Latest Updates
-
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா?
சாஸ்திரங்களின் படி உங்களின் அனைத்து கடன் பிரச்சினைகளையும் தீர்க்கும் எளிய பரிகாரம் இதுதான்...!
மது வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் நமது சாஸ்திரங்களில் ஒரு பரிகாரம் இருக்கும். பொதுவாக பரிகாரங்கள் என்பது நம்மை ஆபத்துக்களில் இருந்து பாதுகாக்கும் ஒன்றாக கருதப்படுகிறது.
நமது வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் நமது சாஸ்திரங்களில் ஒரு பரிகாரம் இருக்கும். பொதுவாக பரிகாரங்கள் என்பது நம்மை ஆபத்துக்களில் இருந்து பாதுகாக்கும் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த பரிகாரங்கள் பல தலைமுறைகளாக நமது முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.

பூரண நம்பிக்கையுடன் நீங்கள் செய்யும் சில எளிய பரிகாரங்கள் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பல ஆபத்துக்களில் இருந்து உங்களை பாதுகாக்கும். பிரச்சினை ஏற்படுவதற்கு முன்னரே இந்த பரிகாரங்களை செய்வது உங்களுக்கு பாதுகாப்பையும், நன்மையையும் ஏற்படுத்தும். இந்த பதிவில் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகளை சரி செய்யும் சில எளிய பரிகாரங்களை பார்க்கலாம்.

மகள்
உங்கள் மகள் திருமணம் முடிந்து புகுந்த இல்லத்திற்கு செல்லும்போது ஒரு சிறிய குடத்தில் தண்ணீரை நிரப்பி அதில் மஞ்சள் கொத்துக்களை போட்டு உங்கள் மகளை சுற்றி 7 முறை சுற்றி விட்டு அனுப்பவும். அவரின் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும்.

தேர்வு
உங்கள் வீட்டில் யாராவது முக்கியமான பரிட்சைக்கு செல்வதாக இருந்தால் அவர்கள் மீது சிறிது பாசிப்பருப்பை போடவும். அவர்கள் சென்ற பிறகு அதனை சுத்தம் செய்து வீட்டை விட்டு தூக்கி எறியவும்.

தடைகளை நீக்க
உங்கள் வாழ்க்கையில் நீண்ட நாட்களாக இருக்கும் தடைகளை விலக்க தினமும் பிள்ளயாருக்கு விளக்கேற்றி வழிபடவும். வினை தீர்க்கும் விநாயகன் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து தடைகளையும் நீக்குவார்.

குடும்ப மகிழ்ச்சி
இது சற்று கடினமானதாக இருந்தாலும் உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் வழியாகும். ஞாயிற்று கிழமையன்று ஓர் மண் பானையில் சில எரியும் கரிக்கட்டைகளை எடுத்துக்கொள்ளவும். சில புயூர் இறகுகளை அதில் போடவும். அது புகைய தொடங்கியபின் அதனை உங்கள் வீட்டின் அனைத்து முலைகளுக்கும் எடுத்து செல்லவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலையாக இருக்கும்.

துரோகத்தை தவிர்க்க
உங்களுக்கு நெருக்கமானவர்களே உங்களுக்கு துரோகம் செய்து விடுவார்கள் என்று நீங்கள் பயப்படுகிறீர்களா? இந்த பயத்தை போக்க மஞ்சள் நிற மலரை எடுத்து நன்கு அரைத்து அதனை நெற்றியில் திலகமாக வைத்து கொள்ளுங்கள். இது உங்களை துரோகங்களில் இருந்து பாதுகாக்கும்.

வியாபார வெற்றி
உங்கள் வியாபாரம் நல்லபடியாக இருக்க உங்கள் பணியிடத்தில் ஐந்து எலுமிச்சை பழங்களுடன் சிறிது மிளகு மற்றும் மஞ்சள் கடுகு சேர்த்து வைக்கவும். இதனை ஞாயிற்று கிழமையில் வைக்கவும். அடுத்த நாள் இதனை ஏதாவது ஒரு இடத்திற்கு எடுத்துச்சென்று கொளுத்தி விடவும்.

கடன் பிரச்சினை
உங்கள் கடன் பிரச்சினையை தீர்க்க, ஐந்து ரோஜா மலர்களுடன் 1 1/4 மீட்டர் வெள்ளைத்துணியை எடுத்துக்கொள்ளவும். துணியின் ஒவ்வொரு மூலையிலும் ஒரு ரோஜாவை கட்டிய பிறகு ஐந்தாவது ரோஜாவை நடுவில் வைத்து கட்டவும். இதனை ஒரு புண்ணிய நதியில் தூக்கி எறியவும்.

புது வீடு
நீங்கள் புதிதாக சென்ற வீட்டில் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க விரும்பினால் உங்கள் வீட்டின் மேற்கு மூலையில் 7 மஞ்சள் கட்டிகளை வைக்கவும். இது உங்கள் குடும்பத்தில் அமைதியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்.



Click it and Unblock the Notifications