Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
செவ்வாய் கிழமைகளில் இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்லன்னா வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்கும்..
செவ்வாய் கிழமை அனுமனுக்கு உரிய நாளாக கருதப்பட்டாலு, ஜோதிடத்தின் படி இந்நாள் செவ்வாய் கிரகத்தைக் குறிக்கிறது. இந்த செவ்வாய் கிழமையில் ஒருசில செயல்களை செய்யக்கூடாது.
வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதில் செவ்வாய்கிழமை அனுமனுக்கு உரிய நாளாகும். அனுமனின் அருள் ஒருவருக்கு கிடைத்தால், அவரின் அனைத்து கஷ்டங்களும் நீங்கும். செவ்வாய் கிழமை அனுமனுக்கு உரிய நாளாக கருதப்பட்டாலு, ஜோதிடத்தின் படி இந்நாள் செவ்வாய் கிரகத்தைக் குறிக்கிறது. ஜோதிடத்தில் செவ்வாய் தைரியம் மற்றும் ஆற்றலின் கிரகமாக கருதப்படுகிறது.

இந்த செவ்வாய் கிழமையில் ஒருசில செயல்களை செய்யக்கூடாது. அவ்வாறு செய்வதால் செவ்வாய் பகவானின் கோபத்திற்கு ஆளாகி, வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது செவ்வாய்கிழமைகளில் எந்த மாதிரியான விஷயங்களை செய்யக்கூடாது என்பதைக் காண்போம்.

அசைவ உணவை உண்ணாதீர்கள்
நீங்கள் அசைவ உணவுப் பிரியராக இருந்தாலோ அல்லது அசைவ உணவை அவ்வப்போது உண்பவராக இருந்தாலோ, செவ்வாய்கிழமைகளில் மட்டும் அசைவ உணவை உண்ணாதீர்கள். இல்லாவிட்டால், வாழ்வில் பெரிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

நில வழிபாட்டை தவிர்க்கவும்
அனுமன் மண்ணின் மைந்தனாக கருதப்படுகிறார். ஆகவே செவ்வாய்கிழமைகளில் புதிய வீடு வாங்கவோ அல்லது புதிய வீடு கட்டுவதற்கு பூமி பூஜை செய்யவோ வேண்டாம். ஒருவேளை செவ்வாய் கிழமைகளில் இச்செயல்களை செய்தால், வீட்டில் பல நோய்கள் வரலாம் மற்றும் குடும்பத்தில் பண பிரச்சனை ஏற்படத் தொடங்கும்.

இரும்பு பொருட்களை வாங்காதீர்
செவ்வாய் கிழமைகளில் இரும்பு பொருட்களை வாங்குவதை அல்லரு கருப்பு நிற ஆடைகளை வாங்குவதை/அணிவதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக செவ்வாய் கிழமைகளில் ஆரஞ்சு அல்லது சிவப்பு நிற ஆடைகளை வாங்கலாம்/அணியலாம். அனுமனுக்கு சிவப்பு நிறம் மிகவும் பிடிக்கும். ஆகவே செவ்வாய்கிழமைகளில் சிவப்பு நிற ஆடைகளை அணிவது செவ்வாய் தோஷத்தைக் குறைக்கும்.

மேக்கப் பொருட்களை வாங்காதீர்
செவ்வாய்கிழமைகளில் மேக்கப் பொருட்கள் அல்லது கண்ணாடி பொருட்களை வாங்காதீர்கள். இல்லாவிட்டால் கணவன்-மனைவி இடையே சண்டைகள் வரத் தொடங்கும். இது தவிர, வீட்டில் பண இழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

தானம் செய்ய வேண்டிய பொருட்கள்
செவ்வாய்கிழமை அன்று தாமிரம், குங்குமம், கோதுமை, செம்பருத்தி, தேன், மிளகாய் ஆகியவற்றை தானம் செய்வது நல்லது. அதோடு சிவப்பு நிற பழங்கள் மற்றும் சிவப்பு நிற ஆடைகளையும் தானமாக வழங்கலாம். இப்படி தானம் செய்வதால் அனுமன் மகிழ்ச்சியடைவார். மேலும் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.



Click it and Unblock the Notifications