Latest Updates
-
கள்ளக்காதலில் ஈடுபட அதிக வாய்ப்புள்ள 4 ராசிகள் இவங்கதான்... இவங்ககிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருங்க...! -
காரசாரமான.. ஹைதராபாதி சிக்கன் கிரேவி - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நல்ல நேரம் தேடிவருமாம்...! -
வார ராசிபலன் (22 March 2026-28 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்.. -
Tamil Nadu Election 2026: பாரம்பரிய தமிழ் உணவுகளை உட்கொள்ளும் தமிழகத் தலைவர்கள்! -
முட்டையும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
கோடையில் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா தெரியணுமா? அப்ப பப்பாளியை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு தொழிலில் டபுள் லாபம் கிடைக்கும்... -
இந்த ரசத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. உடல் கொழுப்பும், எடையும் சர்ர்-ன்னு குறையும்.. -
Ramzan Eid 2026: ரம்ஜான் பிரியாணி சாப்பிட்டு அஜீரண கோளாறு வரக்கூடாதா? அப்ப இத ஒரு டம்ளர் குடிங்க போதும்..
இந்த வாரம் முழுக்க இந்த ராசிகளுக்கு ஒரே பணமழை தான் போங்க...
வார ராசிபலன்கள் 14.5.18 to 20.5.18 இந்த ஒரு வாரத்துக்கு 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படியிருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி 14.5.18 முதல் 20.5.18 வரையிலும் ஒரு வாரத்துக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்
இந்த வாரம் உங்களுடைய உழைப்புக்கு ஏற்ற பலன்களையும் புகழையும் கட்டாயம் பெறுவீர்கள். தொழிலில் புதிய முதலீடுகளைச் செய்யலாமா என்பதில் தீவிரமான ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். நீங்கள் பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளுடைய ஆதரவுகள் கிடைக்கும். அதேசமயம் உடன் பணிபுரியும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். செய்யும் வேலைகளில் கொஞ்சம் கவனமாக இருங்கள். அதேசமயம் வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்ளும்போது, கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கொஞ்சம் பின்தங்கிய நிலையே காணப்படும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து பண உதவிகள் கிடைக்கும். பெற்றோர்களின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும். வழக்குகளில் சாதகமான சூழல்கள் உண்டாகும். போட்டிகளில் வெற்றி உண்டாகும். ஆனால் சற்று காலதாமதமாகும். வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டு வந்தால், சகல செல்வங்களும் உங்களுக்கு வந்து சேரும்.

ரிஷபம்
பூர்வீக சொத்துக்களில் இதுவரை இருந்துவந்த, இடர்பாடுகள் அத்தனையும் காணாமல் போகும் வாரம் இது. தொழிலில் நீங்கள் கடைபிடித்த புதிய யுக்தி உங்களுக்கு கைகொடுக்கும். அதன்மூலம் அமோக லாபத்தையும் பெறுவீர்கள். தொழில்துறை மற்றும் மற்ற துறைகளில் பிரபலமாக இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். வீட்டில் உள்ள பெரியோர்களின் முழு ஆசிர்வாதத்தையும் பெறுவீர்கள். வீட்டில் மட்டுமல்லாது, வெளியிடங்களிலும் உங்களுடைய மதிப்புகள் உயரும். உங்களுடய ஒட்டுமொத்த திறமைகளையும் வெளிப்படுத்துவதற்கான சூழல்கள் உணடாகும். உடன் பிறந்தவர்களால் நன்மைகள் உண்டாகும். பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்
உடன் பிறந்தவர்களுடன் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். தொழிலில் பல புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சேமிப்புகள் கிடுகிடுவென உயரும் வாரம் இது. பெற்றோர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடப்பதற்கான சூழல்கள் வந்து குடும்பத்தை குதூகலப்படுத்தும். புதிய நபர்களின் நட்புக்கள் கிடைக்கப்பெற்றதால் மகிழ்ச்சி அடைவீர்கள். பேச்சுத்திறமையால், லாபம் உண்டாகும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையேயான நெருக்கம் மேலும் அதிகரிக்கும். யாரிடம் பேசினால் உங்களுடைய சாதுர்யமான பேச்சுத்திறனால், வெற்றி பெறுவதுடன் எதிராளிகளின் மனங்களையும் கவர்ந்துவிடுவீர்கள். செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானை வழிபட்டு வந்தால் வெற்றிமேல் வெற்றி வந்து சேரும்.

