Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
ஆசை ஆசையாய் இப்படி முகத்தை மாற்றிக்கொண்ட மனிதன்... காரணம் தெரிஞ்சா சிரிப்பீங்க...
மண்டையோட்டு மீதான ஆசையால் தன்னை மாற்றிக் கொண்ட விநோத மனிதர் பற்றிய தொகுப்பு தான் இது.
சினிமா பார்ப்பது அவனுக்கு விருப்பம்' என்பதற்கும் 'அவன் ஒரு சினிமா பைத்தியம்' என்பதற்கும் என்ன வேறுபாடு? அளவுக்கு அதிகமான விருப்பம் என்பதை பைத்தியம் என்றே உலகம் அழைக்கிறது.

விமர்சனங்கள் எழுந்தாலும் கலாகா, மண்டையோட்டு மீதான மையலை விட்டுவிடவில்லை. இன்னும் சில அறுவை சிகிச்சைகளை செய்துகொள்ள இருப்பதாக கூறும் அவர், இந்த மாற்றம் மண்டையோடு போன்று தோற்றமளிக்க வேண்டும் என்ற அவரது கனவு நனவாவதற்கான முயற்சிதான் என்கிறார்.

வித்தியாசமான விருப்பம்
அமெரிக்காவில் கொலம்பியாவை சேர்ந்த இருபத்திரண்டு வயது வாலிபனின் பெயர் கலாகா ஸ்கல். டாட்டூ என்னும் பச்சை குத்துதலை தொழிலாக செய்பவன். சிறுவயதிலிருந்தே அவனுக்கு மண்டையோடுகள் என்றால் அதிக விருப்பம்; அதாவது பைத்தியம்! ஆகவே, தன் முகத்தையும் மண்டையோடு போல் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று விரும்பினான்.

தடுத்த தாய்
கலாகாவின் தாயாருக்கு அவனது விருப்பம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஆகவே, மண்டையோடு போன்று தோற்றமளிப்பதற்காக அவன் செய்த முயற்சிகளை அவர் தடுத்துவிட்டார். கலாகாவின் விருப்பம் நிறைவேற காலம் கனிந்தது. ஆம், அவன் தாயார் மரணமடைந்தார். தாய் இறந்ததும் தன் விருப்பத்தை நிறைவேற்ற தீர்மானித்தான் கலாகா ஸ்கல்.

மூக்கு போனது; காதும் அறுந்தது
மண்டையோடு போன்ற தோற்றம் வருவதற்காக பல்வேறு அறுவை சிகிச்சைகளுக்கு கலாகா உள்பட வேண்டியது நேர்ந்தது. மண்டையோட்டுக்கு மூக்கு இருக்காது. ஆகவே, அவர் தன் மூக்கின் கீழ்ப்பகுதியை அறுவைசிகிச்சை மூலம் நீக்கிக்கொண்டார். மண்டையோட்டுக்கு காது மடல்களும் இருக்காது. ஆகவே, தன் காது மடல்களின் பெரும்பகுதியையும் அறுவைசிகிச்சை மூலம் எடுத்து விட்டார். நாக்கினை பிளந்ததோடு, நாவில் நீல மற்றும் சாம்பல் வண்ணத்தில் பச்சை குத்திக் கொண்டார்.

கண்களிலும் தாடையிலும் குழி
கலாகா ஸ்கல், தன் கண்களைச் சுற்றிலும் கறுப்பு நிற குழி இருப்பதுபோன்றும், மேல் மற்றும் கீழ்த்தாடைகளுக்கு இடையே குழி இருப்பதுபோன்றும் பச்சை குத்திக்கொண்டார். பற்கள் பெரிதாக இருப்பதுபோன்றும் டாட்டூ வரைந்தார்.

ஊடக வெளிச்சம்
கொலம்பியாவில் விருப்பப்பட்டு மூக்கையும் காதையும் வெட்டிக்கொண்ட முதல் நபர் கலாகாதான்! ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவே கலாகா இப்படிச் செய்ததாக கூறப்படுகிறது. கலாகாவின் ஆர்வத்தை புரிந்து கொள்ளாத பலர் அவரது செயலை விமர்சித்துள்ளனர்.
கனவு பயணம் தொடர்கிறது
விமர்சனங்கள் எழுந்தாலும் கலாகா, மண்டையோட்டு மீதான மையலை விட்டுவிடவில்லை. இன்னும் சில அறுவை சிகிச்சைகளை செய்துகொள்ள இருப்பதாக கூறும் அவர், இந்த மாற்றம் மண்டையோடு போன்று தோற்றமளிக்க வேண்டும் என்ற அவரது கனவு நனவாவதற்கான முயற்சிதான் என்கிறார்.



Click it and Unblock the Notifications