Latest Updates
-
முள்ளங்கியை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
வெயில் கொடுமையா? இந்த 4 செடிகள் இருந்தா போதும்… வீடே ஏசி போல ஜில்லுனு இருக்கும்! -
செஃப் தீனா ஸ்டைல் சிக்கன் தொக்கு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
வரலாற்றின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவரின் ஒரு பயணம் எப்படி உலக வரலாற்றை மாற்றியது தெரியுமா? -
உடல் சூட்டை டக்கென்று குறைக்கும் டாப் 3 உணவுகளை பட்டியலிட்ட சித்த மருத்துவர் - அது என்னென்னன்னு பாருங்க..! -
மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க… கோடை வெயிலிலும் பணவரவு குறையாம இருக்க ரகசியம்! -
1 வருடம் கழித்து மேஷ ராசிக்கு செல்லும் புதன்: நாளை முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
India Heatwave Alert: இந்தியாவில் வெயில் உச்சத்தில் இருக்கும் டாப் 10 நகரங்கள் என்னென்ன தெரியுமா? -
3/4 கப் வேர்க்கடலையும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்குமாம்
ரிஷபம் செல்லும் செவ்வாயால் அடுத்த 2 மாதம் இந்த 6 ராசிகளுக்கு ராஜயோகம் அடிக்கப் போகுது...
செவ்வாய் கிரகங்களின் தளபதி. இந்த செவ்வாய் இதுவரை மேஷ ராசியில் ராகுவுடன் சேர்ந்து பயணித்து வந்தார். இந்நிலையில் செவ்வாய் 2022 ஆகஸ்ட் 10 ஆம் தேதி, அதாவது இன்று ரிஷப ராசிக்கு செல்கிறார்.
ஜோதிடத்தில் ஆளுமைத்திறன், ஆற்றல், வீரம், வலிமை, தர்மம், நீதி, நேர்மை, நியாயம், அதிகாரம் செய்தல், வளைந்து கொடுக்காத தன்மைபோன்ற அம்சங்கள் கொண்ட கிரகம் செவ்வாய். இத்தகைய செவ்வாய் கிரகங்களின் தளபதி. இந்த செவ்வாய் இதுவரை மேஷ ராசியில் ராகுவுடன் சேர்ந்து பயணித்து வந்தார். இந்நிலையில் செவ்வாய் 2022 ஆகஸ்ட் 10 ஆம் தேதி, அதாவது இன்று ரிஷப ராசிக்கு செல்கிறார். இந்த செவ்வாய் ரிஷப ராசியில் அக்டோபர் 16 வரை இருப்பார்.

செவ்வாய் பெயர்ச்சியால் நிலம், ரியல் எஸ்டேட், தொழில்நுட்பம் மற்றும் இன்ஜினியரிங் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல பலனைத் தரும். ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் நல்ல நிலையில் இருந்தால், அவர் வாழ்க்கை வளமாக இருக்கும். வாழ்வில் மகிழ்ச்சி நிலவும். செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால், அனைத்து ராசிகளிலும் அதன் தாக்கம் இருந்தாலும், சில ராசிக்காரர்கள் அதிக நற்பலன்களைப் பெறுவார்கள். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 2 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். இக்காலத்தில் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். உங்களின் எதிரிகளை வெல்வீர்கள். உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும். முதலீடு செய்வதற்கு சாதகமான காலம். மாணவர்களுக்கு நல்ல காலமாக இருக்கும. மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் அதிக லாபத்தைப் பெறுவார்கள்.

கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். கடன் பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். வருமானம் உயர வாய்ப்புள்ளது. பணியிடத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு நற்செய்தி கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் சிம்ம ராசிக்காரர்கள் இக்காலத்தில் அனைத்து வேலைகளிலும் வெற்றி பெறுவார்கள். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த ராசிக்காரர்களின் பலமும், தைரியமும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இது சாதகமான காலம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் செவ்வாய் பெயர்ச்சியால் நல்ல நிதி ஆதாயத்தைப் பெறுவார்கள். இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் துலாம் ராசிக்காரர்களுக்கு உண்டு. நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறுவார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் தனுசு ராசிக்காரர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். எடுத்த வேலைகளை குறித்த நேரத்தில் வெற்றிகரமாக முடிப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். வேலையில் சிறப்பாக செயல்படுவீர்கள். எதிர்காலத்தில் உங்களுக்கு உதவும் ஒருவரை இக்காலத்தில் சந்திப்பீர்கள்.

கும்பம்
கும்ப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலம் கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உறவுமுறைகள் சிறப்பாக இருக்கும். புதிய கார், வீடு வாங்க நீண்ட நாட்களாக ஆசை கொண்டிருந்தால், அது இக்காலத்தில் வாங்கும் யோகம் உண்டு. முக்கியமாக நிதி நிலைமை சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications