சீதக்காதியும் கிழவன் சேதுபதியும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை!

Posted By:
Subscribe to Boldsky

சீதக்காதி. விஜய்சேதுபதி நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம். விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு சீதக்காதி திரைப்படத்தி ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. வெளியான அடுத்த நொடியிலிருந்து பயங்கர ட்ரெண்டாகியிருக்கிறது சீதக்காதி ஃபர்ஸ்ட் லுக்.

ப்ளாக் அண்ட் வொயிட்டில் நீளமான ஜிப்பாவுடன் தலையெல்லாம் நடைத்திருக்க, டார்க் ப்ரேம் கிளாஸ் என பக்கா 80களின் பிறந்தவரின் சாயல் இருக்கிறது. அதுவும் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு கையில் ஒரு புத்தகத்துடன் தீர்க்கமான பார்வையை வீசியபடி உட்கார்ந்திருக்கிறார் விஜய் சேதுபதி. அவரது தோற்றமும் தோரணையும் அப்படியே ஸ்ட்ரிக்ட் இந்தியன் தாத்தாவை நினைவுப்படுத்துகிறார்.

vijay sethupathi seethakathi Story
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இந்தியன் தாத்தா :

இந்தியன் தாத்தா :

இதில் ஹைலைட் என்ன தெரியுமா? விஜய் சேதுபதி 75 வயது ஆளாக நடிக்கிறார். சட்டென பார்க்கும் போது விஜய் சேதுபதி என்றே அடையாளம் தெரியவில்லை சிலர் எழுத்தாளர் அசோக மித்ரன் சாயல் என்கிறார்கள், சிலர் இந்தியன் தாத்தா சாயல் என்கிறார்கள் இன்னும் சிலரோ மறைந்த வில்லன் நடிகர் ரகுவரனைப் போல இருக்கிறது என்கிறார்கள். எது எப்படியோ மேக்கப் மேன் தன் வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.

யார் மேக்கப் ? :

யார் மேக்கப் ? :

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதிக்கு மேக்கப் மேனாக Greg Cannom என்பவரை நியமித்திருக்கிறார்கள். இவர் சிறந்த மேக்கப்பிற்காக மூன்று முறை ஆஸ்கார் விருது வென்றிருக்கிறார்.

Image Courtesy

75வயது :

75வயது :

இந்தப் படத்தில் 75 வயது கேரக்டரில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. அதற்காக அவரது தோற்றம் எப்படியிருக்கும் என்பதை பாகுபலியில் பணியாற்றிய விஸ்வநாத் சுந்தரம் வரைந்து கொடுக்க அதை கச்சிதமாக மேக்கப்பில் கொண்டு வந்திருக்கிறார் Greg Cannom.

Image Courtesy

யார் இந்த சீதக்காதி :

யார் இந்த சீதக்காதி :

சீதக்காதி என்ற பெயரை.... வரலாற்றிலோ அல்லது சொல்வடையாகவோ கேள்விப்பட்டிருப்போம். பதினாறாம் நூற்றாண்டில் பிறந்த இவர் மிகப்பெரிய வள்ளலாக திகழ்ந்திருக்கிறார். கீழக்கரையில் பெரியதம்பி மரைக்காயருக்கும், முகம்மது பாத்திமாவுக்கும் பிறந்த இவரது இயற்பெயர் செய்கு அப்துல் காதி.

Image Courtesy

முன்னோர்கள் :

முன்னோர்கள் :

சீதக்காதியின் முன்னோர்கள் கப்பல்களில் வெளிநாடுகளுக்குச் சென்று வணிகம் செய்த மரக்கலராயர் மரபைச் சேர்ந்தவர்கள். செல்வம் நிறைந்த அவர்கள் கீழக்கரையின் நிர்வாகத் தலைமையாளர்களாக விளங்கினார்கள். முன்னோர்கள் வழியில் சீதக்காதியும் வணிகத்தில் ஈடுபட்டு சாதனை படைத்தார். அக்காலத்தில் வணிகம் செய்துவந்த ஆங்கிலேயர்களுடன் நெருங்கிய தொடர்புகொண்டிருந்தார். அவர்களுக்குத் தேவையான மிளகு, அரிசி வினியோகத்தை முழுஅளவில் இவரே செய்துவந்தார்.

