Latest Updates
-
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க..
மகரம் செல்லும் வக்ர சனியால் ஜூலை 12 முதல் இந்த 5 ராசிக்காரங்க அதிக பிரச்சனையை சந்திக்கப் போறாங்க..
2022 ஜூலை 12-ல் வக்ர சனி மகர ராசிக்கு செல்வதால் அதிக பிரச்சனைகளை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
நீதியின் கடவுளான சனி பகவான், ஒவ்வொருவரின் செயல்களுக்கு ஏற்ப பலனை அளிக்கக்கூடியவராக கருதப்படுகிறார். நல்ல செயல்களை செய்பவர்களுக்கு நல்ல பலனையும், தீய செயல்களை செய்பவர்களுக்கு கெட்ட பலனையும் சனி பகவான் அளிக்கிறார். ஜோதிடத்தில் சனிப் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றும் சனி, அனைத்து கிரகங்களிலும் மெதுவாக நகரும் கிரகமாகும். எனவே சனியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.

இந்த ஆண்டு சனிப் பெயர்ச்சி இரண்டு கட்டங்களாக நடக்கிறது. அதில் 2022 ஏப்ரல் 29 ஆம் தேதி சனி மகரத்தில் இருந்து கும்ப ராசிக்குள் நுழைந்தார். தற்போது ஜூலை 12 ஆம் தேதி சனி வக்ர நிலையில் மகர ராசிக்கு செல்லவுள்ளார். அதன் பின் 2023 ஜனவரி 17 ஆம் தேதி கும்ப ராசிக்கு மீண்டும் செல்வார். சனியின் இந்த மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் சில ராசிக்காரர்களுக்கு சாதகமாகவும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் அதிக பிரச்சனைகளும் ஏற்படலாம். இப்போது 2022 ஜூலை 12-ல் வக்ர சனி மகர ராசிக்கு செல்வதால் அதிக பிரச்சனைகளை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டில் வக்ர சனி பெயர்ச்சி நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் உங்கள் வாழ்க்கையில் பல தடைகள் மற்றும் தாமதங்கள் ஏற்படலாம். நிலுவையில் உள்ள வேலைகளில் இன்னும் தடைகளை சந்திக்க நேரிடும். ஆனால், ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சில முக்கிய விஷயங்களுக்காக பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். நிதி பிரச்சனையால் மனக் கவலைகள் அதிகரிக்கும். இக்காலத்தில் உங்கள் தந்தையுடனான உறவு நன்றாக இருக்காது. நீங்கள் புதிய தொழில் தொடங்க விரும்பினால், சற்று தள்ளிப் போடுங்கள். ஏனெனில் இக்காலம் அதற்கு சாதகமானது அல்ல.

மிதுனம்
மிதுன ராசியின் 8 ஆவது வீட்டில் சனி வக்ர பெயர்ச்சி நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் பணியிடத்தில் மன அழுத்தத்தை உணர்வீர்கள். உங்களின் காரியங்களில் சில தடைகள் ஏற்படும். வாழ்வில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். இதனால் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். நிதி நிலைமை சற்று மோசமாக இருக்கும். பணம் வருவதில் சில தடைகள் ஏற்படும்.

கன்னி
கன்னி ராசியின் 5 ஆவது வீட்டில் சனி வக்ர பெயர்ச்சி நிகழ்கிறது. இதனால் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பங்கு சந்தையில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். எந்த மாதிரியான திட்டங்களைத் தீட்டினாலும், அதை தடைகள் ஏற்படும். உடன்பிறப்புகளுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள், சற்று கவனமாக வேலை செய்ய வேண்டும். திருமண வாழ்க்கையைப் பொறுத்தவரை, வாழ்க்கைத் துணையுடனான உறவில் சில பதட்டங்கள் ஏற்படலாம்.

மகரம்
மகர ராசியின் முதல் வீட்டில் சனி வக்ர பெயர்ச்சி நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் வாழ்க்கையின் பல பகுதிகளில் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். உங்கள் அன்புக்குரியவர்களுடனான உறவுகள் மோசமடையக்கூடும். உங்களின் திருமண வாழ்க்கை மோசமடையக்கூடும். நிதி பிரச்சனைகள் அதிகரிக்கும். உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

கும்பம்
கும்ப ராசியின் 12 ஆவது வீட்டில் சனி வக்ர பெயர்ச்சி நிகழ்கிறது. இதனுடன் ஏழரைச் சனியும் கும்ப ராசியில் இருப்பதால் பல ஏற்ற இறக்கங்களைச் சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் குழப்பம் இருக்கும் மற்றும் வேலையில் அவசரம் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் தவறான புரிதல்கள் அதிகரிக்கும். சில பழைய நோய்களும் உங்களைத் தொந்தரவு செய்யலாம். உங்களால் பணத்தை சேமிக்க முடியும் என்றாலும், செலவுகளை கட்டுப்படுத்த முடியாது.

சனி தோஷம் குறைவதற்கான பரிகாரங்கள்:
* சனியின் தோஷத்தை போக்க தினமும் அனுமன் சாலிசாவை பாராயணம் செய்ய வேண்டும்.
* சனி பகவானுக்குரிய மந்திரங்களை சொல்வதும் நல்ல பலன் தரும்.
* ஆலமரத்திற்கு அடியில் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றுவது சனி தோஷத்தைக் குறைக்கும்.
* ஏழைகளுக்கு தானம் செய்வது சனி தோஷத்தைக் குறைக்கும்.

சனி மந்திரம்
சனி தோஷத்தில் இருந்து விடுபட பின்வரும் சனி மந்திரத்தை சொல்லலாம்.
"நீலாஞ்சன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம் சாயா மார்த்தாண்ட
ஸம்பூதம் தம் நமாமி ஸனைச்சரம்."



Click it and Unblock the Notifications
