Latest Updates
-
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா?
பிறவியில் இருந்தே விநாயக பெருமானின் அருளைப் பெற்ற ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் படி, சில ராசிக்காரர்களுக்கு விநாயகரின் சிறப்பான அருள் உள்ளது. விநாயகரின் அருளால் அந்த ராசிக்காரர்கள் வாழ்வில் சந்திக்கும் பல தடைகளையும் உடைத்தெறிந்து வெற்றி காண்பார்கள்.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 31 ஆம் தேதி வருகிறது. இந்து மதத்தில் முதன்மை கடவுளாக கருதப்படுபவர் விநாயக பெருமான். எந்த ஒரு சுப காரியங்கள் நடந்தாலும் இவரை முதலில் வணங்கிய பின்னரே பிற வழிபாடுகள் நடக்கும். ஏனெனில் விநாயகரை முதலில் வணங்கினால், நடக்கும் காரியங்களில் எவ்வித தடையும் ஏற்படாமல் வெற்றிகரமாக நடப்பதோடு, பக்தர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. விநாயகரை வழிபடுவதால் அனைத்துவிதமான தொல்லைகளில் இருந்தும் விடுதலை கிடைக்கும்.

அதுவும் புதன்கிழமை விநாயகருக்குரிய நாளாகும். ஜோதிடத்தில் ஞானம் மற்றும் செழிப்புக்கு காரணமான கிரகம் புதன், விநாயக பெருமானுடன் தொடர்புடையது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, சில ராசிக்காரர்களுக்கு விநாயகரின் சிறப்பான அருள் உள்ளது. விநாயகரின் அருளால் அந்த ராசிக்காரர்கள் வாழ்வில் சந்திக்கும் பல தடைகளையும் உடைத்தெறிந்து வெற்றி காண்பார்கள். இப்போது விநாயகரின் விருப்பமான அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் விநாயகரின் சிறப்பான அருளும், ஆசீர்வாதமும் கொண்டவர்கள். மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வலிமை, வீரம் ஆகியவற்றின் காரணியாகும். இந்த குணங்கள் அனைத்தும் மேஷ ராசிக்காரர்களிடமும் இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு விநாயகரின் சிறப்பான அருள் இருப்பதால், இவர்களின் அனைத்து வேலைகளும் முடிந்து விரைவில் சிறப்பான பலனைத் தருகிறது.

மிதுனம்
மிதுன ராசியின் அதிபதி புதன். ஜோதிடத்தில் புதன் புத்தி, வணிகம், கணிதம், தகவல் தொடர்பு, லாஜிக் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. மிதுன ராசிக்காரர்களை சிவபெருமானின் மகனான விநாயகருக்கு மிகவும் பிடிக்கும். ஆகவே இந்த ராசிக்காரர்களின் வழிபாட்டால் விநாயகர் விரைவில் மகிழ்ச்சி அடைகிறார். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுகிறார்கள் மற்றும் விநாயகரின் ஆசீர்வாதத்தால் இந்த ராசிக்காரர்களின் காரியங்கள் அனைத்தும் விரைவில் வெற்றிகரமாக முடிக்கப்படுகிறது.

மகரம்
ஜோதிட சாஸ்திரத்தின் படி, மகர ராசிக்காரர்களுக்கு விநாயகரின் சிறப்பான அருள் எப்போதும் உண்டு. மகர ராசிக்காரர்கள் சுதந்திரமான சிந்தனையும், கடின உழைப்பும் கொண்டவர்கள். விநாயகருடன், சனி பகவானுக்கும் மகர ராசி மிகவும் பிடித்த ராசி. ஆகவே இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் எப்போதும் உடன் இருக்கும். குறைந்த முயற்சியிலேயே நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். தங்களின் அனைத்து வேலைகளிலும் வெற்றி காண்பார்கள். மேலும் இந்த ராசிக்காரர்கள் தங்கள் புத்திசாலித்தனம் மற்றும் திறமையினால் எப்பேற்பட்ட சவால்களையும் திறம்பட சமாளிப்பார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு விநாயகரின அருள் இருப்பதால் தான், இவர்களின் பணிகளில் தடைகள் ஏதும் இருப்பதில்லை.



Click it and Unblock the Notifications