For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

போர் நிகழ்வதற்கு முன்னால் சிரியா எப்படியிருந்தது தெரியுமா?

சிரியாவைப் பற்றி இதுவரை கேள்விப்படாத தகவல்கள்

|

சிரியா.... இன்றைய காலத்தில் கொத்து கொத்தாக மக்கள் மடிந்து கொண்டிருக்கும் ஓர் நரகம் என்றே சிரியாவைக் குறிப்பிடலாம். மதத்தாலும், இனத்தாலும்,பணத்தாலும்,அதிகாரத்தாலும் தனித்தானியாக பிரிந்து ஒவ்வொருவரும் தங்களது கையே ஓங்கியிருக்க வேண்டும் என்று சொல்லில் ஒருவர் மாற்றி ஒருவர் போட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

போட்டி அவர்களுக்குள் நடந்தாலும், அங்கே செத்து மடிவது என்னவோ அப்பாவி பொதுமக்கள் தான், சமீபத்தில் அங்கே ரசாயன குண்டு வீசப்பட்டு பச்சிளம் குழந்தைகள் கொத்து கொத்தாக மரணித்தார்கள், அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சிரியாவில் என்ன நடக்கிறது, ஏன் ஒரே நாளில் இத்தனை குழந்தைகள் இறந்தார்கள், ஏன் அங்கே மட்டும் போர் என்பது ஓயாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று நம் கவனம் சிரியாவின் பக்கம் திருப்ப இத்தனை குழந்தைகளின் மரணச் செய்தி தேவைப்பட்டிருக்கிறது.

சிரியா என்றாலே போர்களமும், மரண ஓலமும் தான் கேட்டுக் கொண்டிருக்கிறது, காலங்காலமாக இதே நிலைமையில் இருக்கிறதா என்ன? இல்லை.... சிரியாவைப் பற்றி இதுவரை அறிந்திராத சுவாரஸ்யத் தகவல்கள். இந்தக் கட்டுரையில் சிரியாவின் இன்னொரு முகத்தை கண்டடைவீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

மனித நாகரிகத்தின் முன்னோடி என்று கூட சிரியாவைக் குறிப்பிடலாம். சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிரிய நாகரீகம் தோன்றியிருக்கிறது. சிரியாவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட நகரம் எப்லா. இங்கிருந்து கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு மெஸபொட்டாமியாவில் வாழ்ந்த மக்களைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.

Image Courtesy

#2

#2

சிரியாவை எகிப்தியர்கள், ஆஸ்ரியன்ஸ், சால்தென்ஸ்,பெர்சியன்ஸ்,மாசிடோனியன்ஸ் மற்றும் ரோமானியர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். கலீலீ கடலின் எல்லையில் அமைந்திருக்கும் மலையை இஸ்ரேல் 1967 ஆம் ஆண்டு நடைப்பெற்ற போரில் கைப்பற்றியது.

Image Courtesy

#3

#3

அதன் பிறகு 1973 ஆம் ஆண்டு நடைப்பெற்ற போரில் சிரியா அதன் பாதியைத் தான் கைப்பற்ற முடிந்தது. தங்களது மலையை,இஸ்ரேலிடம் இருக்கிற தங்கள் பாதி மலையை மீட்க வேண்டும் என்பது இன்றைக்கும் சிரிய ஆட்சியாளர்களின் கனவாக இருக்கிறது.

ஒரே மலை பாதி சிரியாவிற்கும் பாதி இஸ்ரேலுக்கும் பிரிந்து விட்டது. அங்கே எப்போது வேண்டுமானாலும் போர் நடக்கலாம் என்ற சூழல் அப்போது ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதி மக்கள் பேசிக் கொள்ளவென்று உருவாக்கப்பட்டது தான் சவுட்டிங் வேலி. ஸ்பீக்கரைப் பயன்படுத்தி எல்லை தாண்டியிருக்கும் தங்கள் உறவினர்களிடம் பேசிக் கொள்கிறார்கள்.

Image Courtesy

#4

#4

சிரிய மக்களின் விருப்ப உணவு ப்ருக்லி. கோதுமையால் தயாரிக்கப்பட்ட இந்த உணவு பெரும்பாலும் இரவுகளில் சாப்பிடப்படுகிறது. அதே போல கிபெக் என்ற உணவையும் அதிகம் சாப்பிடுகிறார்கள். ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது தங்களது வரவேற்பினை அல்லது மகிழ்ச்சியை வலது கையை மார்பில் வைத்து ஆத்மார்த்தமாக..... என்ற அர்த்தத்தில் வரவேற்கிறார்கள்.

Image Courtesy

#5

#5

சிரியாவின் டமாஸ்கஸ் நகரம் தான் கைத்தறி செய்வதற்கும் ஆடைகளை நெய்வதற்கும் பெயர் போன நகரமாக இருக்கிறது. அங்கே ஆரம்ப காலத்தில் இருந்த ஆண்டிக் முறையை பயன்படுத்தி துணியை நெய்கிறார்கள். அதனால் அங்கிருந்து தயாரிக்கப்படும் துணிகளுக்கும் நகரத்தின் பெயரையே வைத்திருக்கிறார்கள்.

Image Courtesy

#6

#6

சிரியாவில் ஓடுகிற யூரோப்ரேட்ஸ் என்ற நதி மிக முக்கியமான நதியாக கருதப்படுகிறது. சிரியாவின் கிழக்குப் பகுதியில் இந்த நதி ஓடுகிறது. கிட்டத்தட்ட பதினைந்து மாநிலங்களைக் கடந்து இந்த நதி ஓடுவதினால் சிரிய நாகரிகத்தின் தொட்டில் என்றே இந்த நதியை அழைக்கிறார்கள்.

Image Courtesy

#7

#7

சிரியாவில் இயற்கையாவே கிடைக்கக்கூடிய ஒரு பொருள் என்றால் அது பெட்ரோலியம் பொருட்கள் தான். 1974லிருந்து அதனை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தார்கள். அங்கே 1940களில் ஜெப்சா என்ற நகரத்திலிருந்து இயற்கை எரிவாயுவையும் கண்டுபிடித்திருந்தார்கள்.

Image Courtesy

 #8

#8

பொதுக்கூட்டங்கள் அல்லது மேடைகளில் அதிபர் ஆசாத்தின் பெயர் குறிப்பிடும் போதெல்லாம் கைதட்ட வேண்டும். எழுதப்படாத சட்டமாகவே இதனை கடைபிடிக்கிறார்கள். உலகின் முதல் கொலை சிரியாவில் தான் நடைப்பெற்றது என்ற பேச்சும் இருக்கிறது.

Image Courtesy

#9

#9

ஆதாம் மற்றும் ஏவாளின் மகன்களான கெயின் மற்றும் ஏபில் ஆகியோருக்கிடையில் சண்டை ஏற்பட்டு தனது சகோதரன் மீது ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக கெயின் ஏபிலை கொன்றான். இது தான் உலகின் முதல் கொலை என்று சொல்லப்படுகிறது.

Image Courtesy

#10

#10

சிரியாவும் இஸ்ரேலும் பயங்கர எதிரிகள், எந்த அளவுக்கு என்றால் உங்களிடம் இஸ்ரேல் செல்வதற்கான விசா இருந்தால் நீங்கள் சிரியா பக்கம் செல்லவே முடியாது. சிரியாவில் இருக்கும் உகாரிட் என்ற நகரத்தில் தான் ஆங்கில எழுத்துக்கள் தோன்றியிருக்கும் என்று எண்ணப்படுகிறது.

Image Courtesy

#11

#11

கிட்டதட்ட 23 மில்லியன் மக்கள் வரை சிரியாவில் வசித்திருந்தார்கள். இவர்களில் 74 சதவீதம் பேர் சன்னி முஸ்லீம்கள் 12 சதவீதம் பேர் அலாவிட்ஸ், இவர்கள் ஷியா முஸ்லீம்களின் ஒரு பகுதியாகும். மன்னர் ஆசாத் ஆலாவிட் இனத்தை சேர்ந்தவர் என்பதால் அங்கே சிறுபான்மையினராக இருக்கும் ஆலாவிட்ஸ் தான் ஆதிக்கம் செலுத்திவருகிறார்கள்.

