Just In
- 5 hrs ago
வார ராசிபலன் (17.01.2021 முதல் 23.01.2021 வரை) – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- 6 hrs ago
இன்றைய ராசிப்பலன் (17.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது…
- 17 hrs ago
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- 19 hrs ago
காரமான... பெப்பர் மட்டன் வறுவல்
Don't Miss
- News
கொடுமையை பாருங்க.. ஐந்து நாளில் இரண்டு முறை.. 9 பேரால் சிக்கி சீரழிந்த 13 வயது சிறுமி.. ஷாக்!
- Sports
எப்படி போட்டாலும் அடிக்கிறான்.. ஆஸி.யை திணற வைக்கும் சென்னையின் "வாஷிங்க்டன்".. சூறாவளி சுந்தர்!
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Movies
அனிதாவோட அப்பாவுக்கு என்னை ரொம்ப பிடிக்குமாம்.. கமலிடம் நெகிழ்ந்த ஆரி.. என்ன சொன்னார் பாருங்க!
- Automobiles
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த அதிர்ஷ்ட உணவுகள புத்தாண்டு அன்று சாப்பிட்டால் வருடம் முழுவதும் அதிர்ஷ்டம் இருக்குமாம்...!
2019 ஆம் ஆண்டு முடிய இன்னும் சில நாட்களே உள்ளது, இந்த வருடம் உங்களுக்கு நல்லதாக இருந்ததோ அல்லது கெட்டதாக இருந்ததோ அது முக்கியமல்ல ஆனால் வரப்போகிற ஆண்டு உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டுவர வேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புவீர்கள். நாம் எப்போதும் ஒரு சிறந்த ஆண்டையே முன்னெடுக்க விரும்புகிறோம், அதற்கு சில வழிகளும் உள்ளது.
நம்முடைய பழமையான மரபுகள் மற்றும் நம்பிக்கைகளின் படி புத்தாண்டு அன்று நாம் சாப்பிடும் சில பொருட்கள் நமக்கு வரப்போகிற ஆண்டில் அதிர்ஷ்டத்தை வழங்கக்கூடும். இந்த பதிவில் வரப்போகிற புத்தாண்டை உங்களின் சிறந்த ஆண்டாக மாற்ற அன்றைய நாளில் நீங்கள் எதை சாப்பிட வேண்டும் என்று பார்க்கலாம்.

பயிறுகள்
புத்தாண்டு தினத்தில் இத்தாலி மக்கள் பயிறு வகைகளை சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஏனெனில் புத்தாண்டு அன்று பயிறு வகைகளை சாப்பிடுவது அவர்கள் வாழ்க்கையில் வளத்தையும், அதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்தும் என்று அவர்கள் நம்புகிறார்கள். பருப்பு ரோமானிய நாணயங்களைப் போல இருப்பதால் மக்கள் இந்த உண்மையை நம்புகிறார்கள். நீங்களும் உங்கள் புத்தாண்டு உணவில் இதனை மறக்காமல் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கருப்பு கண் பட்டாணி
சில தென்னக மரபுகளின்படி, கறுப்புக்கண் பட்டாணி அல்லது தட்டைப்பயிறு அதிர்ஷ்ட உணவாக கருதப்படுகிறது. சிலர் இதை அதிர்ஷ்டசாலி என்று அழைக்கிறார்கள், ஏனெனில் இந்த பட்டாணி உள்நாட்டுப் போரின்போது மக்கள் உயிர்வாழ உதவியது, மற்றவர்கள் கறுப்புக் கண்கள் பட்டாணி பணத்தை ஒத்திருப்பதாகக் கூறுகிறார்கள், எனவே அவை நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டுவருவதாக கருதப்படுகிறது. இது பெரும்பாலும் அனைவரும் விரும்பும் உணவாக இருப்பதால் இதனை உங்கள் புத்தாண்டு மெனுவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

திராட்சை
புத்தாண்டு தினத்தில் சரியாக 12 மணிக்கு 12 திராட்சைகளை நீங்கள் சாப்பிட்டால், அது அடுத்த 12 மாதங்களுக்கு உங்கள் வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது. இது பார்ப்பதற்கு எளிதானதாக தோன்றினாலும் அவ்வளவு சுலபமானது அல்ல. ஏனெனில் நீங்கள் சாப்பிடும் திராட்சை இனிப்பு சுவை உடையதாக இருக்க வேண்டும். ஒருவேளை புளிப்பு சுவை உடையதாக இருந்தால் அந்த குறிப்பிட்ட மாதத்தில் உங்களுக்கு துரதிர்ஷ்டம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது. எனவே இனிப்பான திராட்சைகளை சரியாக தேர்ந்தேடுக்க வேண்டும்.

மீன்
மீன் பிரியர்களுக்கு இது ஒரு நல்ல செய்தியாகும். புத்தாண்டு தினத்தில் மீன் சாப்பிடுவது அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. மீன் என்பது பல காரணங்களுக்காக அதிர்ஷ்டத்தின் சின்னமாக கருதப்படுகிறது. மீன் செதில்கள் ஒரு பணப்பையில் நாணயங்கள் போல இருக்கும். எனவே ஜனவரி 1 அன்று மீன் சாப்பிடுவது உங்களின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.

நூடுல்ஸ்
பல ஆசிய நாடுகளில், புத்தாண்டு தினத்தில் நூடுல்ஸ் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நூடுல்ஸ் நீளமாக இருப்பதால் அவர்களின் ஆயுளை நீடிக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள், இது தங்களின் ஆயுளை பிரதிபலிப்பதாக நினைக்கிறார்கள். ஆனால், அதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது, நீங்கள் நூடுல்ஸை முழுவதுமாக சாப்பிட வேண்டும், அவை உங்கள் வாயில் முழுமையாக செல்வதற்கு முன்பு அவற்றை உடைக்கக்கூடாது.

சோளரொட்டி
சோளரொட்டி தங்கத்தை குறிக்கிறது, அதனால்தான் இது அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. கூடுதல் அதிர்ஷ்டத்தைப் பெற, சிலர் சோள கர்னல்கள், தேன் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றை தங்கள் சோளரொட்டிகளில் முதலிடத்தில் சேர்க்கிறார்கள். எனவே, இந்த விரும்பத்தக்க உணவைக் சாப்பிட்டு நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுங்கள்.
MOST READ: 2020- ல் இந்த 5 ராசிக்காரங்கள காதல் தேடி வரப்போகுதாம்... சரியா யூஸ் பண்ணிக்கோங்க...!

வட்ட வடிவ கேக்
வட்ட வடிவ கேக்கை சாப்பிடுவதன் பின்னணியில் உள்ள சிந்தனை என்னவென்றால், ஆண்டு முழு வட்டத்துடன் வந்துவிட்டது. நேரத்திற்கு திட்டவட்டமான தொடக்கமோ முடிவோ இல்லை, காலெண்டர் சுற்றிக்கொண்டே இருக்கிறது. எனவே, புத்தாண்டு தினத்தில் ஒரு வட்ட கேக்கை சாப்பிடுவது நல்ல அதிர்ஷ்டத்தை தரும் என்று நம்பப்படுகிறது. சில நாடுகளில், ஒரு நாணயம் கேக்கின் மையத்தில் வைக்கப்பட்டு சாப்பிடுவது அதிர்ஷ்டத்தை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.