Just In
- 26 min ago
உங்க உடலுக்கு வைட்டமின் ஈ நிறைந்த உணவுகள் ஏன் முக்கியம்? அவை என்னென்ன அதிசயங்கள் செய்யும் தெரியுமா?
- 59 min ago
ஒவ்வொரு சனிக்கிழமையும் இத செஞ்சா.. ஏழரை சனியின் தாக்கம் குறையுமாம்.. நீங்களும் ட்ரை பண்ணுங்க...
- 1 hr ago
Z எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்களாம் தெரியுமா?
- 1 hr ago
சிறிய வெட்டுக்காயம் & தீக்காயம் ஏற்பட்டால் கிச்சனிலுள்ள இந்த 5 பொருட்கள முதலுதவிக்கு யூஸ் பண்ணுங்க!
Don't Miss
- News
எல்லாமே ’அதுக்காக’ தான்.. ஆட்டைய போட்டு எஞ்சாய் செய்த ஜோடி! மிளகாய் பொடி கேடி..கதிகலங்கிய குமரி!
- Technology
iPhone 14 மீது ரூ.10,000 தள்ளுபடி.! நம்பவே முடியல.! விட்டா போச்சு பாஸ் உடனே வாங்கிடுங்க.!
- Travel
சென்னைக்கு அருகில் இப்படியொரு அழகான இடமா – பசுமையான நீர், வனப்பகுதி, ட்ரெக்கிங் – ஒரு நாள் சுற்றுலா!
- Sports
நீண்ட நேர யோசனை.. டாஸின் போது தடுமாறிய ரோகித் சர்மா..இறுதியில் தந்த ட்விஸ்ட்.. 2வது ODIல் சுவாரஸ்யம்
- Movies
பல லட்சங்களுடன் வெளியேறிய அமுதா, மைனா... பிக் பாஸ் கொடுத்த லைஃப் டைம் செட்டில்மெண்ட்
- Finance
அடிச்சது ஜாக்பாட்.. 10000 கோடி முதலீடு செய்யும் மஹிந்திரா & மஹிந்திரா.. எங்கு தெரியுமா..?
- Automobiles
ஓலா, ஏத்தர் எல்லாம் இவங்களுக்கு ஜூஜூபி, 8 மாசத்துல இப்படி ஒரு சாதனைய படைப்பாங்கனு யாருமே எதிர்பார்க்கல!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
மேஷத்தில் செவ்வாய்-ராகு சேர்க்கையால் ஆகஸ்ட் 10 வரை இந்த ராசிக்காரங்க எச்சரிக்கையாக இருக்கணும்...
நவகிரகங்களில் தளபதி ஸ்தானத்தைப் பெற்ற கிரகம் தான் செவ்வாய். இந்த செவ்வாய் மேஷ ராசிக்கு 2022 ஜூன் 27 ஆம் தேதி சென்றார். மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். ஒரு கிரகம் தனது சொந்த ராசியில் சஞ்சரிக்கும் போது, அதன் அதிகபட்ச சக்தியை செலுத்த முடியும். ஏற்கனவே மேஷ ராசியில் ராகு பயணித்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய் மேஷ ராசிக்கு சென்றதால், 37 ஆண்டுகளுக்குப் பிறகு மேஷ ராசியில் அங்காரக் யோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் பல ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால், சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
இந்த அங்காரக் யோகம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை உள்ளது. எனவே இந்த காலகட்டத்தில் ஒருசில ராசிக்காரர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இப்போது மேஷ ராசியில் செவ்வாய் ராகு சேர்க்கையால் உருவாகியுள்ள அங்காரக் யோகத்தால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கிரக சேர்க்கை பலன்கள்
ஜோதிடத்தில் கிரகங்களின் சேர்க்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சில சமயங்களில், இரண்டு சுப கிரகங்கள் சேர்க்கையால், மக்கள் சாதகமான பலன்களை பெறுவார்கள். அதே வேளையில் இரண்டு மோசமான கிரகங்கள் சேர்க்கையால், மக்கள் சாதகமற்ற பலன்களைப் பெறுவார்கள். அதுவும் சுப மற்றும் மோசமான கிரகங்களின் சேர்க்கையால், வெவ்வேறு பலன்களும் கிடைக்கலாம்.

