Latest Updates
-
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...!
சனிபகவானிடம் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை என்ன தெரியுமா?
இறந்த பிறகு செய்த தவறுகளுக்கு தண்டனை கொடுக்கும் பணியை எப்படி எமதர்மன் செய்கிறாரோ அதேபோல வாழும்போதே செய்த தவறுகளுக்கு தண்டனை கொடுக்கும் பணியை சனிபகவான் செய்து வருகிறார். நம்முடைய சில குணங்கள் நம்மை சன
இந்து கடவுள்களில் மிகவும் முக்கியமானவராகவும், கோபக்காரராகவும் கருதப்படுபவர் சனிபகவான். இவரின் கோரப்பார்வைக்கு பயப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சூரிய பகவானின் மகனான சனி பகவான் சிவபெருமானின் தீவிர பக்தன் ஆவார். அவரின் தூய்மையான பக்திதான் அவருக்கு சிவபெருமானின் அருள் மூலம் இவ்வளவு சக்திகளை பெற்று தந்தது.

இறந்த பிறகு செய்த தவறுகளுக்கு தண்டனை கொடுக்கும் பணியை எப்படி எமதர்மன் செய்கிறாரோ அதேபோல வாழும்போதே செய்த தவறுகளுக்கு தண்டனை கொடுக்கும் பணியை சனிபகவான் செய்து வருகிறார். தவறே செய்யாமல் இருப்பது என்பது மனிதர்களால் இயலாத ஒன்று, ஆனால் நம்முடைய சில குணங்கள் நம்மை சனிபகவானின் கோபப்பார்வையிலிருந்து பாதுகாக்கும். எப்படிப்பட்ட குணங்கள் சனிபகவானின் கருணைப்பார்வையை உங்கள் பக்கம் திருப்பும் என்பதை இங்கு பார்க்கலாம்.

சனிபகவான்
நாம் அனைவரும் நினைப்பது போல சனிபகவான் தீமைகளை மட்டுமே வழங்கக்கூடிய கடவுள் அல்ல. பல நன்மைகளை வழங்கக்கூடியவர். அவர் வழங்கும் தண்டனை என்பது நமது கர்மபலன்களை பொறுத்ததே. அவரிடம் இருந்து அருளையும், கருணையையும் எதிர்பார்ப்போமேயானால் அதற்கு நம்மிடம் சில தகுதிகள் இருக்க வேண்டும். அந்த தகுதிகள் இருப்பவர்களை சனிபகவான் சோதிக்கமால் விடுவது மட்டுமின்றி அவர்கள் வாழ்க்கையில் உயரவும் அருள்புரிவார்.

தூய்மை
சுத்தம் உள்ள இடத்தில்தான் செல்வம் பெருகும். சனிபகவான் நம்மிடம் விரும்புவதும் அதைத்தான். நம் அன்றாட வாழ்வில் சுத்தத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம். காலையில் எழுவதில் தொடங்கி, குளிப்பது, சாப்பிடுவது வீடு மற்றும் பணியிடங்களை சுத்தமாக வைத்துக்கொள்வது என அனைத்திலும் சுத்தத்தை கடைபிடிக்க வேண்டும். சுத்தம் இல்லாத இடத்தில்தான் சனிபகவான் தன் கோபப்பார்வையை வீசுவார்.

உழைப்பு
தான் ஆசைப்பட்டது கிடைக்க வேண்டுமெனில் அதற்கு கடினமாக உழைக்க வேண்டும். உழைப்பவர்களுக்கு மட்டுமே சரியான நேரத்தில் உதவிகளும், வாய்ப்புகளும் கிடைக்கும். சோம்பேறித்தனத்தை சனிபகவான் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார். உழைக்க நீங்கள் தயாராக இருந்தால் அதற்கேற்ற பலனை தர சனிபகவான் தயாராக இருப்பார்.

நேர்மை
இன்று மிகவும் அரிதான குணமாகிவிட்ட ஒன்று நேர்மையாக இருத்தல். இந்த காலகட்டத்தில் நேர்மையாக இருப்பது ஒன்றும் அவ்வளவு எளிதானதல்ல. ஆனால் அவ்வாறு இருக்கும்போது அதற்கு கிடைக்கும் பலன்களே தனிதான். உண்மையை பேசுபவர்களுக்கு சனிபகவான் எப்பொழுதும் துணையிருப்பார். உண்மையை பேசும்போது உங்களுக்குள் எழும் நிம்மதி மற்றும் அமைதி நீங்கள் பொய் சொல்லி சொகுசாய் வாழ்ந்தாலும் கிடைக்காது.

