Latest Updates
-
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா?
திருநீறுக்கு பதிலாக தங்கத்தை பிரசாதமாக தரும் கோவில்... அட நம்ம ஊர்லதாங்க இருக்கு...
மகாலட்சுமி அருளால் கிடைக்கும் கோவில் பிரசாதமான தங்கத்தை மக்கள் யாரும் விற்பதில்லை.
கோவில் என்றாலே நம்முடைய நினைவுக்கு முதலில் வருவது அது எந்த மதத்துக்குக் கடவுளின் கோவில் என்பது தான்.

அதைத்தாண்டி, நமக்கு ஞாபகம் வருவது அந்த கோவிலின் அமைப்பு, அங்கு கொடுக்கப்படும் பிரசாதமும் தான். என்னங்க! இப்பதான் நம்ம விஷயத்துக்கே வந்துருக்கோமா? ஆமாங்க கோவிலுக்குப் போனா பிரசாதம் தொனே நமக்கு ரொம்ப முக்கியம்.

பிரசாதம்
சில கோவில்களில் திருநீறு, பூக்கள், அம்மன் கோவிலாக இருந்தால், மஞ்சள், குங்குமம் ஆகியவையும் கொடுப்பார்கள். பெருமாள் கோவிலில் துளசியை பிரசாதமாகக் கொடுப்பார்கள். அதைத்தாண்டி, சாப்பிடுவதற்கான கொடுக்கப்படும் பிரசாதங்களும் உண்டு. அவை அவ்வப்போது மாறும். அதாவது லட்டு, புளியோதரை, லெமன் சாதம், பொங்கல், பருப்பு கூழ், சுண்டல் இப்படி என்னவெல்லாமோ கொடுப்பார்கள்.

தங்கக் காசுகள்
என்னென்னவோ பிரசாதங்கள் கொடுத்து வாங்கியிருப்போம். ஆனால் எந்த கோவிலிலாவது தங்கக் காசுகளை பிரசாதமாகக் கொடுப்பதைப் பார்த்திருக்கிறோமா? இல்லை. நாம் தான் நேர்த்திக் கடன் என்ற பெயரில் தங்கத்தை கடவுளுக்குப் படைப்போம். கேள்விதான் பட்டிருக்கிறோமா?... ஆனால் அப்படி ஒரு இடமும் உண்டு. ஆம். சொன்னால் நம்ப மாட்டீங்க. அந்த கோவிலும் கூட நம்முடைய இந்தியாவில் தான் இருக்கிறது.

எங்கு இருக்கிறது?
இந்த அற்புதக் கோவிலானது, மகாராஷ்டிர மாநிலத்தின் வடமேற்கு பகுதியில் தான் இந்த கோவில் அமைந்துள்ளது. அதாவது ரத்லம் என்னும் ரத்னபுரி பகுதியில் தான் இக்கோவில் இருக்கிறது.

என்ன கடவுள்?
இந்த ரேத்னபுரி கோவிலுக்குள் உறைந்திருக்கும் கடவுள் எது தெரியுமா? நமக்கு வளங்களை அள்ளித் தருகின்ற லட்சுமி தேவியின் கோவில்தான் அது. இங்குள்ள மகாலட்சுமியின் அருகில் அந்த கோவிலுக்குள் நுழைந்துவிட்டு வரும் ஒவ்வொருவருக்குமே கிடைக்கிறது.

வறுமை போக்க
வெறுமனே இங்கு வருபவர்களுக்கு பக்திக்காக மட்டும் தங்கம் பிரசாதமாகக் கொடுப்பது இல்லை. இங்கு வருகுின்ற ஏழைகள், தங்களுடைய வறுமையைப் போக்கிக் கொள்வதற்காகவே முக்கியமாக இங்கு வருகின்றவர்களுக்கு தங்கக் காசுகள் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன.

காணிக்கை
இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள், குறிப்பாக வசதி படைத்தவர்கள் தாங்கள் செலுத்துகின்ற காணிக்கையைப் பணமாகச் செலுத்துவதில்லை. காணிக்கை செலுத்த நினைப்பவர்கள் தங்களால் இயன்ற அளவு தங்கம் அல்லது வெள்ளியை காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.

தங்கக்குவியல்
பொதுவாக நாம் கோவிலுக்கு செலுத்துகின்ற பணம், தங்கம், வெள்ளி ஆகிய அத்தனையும் கோவில் நிர்வாகத்துக்கும் அரசுக்கும் கோவில் திருப்பணிகளுக்கும் பயன்படுத்தப்படுவது தான் வழக்கம். ஆனால் இந்த கோவிலைப் பொருத்தவரையில், பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்துகின்ற அத்தனை தங்கமும் வெள்ளியும் பெரிய மலை போல குவித்து வைக்கப்பட்டிருக்கும்.

தீபாவளி பரிசு
இந்த மலை போல குவிக்கப்படும் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களை, வருடத்தின் முக்கியப் பண்டிகையாக இந்தியாவில் கொண்டாடப்படுகிற தீபாவளியன்று கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக அந்த தங்கம் மற்றும் வெள்ளி கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டு தீபாவளியன்று மட்டும் தான் தங்கம் பிரசாதமாக வழங்கப்படும். தினமும் வழங்கப்படும் வழக்கம் இங்கு கிடையாது.

விற்பது இல்லை
இங்கு பிரசாதமாக தங்கம் கிடைத்துவிட்டால், வாழ்க்கையில் பணக்கஷ்டம், வறுமை என அத்தனையும் தீர்ந்து மகாலட்சுமியே தங்களுடைய வீடுகளுக்குள் நுழைவதாகவே பக்தர்கள் கருதுகிறார்கள். இந்த தங்கக் காசை இறைவனின் அருளாக பாவிப்பதால், அதை யாரிடமும் கொடுப்பதோ விற்பதோ கிடையாது.



Click it and Unblock the Notifications