Image Courtesy

கலை இலக்கியம் :

கலை இலக்கியம் :

வியாபாரம் மட்டுமல்ல கலை இலக்கிய பணிகளிலும் சீதக்காதி சிறந்து விளங்கினார். கீழக்கரையில் பதினான்கு பள்ளிவாசல் கட்டியிருக்கிறார். இதில் ஜும்மா மசூதி மிகவும் பெயர் பெற்றது. உள்ளே பள்ளிவாசல் முழுவதும் 1200க்கும் மேற்பட்ட பூக்கள் கற்களில் செதுக்கப்பட்டிருக்கிறது.வியத்தகு சிற்ப வேலைப்பாடுகளை கொண்டிருக்கிறது.

Image Courtesy

நண்பன் சேதுபதி :

நண்பன் சேதுபதி :

ராமநாதபுரத்தைச் ஆண்ட விஜய ரகுநாத தேவர் சீதக்காதியின் நெருங்கிய நண்பராக இருந்தார். இந்த விஜய ரகுநாத தேவருக்கு இருக்கிற இன்னொரு பெயர் என்ன தெரியுமா? கிழவன் சேதுபதி! இப்போது விஜய் சேதுபதியின் சீதக்காதி பட டைட்டில் புரிந்திருக்குமே....

கிழவன் சேதுபதியின் இறப்பிற்குப்பிறகு ராமநாதபுரத்தின் ஆட்சியாளராக வந்தவர் விஜய ரகுநாத சேதுபதி.

சரி, வரலாற்றுக்குள் செல்வோம். கிழவன் சேதுபதிக்கு ஆலோசனை வழங்குவதில் முதன்மையானவராக விளங்கினார் சீதக்காதி. மசூதி மட்டுமல்ல அரண்மனை, கோவில் புதுப்பிக்க என தொடர்ந்து பல உதவிகளை செய்திருக்கிறார்.

Image Courtesy

பஞ்சம் :

பஞ்சம் :

ஒரு சமயம் திடீரென்று பயங்கர பஞ்சம் தலைவிரித்தாடியது. மக்களுக்கு ஒரு வேளை உணவு கூட கிடைக்காத சூழல் அப்போது சீதக்காதி தான் எல்லா மக்களையும் பசியாறு வைத்திருக்கிறார். தான் சேர்த்த செல்வத்தை அனைத்தையுமே இப்படி தானமாகவே வழங்கினார் சீதக்காதி.

கலையையும், இலக்கியத்தையும் போற்றிப் பாதுகாக்கும் வகையில் புலவர்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்திருக்கிறார்.

Image Courtesy

கொடுத்தே தீருவேன் :

கொடுத்தே தீருவேன் :

பதினேழாம் நூற்றாண்டில் ஏற்பட்ட அந்த கொடிய பஞ்சத்தில் ஏராளமானோர் இறந்தனர். பலரும் பிழைப்புக்காக வேறு ஊர்களை நோக்கி படையெடுத்தனர். இதைத் தடுக்க வள்ளல் சீதக்காதி பல இடங்களிலிருந்து உணவுப் பொருட்களை வரவழைத்து மக்களுக்கு வழங்கினார்.

ஆனால் மிகவும் பின் தங்கியிருக்கும் மக்கள் ஏழ்மையில் இருப்பவர்கள் நேரில் சென்று பொருள் கேட்க தயங்கி நின்று கொண்டிருந்தனர். அதனைப் பார்த்த சீதக்காதிக்கு ஓர் யோசனை வந்தது .

Image Courtesy

ஆமணக்கு :

ஆமணக்கு :

கீழக்கரையை ஒட்டி ஆமணக்கு செடி அடந்து இருந்த காடு ஒன்று இருந்திருக்கிறது. தினமும் அங்கு சென்றவருக்கு ஆமணக்கு செடியின் தோற்றத்தைப் பார்த்ததும், அது ஒரு மனிதன் தன் ஐந்து விரல்களை விரித்து நிற்பது போலத் தோன்றவே தான் கொண்டு வந்திருந்த பொற்காசை அந்த இலையில் வைத்தார். அப்போது அங்கிருந்த மக்கள் சென்று அந்த தங்க நாணையத்தை எடுத்துக் கொண்டனர்.

