நிர்வாணப் படத்தை கேட்டு தொந்தரவு செய்தவரை அதிர வைத்த படம்!

Posted By: Staff
Subscribe to Boldsky

மொபைல் போன் பழக்கம் அதிகரித்து வரும் நேரத்தில் இந்த விஷயம் உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். மொபைல் போனை ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு பயன்படுத்துமாறு சொன்னாலும் பலரும், அதனை தவறான நோக்கத்துடன் பயன்படுத்துகிறார்கள்.

இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களாகத்தான் இருக்கிறார்கள். எங்கிருந்தோ எண்களை பெற்றுக் கொண்டு அல்லது, உடன் பழகிய நபர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் மிகவும் தைரியமாக நிர்வாணப்படங்களை கொடுக்குமாறு கேட்டு தொந்தரவு செய்வார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வர்புறுத்தல் :

வர்புறுத்தல் :

நாமும் நிர்பந்தம் காரணமாகவும் வர்புறுத்தல் காரணமாகவும் சுயசிந்தனை இன்றி நிர்வாணப்படங்களை அனுப்பி வைக்க அதுவே நமக்கு எமனாய் வந்து நிற்கும். எந்த நேரத்திலும் யார் கேட்டாலும் உங்களின் அந்தரங்க படங்கள் உங்கள் மொபைல் போனில் எடுப்பதை தவிர்த்திடுங்கள். மாறாக வர்புறுத்திக் கேட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

குழந்தைகள் பாதுகாப்பு :

குழந்தைகள் பாதுகாப்பு :

கனடா சென்ட்டர் ஃபார் சைல்ட் ப்ரோடெக்‌ஷன் என்ற அமைப்பு ஒரு யோசனையை முன் வைக்கிறார்கள். இதில் பெரும்பாலும் சிக்குவது இளவயது குழந்தைகள் தான்.

குழந்தைகள் இந்த வலையில் வீழ்ந்து விடாமல் தவிர்க்கவே இந்த யோசனை முன் வைக்கப்பட்டிருக்கிறது.

Image Courtesy

என்ன செய்ய வேண்டும்? :

என்ன செய்ய வேண்டும்? :

உங்களிடம் யாராவது நியூட் பிக்சர் அனுப்பச் சொல்லி கேட்டால் உங்களுடைய படங்களை அனுப்பாமல் இந்தப் படத்தை அனுப்புங்கள் என்று சொல்லி நேக்குடு ரேட் படத்தை அனுப்புச் சொல்லியிருக்கிறார்கள்.

Image Courtesy

என்ன விலங்கு ? :

என்ன விலங்கு ? :

Heterocephalus glaber எனப்படுகிற அந்த எலி பார்க்க இளம் பிங்க் நிறத்தில் சுருக்கங்கள் கொண்ட தோலுடன் இருக்கும். இரண்டு நீளமான பற்கள் இருக்கும்.

Image Courtesy

கழிவுகள் :

கழிவுகள் :

இந்த விலங்கு தன்னுடைய கழிவையே உணவாக உட்கொள்ளும். கனடாவில் இந்த விலங்கு அதிகமிருக்கும்.

Image Courtesy

காரணம் :

காரணம் :

ஒருவரின் நிர்வாணப் படம் கேட்பதற்கு தங்களுடைய நிர்வாணத்தை முதலில் பார்த்துக் கொள்ளுங்கள். அதோடு இன்னொருவரின் நிர்வாணம் பார்க்க வேண்டும் என்பது கீழ்த்தரமான செயல் என்பதை உணர்த்தவே தன் கழிவுகளையே உணவாக உட்கொள்ளும் விலங்கின் படம் அனுப்பப்படுகிறது.

இன்னொரு காரணம் :

இன்னொரு காரணம் :

இந்த விலங்கு பார்ப்பதற்கு ஆண்களின் பிறப்புறுப்பு போல தோற்றமளிக்கிறது. அதோடு இந்த விலங்கில் நீண்டு இருக்கும் பற்கள் கூர்மையானதாக இருக்கிறது. இப்படி உங்களைடைய நிர்வாணப் படங்களை அனுப்பினால் அவை உங்கள் வாழ்க்கையையே குலைத்து விடும் என்பதையும் உணர்த்துகிறதாம்.

குழந்தைகள் :

குழந்தைகள் :

தற்போது இளவயதினரைத் தாண்டி குழந்தைகள் பலரும் இதில் சிக்குகிறார்கள். இங்கே பாலியல் தொடர்பான விழிப்புணர்வு குறைவு என்பதால் இந்த விஷயத்தை எப்படி கையாள வேண்டும், எப்படி ஆரம்பத்திலேயே தவிர்ப்பது போன்ற எந்த அடிப்படையுமே குழந்தைகளுக்கு தெரிவதில்லை.

Image Courtesy

எதிர்காலம் :

எதிர்காலம் :

அதோடு யாரோ சிலர் சில நாட்கள் நண்பர்களாக பழகிவிட்டவர்களிடம் எப்படி விடாப்பிடியாக முடியாது என்று சொல்வது என்று யோசித்து இப்படியான மொபைல் செக்ஸ்டிங்கில் சிக்கி விடுகிறார்கள்.

யாராக இருந்தாலும் சரி, உங்களுக்கு என சில கட்டுப்பாடுகளை வகுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக உங்களது அந்தரங்க படங்களை எக்காரணம் கொண்டும் வெளியிட மாட்டோம் என்று உறுதி ஏற்றிடுங்கள்.

பதட்டம் வேண்டாம் :

பதட்டம் வேண்டாம் :

சில நேரங்களில் உங்களுடைய படத்தை மார்பிங் செய்து தவறாக சித்தரித்து வெளியிட்டிருந்தால் உடனடியாக பெரும் தவறு இழைத்ததாக வருந்த வேண்டாம். இது ஒரு பிரச்சனையே கிடையாது என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

இதனால் நீங்கள் எமோஷனலாக முடிவெடுக்கவும் வாய்ப்புண்டு. நிதானமாக இருந்தால் மட்டுமே நீங்கள் சிந்திக்க முடியும். மேற்கொண்டு என்ன செய்வது என்று யோசிக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

what happens when you sent naked picture

what happens when you sent naked picture
Story first published: Thursday, January 11, 2018, 15:39 [IST]