கடகம்
தொழிலில் உங்களுக்குச் சாதகமான சூழல் உண்டாகும் வாரம் இது. வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது அவசியம். டிஜிட்டல் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொண்டால், ஆதாயம் உண்டாகும். தொழிலில் புதிதாக ஏதும் முயற்சிக்க வேண்டாம். உடல் சம்பந்தமாக இருந்து வந்த உபாதைகள் தீரும். பயணங்களால், மாற்றங்கள் உண்டாகும் காலம் இது. செல்வாக்கும் தன்னம்பிக்கையும் உயரும் காலகட்டம் இது. நவகிரக சனி பகவானை வழிபட்டு வாருங்கள். நன்மைகள் பெருகும்.

சிம்மம்
உங்களுடைய அபார நினைவாற்றலால் பல நன்மைகள் நடக்கப்போகும் வாரம் இது. உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஏராளமான மாற்றங்கள் அவர்குளுடைய கல்விச் சூழல்களில் உண்டாகும். விவாதத் திறமையால், லாபங்கள் உண்டாகும். புதிய நட்புகளால் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் இதுவரை இருந்துவந்த சிறுசிறு குழப்பங்கள் நீங்கி, மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். நண்பர்களுடன் பார்ட்டி, கொண்டாட்டம் என்று மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபடுவீர்கள். உறவினர்களிடம் உங்களுடைய மதிப்பு கணிசமாக உயர ஆரம்பிக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். ஆன்மிகப் பயணங்களுக்கு திட்டமிடுவீர்கள். எதை செய்வதற்கு முன்பும் ஒருமுறை யோசித்து செயல்படுவது நல்லது. விநாயகரை வழிபட்டு வாருங்கள். மனதில் உள்ள குழப்பங்கள் தீரும்.

கன்னி
எந்த வேலையை செய்தாலும் கவனமாக செய்யுங்கள். உடற்பயிற்சி, ஜிம் என்று பாடி பிட்னஸில் கவனம் செலுத்துவீர்கள். தொழிலில் புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். போட்டிகளில் யார் வந்தாலும் பட்டையைக் கிளப்பி வெற்றி பெறுவீர்கள். உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். மனதில் சிறுசிறு குழப்பங்கள் வந்து போகும். யோகா, தியானங்களில் ஈடுபடுங்கள். சமூக சேவைகளில் மனம் லயித்துப் போவீர்கள். புதிய வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் ஓரளவுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டாகும். புதன்கிழமைகளிலி பெருமாளை வழிபடுங்கள். வீட்டில் செல்வம் பெருகும்.

துலாம்
வீட்டில் உடன் பிறந்தவர்களால் தேவையில்லாத விரயச் செலவுகள் உண்டாகும். அதேசமயம் வீட்டில் பொருள் மற்றும் ஆபரணச் சேர்க்கையும் உண்டாகும். வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு அனுகூலமான செய்திகள் வந்து சேரும். உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வீட்டில் உள்ள சிலரின் உடல் நலம் பாதிக்கப்பட்டு, அதற்கான மருத்துவ செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். பணியிடங்களில் சுமூகமாக செல்ல வேண்டியிருக்கும். சுயதொழிலில் ஈடுபடுபவர்கள் முதலீட்டில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். பணச்சிக்கல் தீர்ந்து உயர் அதிகாரிகளின் ஆதரவையும் பெறுவீர்கள். சிவனை வழிபட்டு வந்தால், சிக்கல்கள் தீரும்.