பின்னர் ஒவ்வொரு நாளும் சீதக்காதி எப்போது வருவார், என்று மக்கள் காத்திருந்து தங்க நாணையத்தை எடுத்து பஞ்சத்திலிருந்து மீண்டனர். இப்படி கேட்பவர்களிடம் மட்டுமல்ல கேட்காதவருக்கும் தேடிப் போய் உதவிகள் செய்வதில் சீதக்காதி சிறந்து விளங்கினார்.

Image Courtesy

 இறுதி நாள் :

இறுதி நாள் :

சீதக்காதி தனக்கு இறுதி நாள் நெருங்குவதை உணர்ந்தார். தன் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த புலவர் படிக்காசுத் தம்பிரான் வருவார், அவரிடம் இந்த மோதிரத்தை கொடுத்து விடுங்கள் என்று இறக்கும் தருவாயிலும் கூட தானமாக வழங்க வேண்டியதைப் பற்றியே சிந்தித்தார் சீதக்காதி.

சொன்னது போலவே சில தினங்களில் சீதக்காதி மறைந்திட அவரது சடங்கு சம்பிரதாயங்களுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Image Courtesy

மோதிரம் :

மோதிரம் :

சில காலங்கள் கழித்து சீதக்காதியிடம் உதவி பெற எண்ணி புலவர் படிக்காசுத் தம்பிரான் வருகிறார். சீதக்காதி இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு பெரும் துயரம் கொள்கிறார். இறந்த துக்கம் தாங்காமல் சமாதிக்குச் சென்று அழுது புலம்புகிறார்.

புலவர்களுக்கு பொருளுதவி செய்த சீதக்காதி மறைந்து விட்டதால் இனி நாங்கள் பிழைக்கவே முடியாது என்று அழுத புலம்ப, அப்போது அவரது குடும்பத்தினர் சீதக்காதி கொடுக்கச் சொன்ன மோதிரத்தை கொடுக்கிறார்கள்.

 செத்தும் கொடுத்தான் சீதக்காதி :

செத்தும் கொடுத்தான் சீதக்காதி :

சீதக்காதியே இதனை அணிந்து கொள்ளச் சொன்னது போல உணர்ந்து குடும்பத்தார் வழங்கிய மோதிரத்தை அணிந்து கொண்டார் புலவர் படிக்காசுத் தம்பிரான். அப்போது தம்பிரான் இந்த கொடையை அற்புதமான பாடலாக பாடுகிறார்.

‘கற்பக கையால் நம் பாட்டைக் கேட்டு

கனிந்து அளித்திட்ட இம்மோதிரமானது,

தமிழ்ப்பாட்டின் சுவையொன்றும் அறியாத

அற்பரிடம் சென்று தா எனக் கை நீட்டிக் கேட்காதே... '

Image Courtesy

விளக்கம் :

விளக்கம் :

புலவர்களின் திறமையரிந்து அவரது பாடலுக்கு பொன்னும் பொருளும் வாரி வழங்கிய சீதக்காதி அளித்திட்ட இந்த மோதிரம் என்ன சேதி சொல்கிறது தெரியுமா? தமிழ் மொழியின் சுவையறியாத அற்பமானவர்களிடம் புலவர்கள் யாசகம் கேட்டு நிற்கக்கூடாது, என்பதை அவர் உணர்த்துகிறார்.

இறக்கும் போது கூட, என்னிடம் உதவி வேண்டி ஒரு புலவன் வருவன் அவன் வேறு யாரிடமும் யாசகம் பெறும் நிலை வந்து விடக்கூடாது. இந்த விலையுயர்ந்த மோதிரத்தை கொடுங்கள் என்று சொல்லிச் சென்றிருக்கிறார்.

இதனால் தான் சீதக்காதியை செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்று புகழ்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync, pulse
English summary

vijay sethupathi seethakathi Story

vijay sethupathi seethakathi Story
Story first published: Tuesday, January 16, 2018, 11:33 [IST]
Subscribe Newsletter