Latest Updates
-
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும்
புதன் வக்ர நிவர்த்தியால் அக்டோபர் 26 வரை இந்த ராசிக்காரங்க அதிக பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்.. உஷார்..
புதன் செப்டம்பர் 10 ஆம் தேதி கன்னி ராசியில் வக்ர நிலையில் பயணித்து வந்தார். அதைத் தொடர்ந்து அக்டோபர் 02 ஆம் தேதி கன்னி ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்தார்.

நவகிரகங்களில் இளவரசன் என்று அழைக்கப்படுவது புதன். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசியின் அதிபதியாவார். இந்த புதன் செப்டம்பர் 10 ஆம் தேதி கன்னி ராசியில் வக்ர நிலையில் பயணித்து வந்தார். அதைத் தொடர்ந்து அக்டோபர் 02 ஆம் தேதி கன்னி ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்தார். புதன் தனது சொந்த ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். அதனால் சிலர் நற்பலன்களையும், சிலர் பிரச்சனைகளையும் சந்திக்கலாம். இப்போது கன்னி ராசியில் புதன் வக்ர நிவர்த்தி அடைந்ததால், எந்த ராசிக்காரர்கள் அதிக கஷ்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். இதனால் இந்த காலகட்டத்தில் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சற்று சோர்வாக உணர வாய்ப்புள்ளது. தேர்வுகளில் சிறப்பாக செயல்பட மாணவர்கள் வழக்கத்தை விட அதிக முயற்சியை எடுக்க வேண்டும். இக்காலத்தில் சிலருக்கு நிதி பிரச்சனைகளும் வரலாம்.

துலாம்
துலாம் ராசியின் 12 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். எனவே இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் செலவுகள் அதிகரிக்கலாம். ஏற்றுமதி-இறக்குமதி தொழில் செய்பவர்கள் பரிவர்த்தனைகளை செய்யும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இக்காலத்தில் வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. ஆனால் அந்த பயணத்தால் நிறைய பணத்தை செலவழிக்க வேண்டியிருக்கும்.

கும்பம்
கும்ப ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். ஆகவே இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் சவால்கள் எதிர்கொள்ளும் போது சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் சில பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆரோக்கியத்திலும் சற்று கூடுதல் அக்கறை காட்ட வேண்டும். குறிப்பாக போதுமான ஓய்வை உடலுக்கு வழங்க வேண்டும்.

புதனால் சந்திக்கும் பிரச்சனைகளைக் குறைக்கும் பரிகாரங்கள்:
* 4 முக ருத்ராட்சம் அணிவதால் புதனால் சந்திக்கும் பிரச்சனைகள் குறைந்து, அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
* மரகத ரத்தினம் அணிந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
* தொழிலில் வெற்றி பெற பணியிடத்தில் புத்த யந்திரத்தை வைக்கவும் .
* புதன்கிழமைகளில் ஏழை மாணவர்களுக்கு கல்விப் பொருட்களை தானம் செய்யுங்கள்.
* பசுவிற்கு சாப்பிட புல் கொடுக்கவும்.
* விநாயகரை வழிபடவும்.
* கையில் எப்போதும் ஒரு பச்சை நிற துணி/கைக்குட்டையை வைத்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
