Latest Updates
-
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன?
22 கிலோ பிளாஸ்டிக் கழிவை விழுங்கி பரிதாபமா உயிரிழந்த கர்ப்பிணி திமிங்கலம்... பார்க்க பாவம் இருக்க
22 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை விழுங்கியதால் உயிரிழந்த கர்ப்பமாக கடல் திமிங்கலம் பற்றிய துக்கமான செய்தியைத் தான் இங்கே உங்களிடம் பகிர்ந்து கொள்ளப் போகிறோம். அதைப் பற்றிய விரிவான தொகுப்பு தான் இது.
கர்ப்பமாக இருந்த மிகப்பெரிய திமிங்கலம் ஒன்று கடலில் நம்மால் கலக்கப்படுகிற பிளாஸ்டிக் கழிவுகளை விழுங்கியதால் பரிதாபமாக இறந்திருக்கிறது.

அப்படி இறந்த திமிங்கலத்தை மீட்டெடுத்து ஆய்வு செய்த போதுதான் தெரிந்தது அந்த திமிங்கலத்தின் வயிற்றுக்குள் கிட்டதட்ட 22 கிலோ அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது தெரிந்து வெளியே அகற்றப்பட்டிருக்கிறது. அது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

மத்தியத் தரைகடல்
மத்திய தரைகடல் பகுதியில் மாசுபாடு அதிகரித்துவிட்டது. அதனால் ஏராளமான பிரச்சினைகள் உண்டாவதற்கான நமக்கான எச்சரிக்கையாகத் தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகள் கட்டுக்கடங்காமல் கடல் பகுதியில் கலந்து விட்டது. அது மத்திய தரைகடல் பகுதியில் மட்டுமல்ல, உலக கடற்கரைப் பகுதிகள் முழுவதும் இந்த நிலையில் தான் இருக்கிறது.

26 அடி திமிங்கலம்
சிறிய அளவு மீன் பிளாஸ்டிக்கை விழுங்கி இறக்கவில்லை. நீங்கள் நன்கு யோசித்துப் பார்க்க வேண்டும். இறந்தது கிட்டதட்ட 26 அடி அளவுக்கு நீளமுடைய மாபெரும் ராட்சத திமிங்கலம்.

வயிற்றுக்குள்
எதனால் இந்த ராட்சத திமிங்கலம் இறந்தது எ்னறு சுாதனை செய்த போது அதனுடைய வயிற்றில் ஏராளமான பிளாஸ்டிக்குகள் கிடைத்திருக்கின்றன. வெறும் பிளாஸ்டிக் பைகள் மட்டுமல்லாது எலக்ட்ரிகல் வயர்கள், பிளாஸ்டிக் தட்டுக்கள், ஷாப்பிங் செல்லும்போது வாங்கி வரும் பைகள், மீன் வலைகள், சோப்பு டப்பாக்கள் போன்ற பல்வேறு வகையான பிளாஸ்டிக் கழிவுகள் அந்த திமிங்கலத்தின் வயிற்றுக்குள் இருந்திருக்கின்றன.

கரை ஒதுங்கியது
மத்திய தரைக்கடல் பகுதயில் வடக்கு கடற்கரை ஓரமாக மிக பிரமாண்டமான ராட்சத திமிங்கலம். அது இறந்து போய் கரை ஒதுங்கியிருந்தது. கடல் தான் திமிங்கலம், டால்பின் போன்ற உயிரினங்களுக்கு சொர்க்கம். அந்த சொர்க்கத்தையே அவர்களுக்கான நரகமாக நாம் மாற்றி விட்டோம்.

அச்சுறுத்தலாகிவிட்ட கடல்
சமீப ஆண்டுகளாக கடல் பகுதிகளின் வாழ்க்கை பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஆய்வுகளும் அதைத் தான் சொல்கின்றன. அதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆசிய மற்றும் ஐரோப்பிய கடற்பகுதிகளில் அடிக்கடி கடல் வாழ் உயிரினங்கள் பிளாஸ்டிக் கழிவுகளாலும் மாசுபாட்டினாலும் செத்து கரை ஒதுங்குகிறது. இதை அடிப்படையாக வைத்து தான் ஆராய்ச்சியாளர்களால் எச்சரிக்கை விடப்படுகிறது.



Click it and Unblock the Notifications