செவ்வாய்-ராகு சேர்க்கை பலன்கள்
இந்த நிலையில் ராகு மற்றும் செவ்வாய் ஒரே ராசியில் சேர்ந்திருப்பது பற்றி கூற வேண்டுமானால், இது சாதகமற்ற விளைவுகளையே ஏற்படுத்தும் என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். முன்பே கூறியது போல, ராகு-செவ்வாய் சேர்க்கையால் அங்காரக் யோகம் உருவாகும். இந்த யோகத்தினால் நிதி இழப்பு, வாக்குவாதங்கள், சிரமங்கள், சண்டைகள், கடன் வாங்குவது மற்றும் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. எனவே தான் செவ்வாய்-ராகு சேர்ந்திருக்கும் போது அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
மேஷத்தில் செவ்வாய்-ராகு சேர்க்கையால் உருவாகியுள்ள அங்காரக் யோகத்தால் 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டில் அங்காரக் யோகம் உருவாகியுள்ளது. எனவே இக்காலத்தில் செலவுகள் அதிகரித்து, உங்களின் நிதி திட்டம் பாழாகும். கூடுதலாக, உடன்பிறந்தவர்களுடன் தேவையின்றி வாக்குவாதம் செய்ய வாய்ப்புகள் அமையும். இம்மாதிரியான சூழ்நிலையில் கட்டுப்பாட்டுடன் இருந்து, மென்மையாக பேச முயற்சிக்க வேண்டும். இக்காலத்தில் எதிரிகள் உங்களுக்கு எதிராக சதி செய்ய வாய்ப்புள்ளது. மேலும் பணியிடத்தில் எச்சரிக்கையாக செயல்படுங்கள். வணிகர்கள் முக்கிய வணிக முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் தோல்வி ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

பரிகாரம்
அங்காரக் யோகத்தால் சந்திக்கும் மோசமான விளைவுகளைத் தவிர்ப்பதற்கு, ரிஷப ராசிக்காரர்கள் தினமும் அனுமன் சாலிசா மற்றும் சுந்தரகாண்டத்தை பாராயணம் செய்தால், ஓரளவு பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.

சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் அங்காரக் யோகம் உருவாகியுள்ளது. இதனால் உங்கள் அதிர்ஷ்டம் உங்களிடம் இருந்து பறிக்கப்படும். வணிகத்தில் ஒப்பந்தம் நடப்பது நிறுத்தப்படுவதால், வாழ்க்கை மன அழுத்தம் நிறைந்து இருக்கும். நீங்கள் திட்டமிடும் எந்தவொரு குறிப்பிடத்தக்க பயணமாக இருந்தாலும், அது சில சவால்கள் நிறைந்து இருக்கலாம். வாகனம் ஓட்டும் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். குடல் பிரச்சனைகள் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.

பரிகாரம்
சிம்ம ராசிக்காரர்கள் செவ்வாய்-ராகு சேர்க்கையினால் உருவாகியுள்ள அங்காரக் யோகத்தின் மோசமான தாக்கத்தைத் தவிர்க்க பருப்புக்களை ஏழை எளியோருக்கு தானம் செய்ய வேண்டும்.

துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் அங்காரக் யோகம் உருவாகியுள்ளது. எனவே இக்காலத்தில் காதல் ஏமாற்றம் மற்றும் திருமண தோல்வி போன்றவற்றை அனுபவிக்க நிறைய வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு உயர்கல்வி சில சவால்களை அளிக்கலாம். இக்காலத்தில் நீங்கள் உங்களை மிகவும் மோசமாக வெளிக்காட்டுவீர்கள் என்பதால், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் வாக்குவாதம் மற்றும் சண்டையிடுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. தொழில் மற்றும் பணிபுரிபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், பேச்சு மற்றும் ஆத்திரத்தின் விளைவாக நிறைய சிக்கல்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும்.

பரிகாரம்
துலாம் ராசிக்காரர்கள் செவ்வாய் ராகு சேர்க்கையால் உருவாகியுள்ள அங்காரக் யோகத்தின் மோசமான விளைவைத் தவிர்ப்பதற்கு செவ்வாய் கிழமைகளில் அனுமன் கோவிலுக்கு சென்று அனுமனை வழிபடுவதோடு, அவருக்கு செந்தூரத்தால் அர்ச்சனை செய்யுங்கள்.