For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மே 29-ல் கொரோனா வைரஸ் முடிவுக்கு வரும் - இது நிஜம் தானா? உண்மை என்ன?

ஆகஸ்ட் 22, 2019 அன்று, தனது யூடியூப் சேனலான conscience-இல்,14 வயது சிறுவன் அபிக்யா ஆனந்த், நவம்பர் 2019 முதல் ஏப்ரல் 2020 வரை உலகம் ஒரு கடினமான கட்டத்திற்குள் நுழையும் என்று கணித்து கூறினார்.

|

கொரோனா என்னும் கொடிய வைரஸ் கொத்து கொத்தாக உயிரைப் பறித்து வருகிறது. அன்றாடம் இந்த வைரஸ் தொற்றால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டும், பலியாகியும் வருகிறார்கள். இந்த வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஆராய்ச்சியாளர்களும், மருத்துவர்களும் தீவிரமாக உள்ளனர்.

Coronavirus To End May 29th, Says Indian Boy Who Correctly Predicted Its Start, 8 Months Ago

கொரோனா வைரஸ் பல உயிர்களை பறித்து வரும் நிலையில், இந்த வைரஸ் குறித்து ஆகஸ்ட் 22, 2019 அன்று, தனது யூடியூப் சேனலான conscience-இல், 14 வயது சிறுவன் அபிக்யா ஆனந்த், நவம்பர் 2019 முதல் ஏப்ரல் 2020 வரை உலகம் ஒரு கடினமான கட்டத்திற்குள் நுழையும் என்று கணித்து கூறினார். இந்த சிறுவன் கூறியது போன்றே டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தது. அதோடு இன்று வரை இந்த வைரஸ் கட்டுப்படுத்த முடியாத வகையில் பரவி வருகிறது.

MOST READ: இந்த பழக்கத்தை உடனே கைவிடுங்க.. இல்ல கொரோனா உங்களே தேடி சீக்கிரம் வரும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அபிக்யா ஆனந்த்

அபிக்யா ஆனந்த்

அபிக்யா ஆனந்த் என்னும் 14 வயது சிறுவன் 2019 ஆகஸ்ட் மாதத்தில் தனது யூடியூப் சேனனில், உலகமே 2019 நவம்பர் மாதத்தில் இருந்து ஆறு மாத காலத்திற்கு கொடிய நோயால் சிக்கி தவிக்கப் போகிறது என்று கணித்து கூறி இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. தற்போது இந்த சிறுவன் கணித்து கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.

MOST READ: கொரோனா வைரஸ் உடலின் எந்த உறுப்புக்களை பாதித்து உயிரைப் பறிக்கிறது தெரியுமா?

பதட்டம் நிரம்பிய 6 மாதம்

பதட்டம் நிரம்பிய 6 மாதம்

2019 நவம்பர் முதல் 6 மாத காலப்பகுதியில் உலகளாவிய நோய் பரவுதல் மற்றும் உலகளாவிய பதட்டங்கள் அதிகரிக்கும். மேலும் 2020 மார்ச் 31 ஆம் தேதி அன்று, நோய் பரவல் உச்சத்தில் இருக்கும் மற்றும் இந்த நேரத்தில் உலகமே மிகவும் பதட்டமாக இருக்கும் என்று கணித்து கூறியுள்ளார்.

இந்திய இளம் ஜோதிடர்

இந்திய இளம் ஜோதிடர்

ஆனந்த், ஒரு பிரபலமான இந்திய இளம் ஜோதிடர் ஆவார், அவர் பல பத்திரிகைகளில் இடம் பெற்றுள்ளார். குறிப்பாக 2013 ஆம் ஆண்டில் அவர் இந்தியன் டைம்ஸில் பேட்டி கொத்தார். அங்கு அவரது ஜோதிட திறன்கள் சோதிக்கப்பட்டன. ஜோதிடம் குறித்த அவரது அறிவு, பலரை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியதோடு, ஒரு குழந்தையின் விளையாட்டாகவும் கருதப்பட்டது.

அபிக்யா ஆனந்த், ஜோதிடத்தைப் பயன்படுத்தி, நோய் பரவல் காலத்தில் தங்கம் மற்றும் வெள்ளி மற்றும் பிற இந்திய தொடர்பான நடவடிக்கைகளின் விலைகளையும் கணித்துள்ளார்.

MOST READ: கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்புடன் இருக்க சீனர்கள் குடிக்கும் மூலிகை சூப்!

உலகப் போர்

உலகப் போர்

கொரோனா வைரஸ் பரவும் இந்த காலம் ஒரு உலகப் போர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இது வைரஸுக்கும் மனிதகுலத்துக்கும் இடையிலான போர். பலர் இது அரசாங்கங்கள் சம்பந்தப்பட்டதாக நினைக்கலாம். ஆனால் இந்த காலக்கட்டத்தை போர் காலமாகத் தான் கருத வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1

மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1

மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1 ஆம் தேதிகளில் உலகம் மிகவும் இக்கட்டான சூழ்நிலையை சந்திக்கும். ஏனெனில் அப்போது செவ்வாய் கிரகத்துடன் சனி மற்றும் வியாழன் இணையும். சந்திரனும், ராகுவும் இணையும். அதுவும் சந்திரனின் வடக்கு முனையில் ராகு இருக்கும்.

ஜோதிடத்தில், செவ்வாய் சனி மற்றும் வியாழன் ஆகியவை சூரிய மண்டலத்தின் வெளிப்புற வளையத்தில் இருப்பதால் அவை மிகவும் சக்திவாய்ந்த கிரகங்களாக கருதப்படுவதால் இது ஒரு அரிய நிகழ்வு. எனவே அவை அனைத்தும் சீரமைக்கப்படும் போது, ​​பூமியின் மீது வெளிப்படும் அவற்றின் சக்தி மிகப்பெரியது என்று அபிக்யா ஆனந்த் கூறுகிறார்.

MOST READ: வரலாற்றில் 200 மில்லியன் மக்களை கொன்று குவித்த உலகின் மிகவும் கொடூரமான தொற்றுநோய் எது தெரியுமா?

சந்திரன், ராகு இணைப்பு

சந்திரன், ராகு இணைப்பு

சந்திரன் மற்றும் ராகு இணைப்புகளைப் பொறுத்தவரை, இது மிகவும் சக்தி வாய்ந்தது. ஏனெனில் சந்திரன் நீர் கிரகம். ராகு வேகமாக செயல்படும் கிரகம். இந்த இரண்டு கிரகமும் ஒன்று சேரும் போது, பெரிய தாக்கம் நிகழும். தற்போது இந்த இரண்டு கிரகங்களும் இணைந்து இருப்பதால் தான், சந்திரனின் தாக்கத்தால் கொரோனா வைரஸ் பாதிப்பால் மூக்கு ஒழுகல் பிரச்சனையை மக்கள் சந்திக்கின்றனர். அதோடு இந்த வைரஸ் பரவல் அதிகம் இருப்பதற்கு ராகு காரணம் என அச்சிறுவன் கூறுகிறார்.

ஏப்ரல் 1

ஏப்ரல் 1

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கொரோனா வைரஸ் மேலும் தீவிரமாக பரவும் என்றும், இக்காலத்தில் மக்கள் சமூக தூரத்தை கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் முக்கியம் என்றும் அவர் கணித்து கூறியுள்ளார்.

MOST READ: கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க சாப்பிடக்கூடாத உணவுகள் என கூறப்படுபவைகள்!

அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்கள்

அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்கள்

கொரோனா வைரஸால் ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காளம், இந்தியாவின் கிழக்கு கடற்கரை, வடமேற்கு இந்தியா போன்ற பகுதிகளில் அதிகளவில் பாதிப்பு ஏற்படும். அப்போது யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் கூறுகிறார்.

வைரஸை எப்படி கட்டுப்படுத்துவது?

வைரஸை எப்படி கட்டுப்படுத்துவது?

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் துளசி, இஞ்சி, ஓமம், மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, அந்நீரில் ஆவி பிடிக்க வேண்டும் என்று அபிக்யா ஆனந்த் கூறுகிறார். இதனால் மூக்கு, சுவாசப் பாதையில் உள்ள பாக்டீரியா, வைரஸ் போன்றவை நீங்கி சுத்தமாகும் என்றும் கூறுகிறார்.

MOST READ: இந்த பழக்கம் இருப்பவர்களை கொரோனா வைரஸ் வேகமா தாக்க வாய்ப்பிருக்காம்.. எச்சரிக்கையா இருங்க...

எப்போது வைரஸ் தாக்கம் குறையும்?

எப்போது வைரஸ் தாக்கம் குறையும்?

கொரோனா வைரஸின் தாக்கம் மே 29 ஆம் தேதிக்கு மேல் குறைய ஆரம்பிக்கும் என்று கூறுகிறார். இந்த வைரஸ் தாக்கத்தால் உலகில் உயிரிழப்புக்கள் இருக்கும். இருப்பினும் பெரிய அளவில் இருக்காது என்றும் கூறுகிறார்.

குறிப்பு: இந்த கட்டுரையில் உள்ள ஜோதிட விவரங்கள் 14 வயது வேத மாணவர் அபிக்யா ஆனந்தின் விவரங்களை அடிப்படையாகக் கொண்டவை. இந்த விவரங்களை நீங்கள் நம்புகிறீர்களா இல்லையா என்பது உங்களுடையது. போல்ட் ஸ்கை தமிழுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Coronavirus To End May 29th, Says Indian Boy Who Correctly Predicted It's Start, 8 Months Ago

An Indian boy 14 year old name Abighya Anand has predicted that the world will enter into a tough phase starting November 2019 to April 2020 on his YouTube channel conscience.
Desktop Bottom Promotion