இங்கே பத்து சதவீத மக்கள் கிறிஸ்துவத்தை பின்பற்றி வருகிறார்கள். அதை விட குறைவான கூட்டமொன்று ட்ரூஸ் இனத்தை சார்ந்ததாக இருக்கிறது.

Image Courtesy

 #12

#12

பழங்காலத்திலிருந்து அதாவது கிமு 6000 ஆண்டிலிருந்து இந்த நூற்றாண்டு வரை முற்றிலும் அழிந்திடாமல் தொடர்ந்து மக்களால் வாழ்ந்து,பயன்படுத்தப்பட்டு வந்த நகரங்களில் முக்கியமான நகரம் அலெப்போ.

ஆரம்ப நாட்களில் சீனாவிலிருந்து பட்டாடை அறிமுகப்படுத்தும் போது இந்த வழியைத் தான் பின்பற்றியிருக்கிறார்கள். வணிகத்திற்கான முக்கிய வழித்தடமாக அலெப்போ இருந்திருக்கிறது.

Image Courtesy

#13

#13

2001ஆம் ஆண்டு மே மாதம் போப் இரண்டாம் ஜான் பால் சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் இருக்கக்கூடிய உமயாட் பள்ளிவாசலுக்கு சென்றார். கிறிஸ்துவத்தின் தலைவராக கருத்தப்படும் போப் பள்ளிவாசலுக்கு செல்வது அதுவே முதன் முறை.

Image Courtesy

#14

#14

ஒட்டோமான் அரசாட்சியின் கீழ் தான் நான்கு நூற்றாண்டுகளாக இருந்திருக்கிறது பிரஞ்சு ஆணை 1920 ஆம் ஆண்டு நடந்தது, அதன் பிறகு 1946 ஏப்ரல் 17 அன்று பிரஞ்சிடமிருந்து சுதந்திரம் பெற்றது சிரியா.

சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில் உற்பத்தி செய்யப்படுகிற கத்திகளுக்கு உலகம் முழுவதிலுமிருந்தே வரவேற்பு அதிகம். கத்தியைத் தவிர, போர்கருவிகளையும் தயாரிக்க பயன்படுகிறார்கள்.

Image Courtesy

#15

#15

2000 ஆம் ஆண்டு சிரியாவின் பிரதம மந்திரியாக இருந்த மொஹமத் ஜுவாபி ஊழல் வழக்கிறாக போலீசார் தன்னை கைது செய்ய வருகிறார்கள் என்பதை அறிந்து தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதேபோல, 2005 ஆம் ஆண்டு காஸி கான் என்பவர், இவரும் சிரியாவின் அமைச்சர் பொறுப்பில் இருந்தவர் காரணங்கள் ஏதும் தெரியப்படுத்தாமலேயே தற்கொலை செய்து கொண்டார்.

#16

#16

டமாஸ்கஸில் இருக்கும் உம்மய்யட் மசூதி உலகிலேயே மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய மசூதியாகும்.இஸ்லாம் மதத்தினரை பொறுத்தவரையில் அவர்களின் நான்காவது புனித ஸ்தலம் இந்த மசூதி .

உலகிலேயே போற்றி பாதுகாக்கப்பட்ட முக்கியமான அரண்மனைகளில் ஒன்று க்ராக் டெஸ் செவாலியரஸ். இதனை 1142லிருந்து 1271 வரை கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 2006 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு இந்த அரண்மைனையை உலக பாரம்பரிய இடமாக அங்கீகரித்தது.

Image Courtesy

 #17

#17

அலப்போ நகரத்தின் மிக முக்கியமான அம்சமே நகரின் மத்தியில் இருக்கக்கூடிய கோட்டை. வடக்கு சிரியாவின் மிகப் பழமையான நகரம் அலெப்போ. இங்கே தான் உலகின் மிகப் பழமையான மற்றும் பெரிய அரண்மனைகள் எல்லாம் இருந்திருக்கிறது.

1986 ஆம் ஆண்டே இங்கிருந்த கோட்டையை உலகின் பாரம்பரிய பகுதி என யுனெஸ்கோ அறிவித்தது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Unknown Facts About Syria

Unknown Facts About Syria
Story first published: Monday, March 5, 2018, 17:19 [IST]
Desktop Bottom Promotion