Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
குரு வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது....
நவம்பர் 24 ஆம் தேதி குரு வக்ர நிவர்த்தி அடைந்து, தனது சொந்த ராசியில் நேர்பாதையில் பயணிக்கவுள்ளார். குருவின் இந்த இயக்கத்தால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் ஏராளமான நற்பலனைப் பெறவுள்ளா
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றி பயணிக்கும். கிரகங்களின் இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களில் சுப கிரகமாக கருதப்படும் குரு பகவான் தனது சொந்த ராசியான மீன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். குரு பகவான் சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் தனது சொந்த ராசிக்கு வந்துள்ளதோடு, அந்த ராசியில் வக்ரமாகவும் உள்ளார்.

இந்நிலையில் நவம்பர் 24 ஆம் தேதி குரு வக்ர நிவர்த்தி அடைந்து, தனது சொந்த ராசியில் நேர்பாதையில் பயணிக்கவுள்ளார். குருவின் இந்த இயக்கத்தால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் ஏராளமான நற்பலனைப் பெறவுள்ளார்கள். குறிப்பாக 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் மேன்மேலும் பிரகாசிக்கப் போகிறது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இது வருமானம் மற்றும் லாபத்தின் வீடாகும். எனவே இக்காலத்தில் வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. அதோடு புதிய வருமானத்திற்கான ஆதாரங்களும் உருவாக்கப்படும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இக்காலத்தில் வணிகர்கள் ஒரு புதிய ஒப்பந்தத்தால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வாகனம் வாங்கவும், சொத்து வாங்கவும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆராய்ச்சி துறையுடன் தொடர்புடையவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். முக்கியமாக இக்காலத்தில் நோயில் இருந்து விடுபடுவீர்கள்.

மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். இது வேலை, வணிகம் மற்றும் பணியிடத்தின் வீடாகும். ஆகவே இக்காலத்தில் புதிய வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் பணியிடத்தில் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு புதிய ஆர்டர் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வணிக உறவுகளால் உங்களின் வணிகம் விரிவடையும்.

கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். இது அதிர்ஷ்டம் மற்றும் வெளிநாட்டு பயணத்தின் வீடாகும். எனவே இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். உங்களின் தடைபட்ட பணிகள் இக்காலத்தில் வெற்றிகரமாக முடிக்கப்படும். வணிகம் தொடர்பான பயணம் மேற்கொள்ள நேரிடும். இப்பயணத்தால் நல்ல ஆதாயம் கிடைக்கும். வெளிநாடுகளுடன் தொடர்புடைய வணிகர்கள் குருவால் நல்ல லாபம் ஈட்ட வாய்ப்புள்ளது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு குரு வக்ர நிவர்த்தி காலம் மங்களகரமானதாக இருக்கும். ஏனெனில் குரு கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் வக்ர நிவர்த்தி அடைகிறார். இது பணம் மற்றும் பேச்சின் வீடாகும். எனவே இக்காலத்தில் திடீர் பண ஆதாயங்கள் கிடைக்கும். பேச்சு மற்றும் மார்கெட்டிங் தொடர்பான வேலைகளை செய்பவர்களுக்கு அற்புதமான காலமாக இருக்கும். பணிபுரிபவர்கள் இக்காலத்தில் பணியிடத்தில் பாராட்டுக்களைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications