Latest Updates
-
பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
தமிழ்நாட்டின் மாம்பழ நகரம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது தெரியுமா? -
கஜலக்ஷ்மி ராஜயோகம் 2026: இந்த 4 ராசிகளுக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுதாம்...உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க... வீட்ல எல்லொரும் 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க...! -
உயர் இரத்த அழுத்தம் இருக்கா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க.. -
2026 IPL போட்டிகளில் விளையாடப்போகும் டாப் 10 வயதான வீரர்கள்... யாரெல்லாம் விளையாடப்போறாங்க பாருங்க...! -
மணமணக்கும்.. மட்டன் நோன்பு கஞ்சி - சிம்பிளா குக்கரில் எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
1 கப் துருவிய தேங்காய் இருந்தா இந்த மாதிரி மசாலா தேங்காய் சாதம் செய்யுங்க... பிரியாணியை விட சூப்பரா இருக்கும்! -
மீன ராசியில் உதயமாகும் செவ்வாய்: ஏப்ரலில் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது... -
Eid-ul-Fitr 2026: இந்தியாவில் ரம்ஜான் பண்டிகை எந்த நாளில் கொண்டாடப்பட போகிறது? மார்ச் 20 அல்லது மார்ச் 21?
தமிழர் நாகரீகத்தை உலகுக்கு உணர்த்திய வைரஸ்- தேங்க்ஸ் டூ கொரோனா..
கை கூப்பி வணக்கம் தெரிவிக்கும் முறைதான் உண்மையாக ஒருவருடைய மனதிலிருந்து அன்பையும் மரியாதையையும் எதிரிலிருப்பவருக்கு தெரிவிக்கும் முறை என்பதை உலகுக்கு தெரிவித்திருக்கிறது இந்த கொரோனா வைரஸ்.
ஒரு காலத்தில் தமிழர்கள் என்றால் காட்டுமிராண்டிகள், நாகரீகம் தெரியாதவர்கள், யாரையும் மதிக்க தெரியாதவர்கள், யாராவது கை கொடுத்தால் திரும்ப கை கொடுக்க மறுத்துவிட்டு இரண்டு கைகைளையும் தூக்கி கும்பிடு போடுகிறார்கள் என்று அவமதித்ததோடு, கேலியும் செய்தனர். ஆனால், அந்த கை கூப்பி வணக்கம் தெரிவிக்கும் முறைதான் உண்மையாக ஒருவருடைய மனதிலிருந்து அன்பையும் மரியாதையையும் எதிரிலிருப்பவருக்கு தெரிவிக்கும் முறை என்பதை உலகுக்கு தெரிவித்து வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது இந்த கொரோனா வைரஸ் கிருமி.

இன்றைய தேதியில் நம் பக்கத்தில் நின்று கொண்டு யாராவது சற்று இருமினாலோ அல்லது தும்மினாலோ, சுற்றிலும் உள்ள அனைவருமே சற்று உஷராகி பின்வாங்கி விடுகிறார்கள். எங்கே அவரிடமிருந்து நோய் தொற்று நமக்கும் வந்துவிடுமோ என்று அஞ்சி பீதியாகி, பேதியாகி அலறித் துடிக்கிறார்கள். அந்த அளவுக்கு கண்ணுக்கு தெரியாத ஒரு நுண்ணுயிர் கிருமியான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் எந்தவிதமான பாரபட்சமும் இன்றி மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது.
இதனால் உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகள் அனைத்தும் சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு தடை விதித்ததோடு, பள்ளி, கல்லூரிகள், மால்கள், தியேட்டர்கள் என வரையறை இல்லாமல் அனைத்துக்கும் தடா போட்டு மூடிவிட்டன. கூடுமானவரை மக்கள் கூட்டம் கூடுவதற்கும் தடை போட்டுவிட்டன. அனைவரும் வெளியில் நடமாடுவதை குறைத்துக்கொண்டு வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். அவசியம் இருந்தால் மட்டுமே முகத்தை மூடிக்கொண்டு வெளியில் நடமாடுகின்றனர்.

கை குலுக்கல் கட்டிப்பிடித்தல்
பொது இடங்களில் யாராவது தெரிந்தவர்கள் வந்தால் கூட, பார்த்தும் பார்க்காமல் தான் சென்றுவிடுகின்றனர். ஒருவேளை பார்த்துவிட்டால் கூட அசடு வழிந்தபடி ஹாய்ய்ய்... என்று வழிந்தபடி சென்று விடுகின்றனர். சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பெல்லாம், திடீரென எங்காவது இரண்டு பேர் பார்த்துக்கொண்டால் கூட, ஹாய், ஹலோ என்று சொல்லிக்கொண்டு கட்டிப்பிடிப்பதும், கை குலுக்குவதும், காதலர்கள் சந்தித்துக்கொண்டால் காற்று கூட ஊடுறுவ முடியாத படிக்கு கட்டிப்பிடித்தும் லிப்லாக் முத்தமிட்டுக்கொண்டும் அக்கம் பக்கத்திலுள்ளவர்களை தெறிக்க விடுவார்கள்.

தமிழர்களின் நாகரீகம்
இன்றைக்கு கண்ணுக்கு தெரியாத ஒரு கொரோனா வைரஸ் கிருமி, யாரையுமே கிட்டத்தில் நெருங்க விடாமல் தெறிக்க விட்டுக்கொண்டிருக்கிறது. பெரிய மனிதர்கள் சந்தித்துக்கொண்டால் கூட, கை குலுக்கி கட்டிப்பிடிக்காமல், மரியாதையையும் நன்றியையும் தெரிவிக்க நம்முடைய தமிழர்களின் நாகரிகமான கை கூப்பி வணக்கம் தெரிவித்துக்கொள்கின்றனர். எங்கே நாம் அவர்களை கட்டிப்பிடித்தாலோ, அல்லது கை குலுக்கினாலோ கொரோனா வைரஸ் நம்மையும் தொற்றிக் கொள்ளுமே என்ற அச்சத்தினாலேயே இப்படி தம்முடைய மரியாதையை பரிமாறிக் கொள்கின்றனர்.

பாதுகாப்பான அணுகுமுறை
உலகத்தையே ஆட்டிப்படைக்கும் அமெரிக்க அதிபரே சமீபத்தில் தன்னை சந்தித்த அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கருக்கு முதலில் தமிழர்களின் மரியாதை முறையான இரு கரம் கூப்பி வணக்கம் தெரிவித்தார். தன்னை சந்திக்கும் நபர்களை கட்டிப்பிடித்து கை நோகும் வரை கைகுலுக்கி வரவேற்பதில் பெயர் பெற்றவர் ட்ரம்ப். அவரே தற்போது கைகூப்பி வணக்கம் தெரிவிக்கிறார். கேட்டால், இது தான் மிக எளிதான பாதுகாப்பான அணுகுமுறை. மேலும் நான் இப்போது தான் இந்தியாவிலிருந்து திரும்பியிருக்கிறேன். அங்கு யாரும் கைகுலுக்குவதில்லை. நானும் கூட அங்கு யாருக்கும் கைகொடுத்து கைகுலுக்கவில்லை. அது மிகவும் நல்ல அணுகுமுறையும் கூட என்று கைகூப்பி வணக்கம் தெரிவிக்கும் முறையை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

முந்திக்கொண்ட இஸ்ரேல் பிரதமர்
ட்ரம்புக்கு முன்பே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தன்னுடைய நாட்டு மக்கள் கை கூப்பி வணக்கம் தெரிவிக்கும் முறையை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அப்படி செய்தால், மக்களிடையே நட்பு மலரும் என்பதோடு, கொரோனா வைரஸ் கிருமியையும் கட்டுப்படுத்தும் என்று சொல்லியிருக்கிறார். அதே போல், ஃபிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லெனைன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், அதிபர் மேக்ரான் கடந்த 2018ஆம் ஆண்டு இந்தியா சென்றபோது அங்கு கண்டறிந்த கலாச்சாரம் வணக்கம் தெரிவிக்கும் பண்பாடு. அந்த பண்பாட்டை நம் நாட்டு மக்கள் அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார், என்று குறிப்பிட்டுள்ளார்.

இளவரசர் சார்லஸின் வணக்கம்
அவரைப் பின்பற்றி இங்கிலாந்து இளவரசர் சார்லஸும் கை கூப்பி வணக்கம் தெரிவிப்பதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளார். லண்டனில் நடந்த இளவரசர் அறக்கட்டளை நடத்திய விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அவர் இரு கரம் கூப்பி வணக்கம் தெரிவித்த மாண்பு அனைவரையும் கவர்ந்துவிட்டது எனலாம்.

தமிழர்களின் பண்பாடு
முன்பெல்லாம் தமிழர்கள் என்றால் காட்டுமிராண்டிகள், நாகரீகம் தெரியாதவர்கள், யாரையும் மதிக்க தெரியாதவர்கள், யாராவது கை கொடுத்தால் திரும்ப கை கொடுக்க மறுத்துவிட்டு இரண்டு கைகைளையும் தூக்கி கும்பிடு போடுகிறார்கள் என்று அவமதித்ததோடு, கேலியும் செய்தனர். ஆனால், அந்த கை கூப்பி வணக்கம் தெரிவிக்கும் முறைதான் உண்மையாக ஒருவருடைய மனதிலிருந்து அன்பையும் மரியாதையையும் எதிரிலிருப்பவருக்கு தெரிவிக்கும் முறை என்பதை உலகுக்கு தெரிவித்து வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது இந்த கொரோனா வைரஸ் கிருமி.

போதி தர்மர்
உண்மையிலேயே, நம்முடைய தமிழகத்தோடும், தமிழ் மக்களோடும், சீன தேசத்திற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கலாச்சார, நாகரீக, வர்த்தகத் தொடர்பு இருந்து வருகிறது என்பது வரலாற்று ஆய்வாளர்களுக்கு நன்கு தெரியும். சீன தேசத்தவர்கள் தான் நம் தமிழர்களின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் மதித்தவர்கள். ஏன், சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு பல்லவ இளவரசரான போதி தர்மன், காஞ்சி மாநகரத்திலிருந்து சீன தேசத்திற்கு சென்று நம்முடைய கலாச்சாரத்தையும், புத்த மதத்தையும், புகழ்பெற்ற ஷாலின் குங்ஃபூ என்னும் தற்காப்பு கலையையும் சீனர்களுக்கு கற்றுத் தந்ததோடு, அங்கேயே சுமார் 150 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தார் என்று சீன வரலாறு தெரிவிக்கிறது. தற்போது கொரோனா வைரஸ் கிருமி மூலம் சீன தேசத்திற்கும் தமிழ் மண்ணுக்கும் மீண்டும் ஒரு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

கை கூப்பி வணக்கம்
நம் தமிழர்களின் இருகரம் கூப்பி வணக்கம் தெரிவிக்கும் முறையை தான் அவர்கள் சற்று மாற்றி, தலையை குணிந்து ஒரு கையை மட்டும் உயர்த்தி நெஞ்சில் வைத்து வணக்கம் தெரிவிக்கும் முறையாக மாற்றிக்கொண்டனர். இரு கரங்களையும் நம் நெஞ்சில் வைத்துக்கொண்டு கை கூப்பி வணக்கம் தெரிவிப்பதால், நம்முடைய இதயத்திற்கும், உடம்பிலும் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இது நம்முடைய உடலில் நேர்மறை ஆற்றலை உடல் முழுவதும் விரைவாக பரப்ப உதவுகிறது. அதோடு, மன அமைதியையும், உடலுக்கு வலிமையையும் தரக்கூடியாதாக அமைகிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கூடவே கோபத்தையும் கட்டுப்படுத்துகிறது.

ஹேட்ஸ் ஆஃப் கொரோனா
எது எப்படியோ, ஒரு கண்ணுக்கு தெரியாத வைரஸ் கிருமி வந்து உலக மக்களுக்கு தமிழர்களின் கலாச்சாரத்தை மதிக்க கற்றுக்கொடுத்துவிட்டது. இப்போதாவது தெரிகிறதே, தமிழன் காட்டுமிராண்டி கிடையாது, நாகரீகம் தெரியாதவன் கிடையாது, பண்பாடு தெரியாதவன். தமிழன் எதை எப்போது செய்தாலும் அறிவியில் பூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் தான் செய்வான் என்பதை உலக மக்கள் இப்போதாவது புரிந்துகொண்டார்களே. அந்த வகையில் தமிழனாக அனைவரும் காலரை உயர்த்திக்கொள்வோம். அதற்காகவாவது கொரோனா வைரஸுக்கு ஒரு ஹேட்ஸ் ஆஃப்.



Click it and Unblock the Notifications











