Latest Updates
-
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
இன்னைக்கு இந்த பொருட்களை தானம் பண்ணுனா.. உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறுமாம்...
நிர்ஜல ஏகாதசியானது பீம ஏகாதசி மற்றும் பாண்டவ ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாளில் விஷ்ணு பகவானுடன் லட்சுமி தேவியும் வணங்கப்படுவார். இந்த ஏகாதசி அன்று லட்சுமி தேவிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்வது நல்லது.
இந்து மதத்தில் ஏகாதசி விரதம் மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு மாதமும் ஏகாதசி இரண்டு முறை வருகிறது. இந்நாளில் விஷ்ணு பகவானை மக்கள் வணங்குவார்கள். ஒவ்வொரு மாதத்தில் வரும் ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. ஏகாதசியிலேயே வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். அதற்கு அடுத்தப்படியாக நிர்ஜல ஏகாதசி மிகவும் மகிமை வாய்ந்தது. இந்து நாட்காட்டியின் படி, நிர்ஜல ஏகாதசி ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி அன்று கொண்டாடப்படும். இந்த வருடம் நிர்ஜல ஏகாதசி ஜூன் 21 ஆம் தேதி வருகிறது.
நிர்ஜல ஏகாதசியானது பீம ஏகாதசி மற்றும் பாண்டவ ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாளில் விஷ்ணு பகவானுடன் லட்சுமி தேவியும் வணங்கப்படுவார். இந்த ஏகாதசி அன்று லட்சுமி தேவிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்வதன் மூலம், வீட்டில் உள்ள பணப்பிரச்சனை நீங்கும்.

கடுமையான விரதம்
நிர்ஜல ஏகாதசி விரதமானது மிகவும் கடுமையானது. ஏனெனில் இந்த ஏகாதசி விரதமிருப்பவர்கள் நீர் கூட அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட விரதம் இருந்தால், விரதமிருப்பவரின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும். இது தவிர, இந்த ஏகாதசி அன்று தானம் வழங்குவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இப்போது நிர்ஜல ஏகாதசி அன்று என்னென்ன பொருட்களை தானமாக வழங்குவது நல்லது என்பதைக் காண்போம்.

குளிர்ச்சியான பொருட்களை தானம் செய்யலாம்
நிர்ஜல ஏகாதசி தண்ணீரின் முக்கியத்துவத்தைக் கூறுவதாக சொல்லப்படுகிறது. ஆனி மாதத்தின் கடுமையான வெப்பத்தில் ஒருவர் குளிர்ச்சியான பொருட்களை தானம் செய்வது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. ஆனி மாதத்தில் வெப்பம் உச்சத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே குளிர்ச்சியான பொருட்களை நிர்ஜல ஏகாதசி அன்று தானமாக வழங்க வேண்டும். அதனால் நிர்ஜல ஏகாதசி அன்று பலர் சர்பத் போன்ற பானங்களை தானமாக வழங்குகிறார்கள்.

காலணிகளை தானமாக வழங்கலாம்
வேதங்களின் படி, ஏகாதசி நாளில் பிராமணர்களுக்கு காலணிகளை தானமாக வழங்குவது மிகவும் புனிதமாக கூறப்படுகிறது. இது தவிர, உணவு தானம், குடை தானம், படுக்கை தானம், உடை தானம் போன்றவற்றை வழங்குவது மிகச்சிறப்பான பலனை அளிக்கும். வேண்டுமானால், கடலை மற்றும் வெல்லம் ஆகியவற்றையும் தானமாக வழங்கலாம்.

துளசி வழிபாட்டின் நன்மைகள்
ஏகாதசி நாளில் துளசியை வணங்க வேண்டும். அதுவும் இந்நாளில் துளசி செடிக்கு அடியில் ஒரு நெய் தீபம் ஏற்றி விஷ்ணு பகவானை வணங்க வேண்டும். இதனால் வீட்டின் செல்வம், புகழ் மற்றும் பெருமை அதிகரிக்கும். அதோடு, நிர்ஜல விரதம் இருந்து இந்த துளசி வழிபாட்டை செய்தால், வேலை மற்றும் வணிகத்திலும் நன்மைகள் கிடைக்கும்.

நிர்ஜல ஏகாதசி விரதத்தின் நன்மைகள்
நிர்ஜல ஏகாதசி விரதம் இருந்தால், இதுவரை செய்த பாவங்கள் நீங்கி, நற்பலன்கள் கிடைக்கும். நோய்கள் நீங்கும். அனைத்து வகையான செல்வங்களும் கிடைக்கும். முக்கியமாக பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். முக்கியமாக நிர்ஜல ஏகாதசி விரதம் இருந்தால், 24 ஏகாதசி விரதங்களின் பலனைப் பெறலாம்.



Click it and Unblock the Notifications