பொறுமை
சனிபகவான் நமது பொறுமையை சோதிக்க பல சோதனைகளை வழங்குவார். உங்களுடைய விடாமுயற்சியை தொடர்ந்து மீதி பாரத்தை சனிபகவானிடம் விட்டுவிடுங்கள். பொறுமையாக விடாமுயற்சியுடன் இருக்கும்போது சரியான நேரத்தில் உங்களுக்கான பலனை சனிபகவான் வழங்குவார்.

உண்மையை எதிர்கொள்ளுதல்
சனிபகவான் நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதையும், அதற்கு காரணம் யார் என்பதையும் உங்களுக்கு உணர்த்துவார். அந்த உண்மையை நேரடியாக சந்தித்து எதிர்கொள்ள வேண்டும், அதை தவிர்த்து அந்த சூழ்நிலையில் இருந்து தப்பிக்கும் செயல்களை செய்யக்கூடாது. உண்மையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதே வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் வழியாகும்.

நல்ல செயல்கள்
சனிபகவான் பிறர் மீது இரக்கப்படுபவர்களையும், மற்றவர்களுக்கு உதவி செய்பவர்களையும் அதிகம் விரும்புவார். இயலாதவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் உதவி செய்வதை விட சனிபகவானை கவரும் எளிய வழி எதுவும் இல்லை. பிறரை மதிக்காமலோ, தீய செயல்களில் ஈடுபட்டாலோ சனிபகவான் தரப்போகும் துன்பங்களை சந்திக்க தயாராக இருங்கள்.

ஒழுக்கம்
அனைத்திற்கும் மேலாக நம்மிடம் இருக்கவேண்டிய ஒரு அடிப்படை தகுதி ஒழுக்கம். ஒழுக்கம் இல்லாதவர்கள் சனிபகவானின் அருளை பெற முயற்சிப்பதே வீண். தனிமனித ஒழுக்கத்திலிருந்து சமூகத்தில் ஒழுக்கத்துடன் வாழ்வது வரை அனைத்துமே உங்களின் வளமான வாழ்க்கைக்கு முக்கியம்தான்.

சனிபகவானால் ஏற்படும் சோதனைகள்
சனிபகவான் உங்களை சோதிக்க வேண்டுமென சோதித்துவிட்டால் உங்களை அனைத்து வழிகளிலும் துன்பத்திற்கு உள்ளாக்குவார். குடும்பத்தில் சண்டை, சோம்பேறித்தனம், பணியிடங்களில் பிரச்சினை, வாழ்க்கையில் அமைதியின்மை, மனஅழுத்தம், படிப்பில் கவனம் குறைதல், கடன் தொல்லை என நீங்கள் வாழும் வாழ்க்கையே நரகமாகிவிடும்.

சனிபகவான் வழங்கும் நன்மைகள்
சனிபகவானின் கருணை பார்வைக்கு தேவையான தகுதிகள் உங்களுக்கு இருப்பின் நீங்கள் பெறப்போகும் பலன்கள் எண்ணற்றவை. அதிர்ஷடம், பதவி உயர்வு, புத்திகூர்மை, கற்பனைத்திறன், கடன் தொல்லையிலிருந்து விடுதலை என உங்களுக்கு சகல நன்மைகளையும் வழங்கக்கூடியவர் சனிபகவான்.

எப்படி வணங்க வேண்டும்?
சனிபகவானை வணங்க வேண்டிய முக்கிய நாள் சனிக்கிழமை ஆகும். எனவே சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள் விளக்கேற்றி " ஓம் ஷங் சனீஸ்வராய நமக " என்னும் மந்திரத்தை கூறி வழிபடவும். சனிக்கிழமைகளில் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்கவும், ஆஞ்சநேயரை வழிபடவும், சனிக்கிழமைகளில் கருப்பு அல்லது அடர் நீல நிற ஆடைகளை அணியவும், சனிக்கிழமைகளில் காகத்திற்கு அன்னமிடவும்.



Click it and Unblock the Notifications











