Latest Updates
-
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா?
2022 சனி பெயர்ச்சியால் ஏப்ரல் 29 முதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
சனி பகவான் கும்ப ராசிக்கு செல்வது மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளையும் பாதிக்கும். சனி பகவானின் ராசி மாற்றம் பல ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை அளித்தாலும், சில ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது.
நவகிரகங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே கிரகங்களின் ராசி மாற்றங்கள் மற்றும் சேர்க்கை போன்றவை ஒருவரது வாழ்வில் பெரிய மாற்றத்தையே உண்டாக்குகின்றன. நவகிரகங்களில் சனி பகவான் ஒருவரது கர்ம வினைகளுக்கு ஏற்ப பாரபட்சமின்றி பலன்களை தரக்கூடியவர். இதனால் இவரை நீதிமான் என்றும் அழைப்பதுண்டு. இப்படிப்பட்ட சனி பகவான் கிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வதற்கு 2 1/2 ஆண்டுகள் ஆகும்.

இந்நிலையில் சனி பகவான் 2022 ஏப்ரல் 29 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார். ஏற்கனவே சொந்த ராசியில் பயணிக்கும் சனி பகவான், மீண்டும் மற்றொரு சொந்த ராசிக்கு செல்கிறார். சனி பகவான் கும்ப ராசிக்கு செல்வது மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளையும் பாதிக்கும். சனி பகவானின் ராசி மாற்றம் பல ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை அளித்தாலும், சில ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. இப்போது 2022 சனி பெயர்ச்சியால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
கும்பம் செல்லும் சனி பகவானால், மேஷ ராசிக்காரர்கள் சில சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். இப்பெயர்ச்சிக்கு பின் நீதிமன்ற வழக்குகளால் அடிக்கடி நீதிமன்றத்தை சுற்ற வேண்டியிருக்கும். யாருடனும் வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். அதேப் போல் யாருடனும் பகைமை கொள்ளாதீர்கள். இக்காலத்தில் மேஷ ராசிக்காரர்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். முடிந்த அளவு பணத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் வரலாம்.

சிம்மம்
2022 சனிப் பெயர்ச்சியானது சிம்ம ராசிக்காரர்களுக்கு சிரமங்களை உருவாக்கலாம். இக்காலத்தில் நன்கு திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் உங்களின் இமேஜ் பாதிக்கப்படலாம். மற்றவர்களுக்கு தீமை செய்வதைத் தவிர்க்கவும் மற்றும் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு நடப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இக்காலத்தில் பண இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும். உங்கள் இலக்கை அடைய சில சவால்களை சனி பகவான் உருவாக்குவார். இருப்பினும் அதற்காக கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

கன்னி
2022 சனி பெயர்ச்சியானது கன்னி ராசிக்காரர்களுக்கு குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளையும், கூடவே பணப்பிரச்சனைகளையும் தருவார். எனவே இக்காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குழந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மாணவர்கள் வெற்றி பெறுவதில் சிரமங்களை சந்திக்க நேரிடும். நிதி பிரச்சனைகள் தலைதூக்கும். கடன் வாங்க வாய்ப்புள்ளது. உண்ணும் உணவில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.

சனி பகவானை மகிழ்விக்க செய்ய வேண்டியவைகள்:
கோபமாக இருக்கும் சனி பகவானை குளிர்விக்கவும், சனி பகவானின் மோசமான தாக்கத்தைத் தவிர்க்கவும் ஒருசில விஷயங்களை செய்ய வேண்டும். அவை பின்வருமாறு:
* சனிக்கிழமை அன்று சனி பகவானுக்கு அன்று கடுகு எண்ணெயை வழங்குங்கள்.
* ஏழை எளியோருக்கு உதவுங்கள்.
* ஆடைகளை தானமாக வழங்குங்கள்.



Click it and Unblock the Notifications











