந்த கரும்பு பொங்கல் பண்டிகையில் இன்றியமையாத ஒன்றாக இருப்பதற்கு காரணம் உள்ளது. பொங்கல் பண்டிகையை பொருத்தவரை விவசாயத்தை ஒப்பிட்டு இந்த விழாவானது கொண்டாடப்படுகிறது. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களையும் ஒப்பிட்டு தமிழர்கள் இந்த விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்கள். கரும்பு பொங்கல் பண்டிகையில் இன்றியமையாத ஒன்றாக இருப்பதற்கான காரணம் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

சிவனுடன் தொடர்புடைய கதை
கரும்பு இனிப்பு மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கிறது. ஆனால் பொங்கலின் போது கரும்பு பரவலாக பயன்படுத்தப்பட்டதற்கு சிவனுடன் தொடர்புடைய ஒரு கதையும் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு பெரும் பொங்கல் நாளில், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள யானையின் கல் உருவத்திற்கு கரும்பு ஊட்ட சிவபெருமான் அற்புதங்கள் செய்ததாக கூறப்படுகிறது. மீனாட்சியம்மன் கோயிலில் சிவபெருமான் சுந்தரேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார், மேலும் கோயிலில் நிகழ்வின் அடிப்படையில் ஒரு கல் செதுக்கப்பட்டுள்ளது.

கரும்பு ஏன் முக்கியம்?
பொங்கலுக்கு கரும்பு முக்கியமானது. செங்கரும்பு மற்றும் நாட்டு கரும்பு வைத்து சூரியன் மற்றும் மாடுகளை நாம் வணங்குகிறோம். கரும்பை கடிக்காமல் பொங்கல் பண்டிகையை நாம் கொண்டாடுவதில்லை. நாம் கரும்பை சுவைப்பதில் ஒரு தத்துவம் அடங்கியுள்ளது. ஆம், கரும்பின் எல்லாப் பகுதியும் இனிப்பைத் தருவதில்லை. நுனிக் கரும்பு லேசான இனிப்புடன் அதிக அளவில் உப்புக் கரிப்பதுபோலிருக்கும். நடுக்கரும்பு கொஞ்சம் இனிமையாக இருக்கும். ஆனால், அடிக் கரும்புதான் மிகவும் இனிப்பாக இருக்கும்.

கரும்பு சொல்லும் தத்துவம்
அதுபோல வாழ்க்கையில் நாம் அனைவரும் முன்னேற கடினமாக உழைக்க வேண்டியது அவசியம். கடின உழைப்பு நுனிக்கரும்பை போல ஆரம்பத்தில் இனிமை தராது. ஆனால் போகப்போக அடிக் கரும்பின் இனிப்பைப் போல அதிக வெற்றியையும் மகிழ்ச்சியையும் உங்களுக்கு தரும். இந்த தத்துவத்தை வயதில் மூத்தவர்கள் மற்றும் பெரியவர்கள் நமக்கு கூறுவார்கள். மேலும் கரும்பின் வெளிப்புறம் கடினமாகவும், கரடுமுரடாக வளைவுகளும், அரிப்பை ஏற்படுத்தும் முட்கள்கொண்ட தோகையை கொண்டிருக்கும். கடினமான தோற்றத்தை வெளிப்படுத்தும் கரும்பை உடைத்து சுவைப்பது நமக்கு கொஞ்சம் சிரமம்தான். ஆனால், அதை செய்யும்போது உட்புறத்தில் இருக்கும் இனிமையான கரும்பு சாறு கிடைக்கும்.

இனிமையான வாழ்க்கை
அதுபோல வாழ்க்கையில் எத்தனை கடுமையான சோதனைகள் பிரச்சனைகள் வந்தாலும் அவற்றைக் முயற்சியோடு கடந்து செல்ல வேண்டும். அந்தக் கரடுமுரடான பாதையை சலிப்பின்றி கடந்து சென்றால் இனிமையான வாழ்க்கை நீங்கள் பெற முடியும் என்பதுதான் இந்த கரும்பு உணர்த்துகிறது. பொங்கல் பண்டிகையில் மட்டுமல்லாது, அனைத்து நாளும் இது ருசிக்கப்படும். ஆனால், தமிழர்களின் வாழ்வோடு பண்பாடோடு கலந்த பொங்கல் பண்டிகையில் முக்கிய இடம் கரும்புக்கு உண்டு.

இறுதி குறிப்பு
கரும்பைத் தவிர, பொங்கலின் போது சில மஞ்சள் கொத்து, மா இலை, ஆவாரம் பூ, வாழை இலை மற்றும் வாழைப்பழம் வைத்து இறைவனை வழிபடுகிறார்கள். இது தீமைகளை விலக்கி நன்மையளிக்கும் என்று நம்பப்படுகிறது, எனவே இது வீடுகளின் முன் வைக்கப்படுகிறது. ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் உள்ளதாக நம் முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள்.



Click it and Unblock the Notifications