விருச்சிகம்
ஆன்மிக பயணங்கள் மற்றும் சொற்பொழிவுகள் மூலம் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். தொய்வடைந்திருந்த வீடு கட்டும் வேலையை மீண்டும் புதிய உற்சாகத்துடன் தொடங்குவீர்கள். சேமிப்புகள் கிடுகிடுவென உயரும். மனதில் இதுவரை இருந்துவந்த கவலைகள் நீங்கி, மகிழ்ச்சி அதிகரிக்கும். பிறருக்கு உதவுவதன் மூலம் மனம் மகி்ழ்ச்சி அடையும். புதிய விஷயங்களில் ஈடுபடுவீர்கள். உயர் அதிகாரிகளிடம் இருந்து நீங்கள் என்ன கேட்டாலும் உங்களுக்கு பச்சை கொடி தான். துர்க்கையை வழிபடுங்க்ள. மகிழ்ச்சிக்குப் பஞ்சமே இருக்காது.

தனுசு
உங்களுடைய பேச்சுத்திறனால் வெளி உலகத்தால் பாராட்டப்படுவீர்கள். புதிய பங்குதாரர்களால் தொழிலில் புதிய ஒரு பங்குதாரர்களால் நன்மைகள் உண்டாகும் தொழில் விருத்தி அடையும். உங்களுடைய தொழில் நுணுக்கத்தைக் கண்டு ஆச்சர்யப்பட்டு போட்டியாளர்களும் பாராட்டுவார்கள். உங்கள் திறமைகளுக்கான அங்கீகாரம் கிடைக்கப்பெறுவீர்கள். எதிர்பார்த்த இடங்களில் இருந்து வரும் பண உதவியால் லாபம் உண்டாகும். சக ஊழியர்களிடம் சிறிது நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். எந்த பொருளைக் கையாண்டாலும் கவனத்துடன் கையாளுதல் வேண்டும். தொழிலில் மந்த நிலை உண்டாகலாம். அதை சரிசெய்ய சூரிய பகவானை வழிபடுங்கள்.

மகரம்
தந்தையின் ஆதரவால் தொழிலில் மேன்மை உண்டாகும். பணியில் நேர்மைக்கான அங்கீகாரம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான உதவிகள் கிடைக்கும். தூரத்து உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். தேவையான வசதி, வாய்ப்புகள் பெருகும். செயல்களில் இருநு்த தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். எதிர்பாராத பழைய பாக்கிகள் வசூலாகும். தொழிலுக்கு கூட்டாளிகளின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்கும். போட்டியில் வெற்றி உண்டாகும். சிவன், பார்வதி வழிபாடு மேற்கொள்வது நன்மை பயக்கும்.

கும்பம்
உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் தோன்றும் குழப்பமான எண்ணங்களால் தெளிவான முடிவெடுக்க காலதாமதமாகும். கணவன், மனைவிக்கிடையே சிறுசிறு பிரச்னைகள் தோன்றி மறையும். நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொருளாதாரம் மேன்மையடையும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். தொழிலில் ஆதரவுகள் பெருகும். திறமைகள் வெளிப்படும். ஆஞ்சநேயர் வழிபாடு வெற்றியை தரும்.

மீனம்
இளைய உடன்பிறப்புகளால் நன்மை உண்டாகும். வீட்டு விவாகரங்களில் இதுவரை இருந்த சிக்கல்கள் தீரும்.எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். அரசியல் பிரமுகர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளுடைய ஆதரவு கிட்டும். பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே பொறுமையை கடைபிடிப்பது வீண் சண்டைகளைத் தவிர்க்கும். விலையுயர்ந்த பொருள்களைக் கையாளும்போது கவனம் தேவை. பக்கத்து வீட்டாரிடம் தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்க்கவும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். சாய்பாபாவை வழிபடுங்கள். அனுகூலங்கள் உண்டாகும்.



Click it and Unblock the Notifications











